நமக்குத் தொழில் எழுத்து! அதுவும் அரசியலும் விமரிசனமுமாக!

இங்கே அரசியல் விவகாரங்களைத் தொட்டு நடப்பு நிலவரம் எப்படியிருக்கிறது என்று விமரிசனப்பதிவுகளாக எழுதி வருவதில் பெரிய சிக்கலே,அந்த நடப்பு நிலவரம் என்பது உடனுக்குடன் மாறக்கூடியது. எழுதும்போதே expiry நேரமும் சேர்ந்தே வருவது தான்! ஆனால் நான் ஒரு அரசியல் பிராணி என்பதால், நமக்குத் தொழில் எழுத்து, அதுவும் அரசியலும் விமரிசனமுமாக மட்டுமே எழுத வருகிறது. வேறெதுவுமே தெரியாது என்றில்லை! சினிமாப்பைத்தியத்தோடு இப்போது Netflix Hulu amazon என்று மெகா சீரியல் பித்தும் சேர்ந்து கொண்டிருக்கிறதே, அதைப்பற்றி எல்லாம் எழுதத் தோன்றுவதே இல்லையே என்று என்னை நானே சுயபரிசோதனை செய்துகொள்வதும் அவ்வப்போது நடப்பது தான்! 


இங்கே blow hot blow cold என்று இந்திய அமெரிக்க உறவுகள் கொள்ளவும் முடியாது தள்ளவும் முடியாது ரேஞ்சிலேயே போய்க் கொண்டிருப்பதைக் குறித்த ஒரு விவாதம்! கரண் தாப்பர் கொஞ்சம் தரவுகளோடு கேள்வி கேட்கிறவர். மோடி என்று வந்துவிட்டால் ஒருவித உள்நோக்கமும் கலந்தே வரும் என்பதை முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.


வெட்டி வீம்பு, வீண் பிடிவாதம், வெறிபிடித்துக் கூச்சல், மிரட்டல்கள் என்று கிறுக்கத்தனத்தின் உச்சத்துக்கே போய்விட்ட மம்தா  பானெர்ஜி  நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பது வேலைநிறுத்தத்தைத் தீவீரப்படுத்தி வரும் மருத்துவர்கள் கோரிக்கை! நடக்கிற விஷயம்தானா? 

CONgress கட்சித்தலைவர் பொறுப்பை ஏற்க கேரள மாநில காங்கிரஸ் ஆசாமிகள் வேணுகோபாலும் ஏகே அந்தோணியும் மறுத்துவிட்டதாக, இதையும் ஒருசெய்தியாக இந்து தமிழ் திசை ரொம்பவும் விசனப்பட்டுச் சொல்கிறது. அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?!😌😝   

ஆனால் இந்தச் செய்தியை ஒரு கார்டூன் சொல்கிறமாதிரி வருமா? வருமா!


இந்தச்செய்தி வருவதற்கு முன்னால் வரையப்பட்ட கார்டூன் தான்! ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினான்  என்றொரு  நாகேஷ் காமெடி நினைவுக்கு வருகிறதா? இன்னொரு கார்டூன் ராகுல் வெர்ஷனில்!


இந்தப்பிள்ளையின் அசட்டுத்தனத்தை இத்தாலிய மம்மி வேண்டுமானால் சகித்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்த தேசமும் கட்டிச்சுமக்கவேண்டிய அவசியமில்லையே!

எதுபொருளோ அதைப்பேசுவோம்! #3

மீண்டும் சந்திப்போம்.
  
  

8 comments:

 1. >>> இந்தப்பிள்ளையின் அசட்டுத்தனத்தை இத்தாலிய மம்மி வேண்டுமானால் சகித்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்த தேசமும் கட்டிச் சுமக்கவேண்டிய அவசியமில்லையே!.. <<<

  உண்மை தானே1... சிந்திக்க முடிந்தவர்கள் சிந்தித்துக் கொள்ளட்டும்...

