பிரதமர் நரேந்திரமோடி நேற்று நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சக அமைச்சர்களுக்குத் தெளிவான அறிவுரைகள் சிலவற்றைத் தெரிவித்திருக்கிறார். முக்கியமாக அமைச்சர்கள் காலை 9.30 மணிக்கே அலுவலகம் வந்துவிட வேண்டும், கீழே பணியாற்றுகிறவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். வீட்டில் இருந்து வேலை செய்யக் கூடாது என்பதில் கண்டிப்புக் காட்டியிருக்கிறார். இதெல்லாம் ஒரு செய்தியா என்று கேட்கிறீர்களா? ஆமாம்! நிச்சயமாக! திமு கழகமும் காங்கிரசும் கூட்டணிதர்மத்தில் இணைந்து ஐமு கூட்டணிக்குழப்பம் இரண்டு வெர்ஷன்களிலும் அமைச்சர்கள் மீது மன்மோகன்சிங்குக்கு எந்தவித கண்ட்ரோலும் இல்லாமல் இருந்தது, அமைச்சர்கள் எப்படி ஆடினார்கள் என்பதெல்லாம் ஞாபகம் இருக்குமானால், இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தியே!
பங்க்சுவாலிட்டி பற்றி மட்டும் இல்லை, அமைச்சர்களுக்குத் தெளிவாக என்னென்னவெல்லாம் மோடி சொன்னார் என்பதை மேலே லிங்கில் முழுதாகத் தெரிந்து கொள்ளலாம்.
இதுவும் இன்றைக்கு ஊடகங்களில் வெளியான ஏட்டிக்குப் போட்டியான செய்தி!
கன்யாஸ்த்ரீகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்ட பிஷப் பிரான்கோ முலாக்கல் அரசியல் செல்வாக்குடன் கொக்கரிக்கிற மாதிரி KK சுபாஷ் வரைந்த கார்டூன் இது. கேரள லலித் கலா அகாடெமி விருதையும் பெற்றது. ஆனால் பாதிரிமார்கள் விடுவார்களா? இடதுமுன்னணி அரசைக் கண்டனம் செய்தவுடன் கேரள அரசின் தயவுடன் நடக்கும் கேரள லலித் கலா அகாடெமி விருதை வாபஸ் வாங்கி விட்டது. கார்டூனில் ஆட்சேபகரமாக அப்படி என்னதான் இருக்கிறதாம்?
கொக்கரிக்கிற சேவலாக பிஷப் பிரான்கோ முலாக்கல், அவரைத் தூக்கிப் பிடிப்பவராக கேரள MLA பிசி ஜார்ஜ், அவருடன் சேர்ந்து போலீசும் தாங்கிப்பிடிப்பதாக, பாலியல் சீண்டல் புகார் பிஷப் மீது கொடுத்த கன்யாஸ்த்ரீகள் தெறித்து ஓடுவதாக, கூடவே நக்கலாக விசுவாசம் ரட்சிக்கும் என்ற வாசகம் வேறு! இந்த நல்ல .மேய்ப்பனுடைய குச்சியில் பெண் உள்ளாடை தொங்குகிற மாதிரி வேறு! போதாதா? கத்தோலிக்க பிஷப்மார் கவுன்சில் பொங்கி எழுந்துவிட்டார்களாம்! பிணரயி விஜயன் அரசு தலையைத் தொங்கப்போட்டு சில்மிஷம் செய்த பாதிரிமாருக்குப் பணிந்து விட்டதோ என்ற கேள்வி நேற்று முழுக்க உலாவிக் கொண்டிருந்தது ஏட்டிக்குப்போட்டியான சங்கதி.
குமுதம் வார இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கும் பாட்டாளி பதில்கள் என்ற புதிய பகுதி இந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் வெளியான வினா - விடைகள் இதோ....என்கிறார் மருத்துவர் ராமதாசு.
படமே செய்தியும்! ஏட்டிக்குப் போட்டியுமாக! எப்படியென்று கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன்!
போகன் சங்கர் சொல்லியிருப்பது செய்தியுமல்ல! ஏட்டிக்குப் போட்டியும் அல்ல! ஏடாகூடம்!
மீண்டும் சந்திப்போம்.
நீங்க என்ன.... இராமதாஸ் அவர்களின் பதிலில் குற்றம் காண்கிறீர்கள்? அவர் உண்மையைத்தானே சொல்லியிருக்கார். இராமதாஸ்தானே அவரிடம் உள்ள சொத்துக்களில் முதன்மையானது. அதனால்தானே கல்லூரி, தோட்டங்கள் முதற்கொண்டு 'இராமதாஸ்' அவர்களிடம் இருக்கிறது (கட்சியை முன்னிறுத்தி வாங்கியவை)..
ReplyDeleteநெல்லை! யோசித்து ஒரு விஷயத்தைச் சட்டென்று சொல்லிவிட்டீர்கள்! இன்னும் யோசித்து என்னென்ன வருகிறதென்று பார்க்கக் காத்திருக்கிறேன்! :_)))
Delete