இங்கே அரசியல் விவகாரங்களைத் தொட்டு நடப்பு நிலவரம் எப்படியிருக்கிறது என்று விமரிசனப்பதிவுகளாக எழுதி வருவதில் பெரிய சிக்கலே,அந்த நடப்பு நிலவரம் என்பது உடனுக்குடன் மாறக்கூடியது. எழுதும்போதே expiry நேரமும் சேர்ந்தே வருவது தான்! ஆனால் நான் ஒரு அரசியல் பிராணி என்பதால், நமக்குத் தொழில் எழுத்து, அதுவும் அரசியலும் விமரிசனமுமாக மட்டுமே எழுத வருகிறது. வேறெதுவுமே தெரியாது என்றில்லை! சினிமாப்பைத்தியத்தோடு இப்போது Netflix Hulu amazon என்று மெகா சீரியல் பித்தும் சேர்ந்து கொண்டிருக்கிறதே, அதைப்பற்றி எல்லாம் எழுதத் தோன்றுவதே இல்லையே என்று என்னை நானே சுயபரிசோதனை செய்துகொள்வதும் அவ்வப்போது நடப்பது தான்!
இங்கே blow hot blow cold என்று இந்திய அமெரிக்க உறவுகள் கொள்ளவும் முடியாது தள்ளவும் முடியாது ரேஞ்சிலேயே போய்க் கொண்டிருப்பதைக் குறித்த ஒரு விவாதம்! கரண் தாப்பர் கொஞ்சம் தரவுகளோடு கேள்வி கேட்கிறவர். மோடி என்று வந்துவிட்டால் ஒருவித உள்நோக்கமும் கலந்தே வரும் என்பதை முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.
வெட்டி வீம்பு, வீண் பிடிவாதம், வெறிபிடித்துக் கூச்சல், மிரட்டல்கள் என்று கிறுக்கத்தனத்தின் உச்சத்துக்கே போய்விட்ட மம்தா பானெர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பது வேலைநிறுத்தத்தைத் தீவீரப்படுத்தி வரும் மருத்துவர்கள் கோரிக்கை! நடக்கிற விஷயம்தானா?
CONgress கட்சித்தலைவர் பொறுப்பை ஏற்க கேரள மாநில காங்கிரஸ் ஆசாமிகள் வேணுகோபாலும் ஏகே அந்தோணியும் மறுத்துவிட்டதாக, இதையும் ஒருசெய்தியாக இந்து தமிழ் திசை ரொம்பவும் விசனப்பட்டுச் சொல்கிறது. அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?!😌😝
ஆனால் இந்தச் செய்தியை ஒரு கார்டூன் சொல்கிறமாதிரி வருமா? வருமா!
இந்தச்செய்தி வருவதற்கு முன்னால் வரையப்பட்ட கார்டூன் தான்! ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினான் என்றொரு நாகேஷ் காமெடி நினைவுக்கு வருகிறதா? இன்னொரு கார்டூன் ராகுல் வெர்ஷனில்!
இந்தப்பிள்ளையின் அசட்டுத்தனத்தை இத்தாலிய மம்மி வேண்டுமானால் சகித்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்த தேசமும் கட்டிச்சுமக்கவேண்டிய அவசியமில்லையே!
எதுபொருளோ அதைப்பேசுவோம்! #3
மீண்டும் சந்திப்போம்.