  ReplyDelete
  Replies
  1. டில்லி பாதுஷாக்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருக்கிற சோனியாG வாரிசுகளை அண்டிப்பிழைக்கிற கூட்டத்துக்கு அது முதலில் புரியவேண்டுமே துரை செல்வராஜூ சார்!

   Delete
 2. first things first... how others are able to comment in tamil ?
  Regarding Dr Strike... is it not true that there are negligence in the treatments that too in govt hospitals... anything has been done on that ... do doctors have a moral value... in another news , Appollo hospitals were trying to protect a sexual offender and even described the patient as mentally unstable... even though i do not support violence... but apathy is there and every where but mamatha things that she is the nxt jaya .... so she will try and throw dictums like this.
  also i visited one of your earlier blogs about mohan lazarus ... it says that account associated with the vdo is closed... what does that means

  and thanks for replying to my comment.. it is good to have an interaction with your readers

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சரவணன்! தமிழில் எழுதுவது இப்போதெல்லாம் வெகு சுலபம்! google indic tamil உங்கள் browser இலேயே aad on செய்து கொள்ளுங்கள்! அங்கே phonetic அடிப்படையில் டைப் செய்தால் தமிழ்வடிவம் கிடைக்கும். அதைபின்னூட்டமாகக் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்!

   மருத்துவர்கள் வேலைநிறுத்தம் மற்ற சூழ்நிலைகளில் கொஞ்சம் அதீதமானதுதான்! ஆனால் மேற்கு வங்கத்தில் நிலவும் அபத்தமான அரசியல் சூழ்நிலையில், அதைத்தவறென்றும் சொல்லிவிட முடியாது. ஒரு 75 வயது முஸ்லிம் நோயாளி சிகிட்சை பலனின்றி இருந்து போகிறார். டாக்டர்கள் அலட்சியத்தால்தான் இறந்தார் என்று நோயாளியின் உறவினர்கள் ஜூனியர் டாக்டர்களைத்தாக்கியதில் ஒருடாக்டர்குக்குக் கண் போயிற்று இன்னொரு டாக்டருக்கு கோமா. ஜூனியர் டாக்டர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று வேலைநிறுத்தம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். தேர்தல் தோல்வியில் எங்கே பார்த்தாலும் பிஜேபியாகத் தெரிவதில் மிரளும் மம்தா பானெர்ஜி இதை பிஜேபி சதியாகவேபார்க்கிறார். முஸ்லிம்களுக்கு வைத்தியம் பார்க்கக்கூடாதென்று பிஜேபி தூண்டிவிடுகிறதென்று பிரச்சினையை வேறுபக்கம் திருப்புகிறார். வங்காளத்தில் இடதுசாரிகள் ஆரம்பித்துவைத்த அடிதடி அராஜகம் மம்தா காலத்தில் இன்னும் அதிக உச்சத்துக்கு வந்து நிற்கிறது.

   அப்போலோ மருத்துவமனையைப் பற்றி நிறையக் கதைகள் சொல்வார்கள். அவை பெரும்பாலும் கதைகள்தான்! காசுக்காக வைத்தியம் என்றாலும் தொழில்முறையில் நிபுணத்துவமும் திறமையும் உள்ள மருத்துவ மனை அது.

   Delete
 3. ராகுல் சிறு பிள்ளை அல்ல. எல்லாம் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே கதை தான்.

  பொதுவாகத் தலைமைப் பதவிக்கு வரத் துடிப்பவர்கள் தங்கள் செல்வாக்கை வைத்துக் கொண்டு செய்த தவறுகளை மூடி மறைக்கத் தான் முயல்வார்கள். அதற்காகவே தான் தலைமைப் பதவி.

  ஆனால் மோடி விவகாரத்தில் எல்லாம் வேறு மாதிரி இருக்கிறது. ஓடு மீன் ஓட காத்திருக்கும் கொக்காய் மோடி. ராகுலின் துர்ரதிர்ஷ்டம் மோடியை நேரடியாக எதிர்த்து கட்சியை தூசு தட்ட வேண்டிய சூழ்நிலை. சென்ற காலம் மோடியை தனிப்பட்ட முறையில் நேசித்து எதிர்ப்பதாக
  நாடகமாடிய காலம். தேர்தல் உண்மை வண்டவாளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.
  இனி எதிர்ப்பு என்றால் நேரடி எதிர்ப்பு தான். அப்படி எதிர்த்தால் கட்சியின் மற்ற தலைவர்கள், தனது என்று சொந்த விவகாரங்கள் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் கிளறப் படுமே என்ற அச்சம் தான்.

  அந்த நேரடி எதிர்ப்பைப் பரிசோதித்துப் பார்க்கத் துணிவில்லாமல் தான் வேறு யாரையாவது தலைமைப் பதவிக்குக் கொண்டு வந்து நிழல் சண்டை போடலாமே என்று நினைக்கிறார்கள்.
  சென்ற காலங்களில் பாவம் மன்மோகன் சிங் கிடைத்தார். இப்பொழுது யாரும் கிடைக்கத் தயாரில்லை. அப்பொழுதாவது உதார் காட்ட பொம்மைப் பதவி ஒன்று இருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை.

  பாரதம் பூராவும் மோடி எதிர்ப்பு நிலை என்பது பிசுபிசுத்துக் கிடப்பதற்கு இதுவே காரணம்.

  பதவியை மட்டும் பிடித்திருந்தால்.... வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்த ஏகப்பட்ட அஜண்டாக்கள் புஸ் வாணம் ஆகி விரக்தியின் உச்ச கட்டத்தில் உட்கார்த்தி வைத்திருப்பது தான் நிதர்சனம்.


  ReplyDelete
  Replies
  1. ஜீவி சார்! ஒருவகையில் ராஜீவ் காண்டி, ராகுல் காண்டி இருவருடைய நிலைமையும் கட்சி விஷயத்தில் மிகப்பரிதாபமான தோல்விதான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கட்சியில் இறுக்கும் மற்றவர்களுக்கு எதோ ஒரு பதவியை சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம், அவர்களுக்கிருந்தது போல இந்திராவுக்கோ அல்லது திமுக நீங்கலாக வெறெந்தக் கட்சிக்கோ இல்லாதது இன்னொரு பரிதாபம்.

   பழைய பெருச்சாளிகளை ஒன்றும் செய்ய முடியாமலும், தாங்கள் விரும்புகிறபடி கட்சியை நடத்திச் செல்ல முடியாமலும் இருப்பது அவர்களாகவே தேடிக்கொண்ட சோகம். ஆனால் அதன் கொடுமைகளை இந்த தேசமும் சேர்ந்து அனுபவிக்க வேண்டுமென்பது அவசியமா?

   Delete
 4. நான் சொன்னதே வேறு. உங்கள் பதிலுக்கான பதில் என்னவென்றால்--

  தனி நபர் வழிபாட்டில் திளைத்த தேசத்தில் இப்படித் தான் இருக்கும் என்பது பேராசானின் வாக்கு.
  ஒற்றை நபரை முன்னிருத்தி செய்யும் அரசியல் ஏதாவது இடைஞ்சலை ஏற்படுத்தித் தான் தீரும். பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை காலம் சொல்லும்.

  தாங்கள் விரும்புகிறபடி கட்சியை நடத்திச் செல்ல முடியாமலும்--- என்றால் என்ன?.. அப்படி முடிவது தானே தனி நபர் வழிபாட்டின் உச்சக் கட்டம்?.. அப்படி நடத்த முடியாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது தானே?..

  என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஜீவி சார்! இதற்கொரு விரிவான பதிலை பழைய கதையைத்தொட்டு இன்றைக்கு இரண்டாவது பதிவாகப் போட்டாயிற்று!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!