நான்கைந்து நாட்களுக்கு முன்னால் தான் இந்த எ பி சி டி தொடர் விளையாட்டை, ஒரு பதிவில் பார்த்தேன்! மல்டிலெவல் மார்கெடிங் மாதிரி, இந்தத் தொடர், ஸ்டார்ஜன் பதிவிலிருந்து, கோவி கண்ணனுக்குத் தொற்றி, என் வரை பரந்திருக்கிறது! லண்டனில் இருந்து திரு வெ.ராதாகிருஷ்ணன் சங்கிலியில் எல்லாம் இருக்கும் வரை என்ற தெம்போடு முந்திக்கொண்டிருக்கிறார்! யாஹூ!360 நாட்களில், இந்தமாதிரித் தொடர்கிற அல்லது ம்யூசிகல் சேர் விளையாட்டில் என்னை அழைத்தபோது, தயங்கித் தயங்கியே எழுதின ஞாபகம் இப்போது வருகிறது!
இப்போதும் கூடத் தயங்கியபடியே தான் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். அதனால் தான், ஒரு நாள் தள்ளி, இந்தப் பதிவு வெளி வருகிறது.
கோவி கண்ணன் சொன்ன மாதிரி, அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற யோசனை, குழப்பமெல்லாம் இல்லை. எழுத, பேச வேண்டுமானால், ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! தவிர, அடிப்படையில் நான் ஒரு வாசகன். என்ன எழுதப்படுகின்றன என்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து வருவதை மட்டுமே முக்கியமாகக் கொண்டிருப்பதால், என்ன எழுதலாம், அதையும் எப்போது எழுதலாம் என்ற எண்ணங்களே எனக்கு முக்கியமாகப்படுவதில்லை!
தவிர, இப்போது எழுதுவது, இந்த நேரத்து மன நிலையை ஒட்டி மட்டுமே இருக்கும், அதிலும், சொல்லாமல் விட்டதில் தான் அறிந்துகொள்வதற்கான தடையங்கலுமே இருக்கும் என்பதால், இதை வைத்து மட்டுமே என்னை என்றில்லை, எதையுமே முடிவு செய்து விட முடியாது என்றும் தோன்றுகிறது!
இன்னொரு வகையில், திரு கோவி.கண்ணன் சொன்ன மாதிரி, "நாலு பேருக்கு நம்மைப் பற்றித் தெரியணும்னா தொடர்பதிவு தப்பே இல்லை !" அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!இங்கே எதுவுமே .தப்பு இல்லை! தப்புவதும் இல்லை!!
1. A – A for Apple ன்னு சொல்வேன்னு தானே நெனச்சீங்க? உங்க ஆசைக்கு ஆப்பிள்னும், என் ஆசைக்கு Aravindhar என்று கூட வைத்துக் கொள்ளலாமே! All life is Yoga இது அரவிந்தருடைய அருமையான அமுதமொழி!
2. B – Best friend? : ஒருத்தன் தானே தான் தனக்கு முதல் நண்பனாகவும், முழு எதிரியாகவும் இருக்கிறான்!.அந்த வகையில், என்னையே பிரதிபலித்து,நிறையப்பேரில் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆக, எல்லோருமே!
3. C – dictionary.com இல் C என்று மட்டும் கொடுத்துத் தேடிப்பாருங்கள்! குறைந்தது பதினைந்து பிரயோகங்கள் வரும்! சி எனும் போது குறைந்தது பத்து நாவலாசிரியர்கள், அவர்கள் எழுதிய புத்தகங்கள் நினைவுக்கு வருகிறது.
4. D – Distinction தனித்துத் தெரிகிற திறமையும் நினைவு வரும்! Dooms Day என்று பயமுறுத்துகிறவர்களைப் பார்த்துச் சிரிப்பும் வரும்!
5. E – அய்யே! இந்த வயசுல போயி ஈன்னு இளிச்சா நல்லாவா இருக்கும்? தவிர, எனக்கு ஈ புடிக்காது!
6. F – favorites...... ஹ்ம்ம்... நிறைய இருக்கே! பூக்களைப் பிடிக்கும்! புத்தகங்களைப் பிடிக்கும்! குழந்தைகளைப் பிடிக்கும்! நல்ல தமிழ் பிடிக்கும்! சொல்லிக்கொண்டே போனால் நிறைய வருஷமும் பிடிக்கும்!
7. G – G ன்னதும் Guns of Navarone, Gregory Peck ன்னு நிறைய ஞாபகம் வரும்! கோவிந்தா என்று நாமம் சொல்லும் நினைவும் வரும்!
8. H – Hometown? - சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம், பிறந்ததோ செட்டிநாடு, சொந்தமாகிப்போனது,ஒண்ட வந்தது, அடைக்கலம் தந்தது மருதேய்ய்ய்ய்ய்! என்ன கொஞ்சம் அழுக்கா, வேர்வைக் கசகசப்பா, எங்க திரும்பினாலும் ஜனங்க கூட்டம் கூட்டமா, பேச்சுல கொஞ்சம் அராத்தா...பேசிப் பழகினதுக்கு அப்புறம் ரொம்பப் பாசக்காரப்பயலுவளா,அப்புடி, இப்புடி, எப்புடிப் பாத்தாலும், மருதை, மருதைதான்! மருதையச் சுத்தின களுத கூட மருதயை விட்டுப் போகாதுன்னு, அதுனாலதான் சொன்னாங்களோ!
9. I – Indulgence-- ஆசை, ஆவலாதிஎல்லாம் காலாவதியாகிப் போச்சு! ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசரோடாயினும் ஆசை அறுமின்! இது தான் இப்ப ஓடிட்டிருக்கும் ஒரே indulgence!
10. J – ஜெ'ன்னா, தி.ஜானகிராமன்! அதுக்கப்புறம்,ஜெ'ன்னா ஜெய காந்தன்! ஜெகசிற்பியனை மறக்கலாகுமோ? ஜெ' வரிசை கொஞ்சம் பெரிசு! வாசிப்பு அனுபவத்தை மிக இயல்பான தவமாக ஆக்கிக் கொடுத்தவர்கள் இவர்கள்! அவ்வப்போது, ஜெயமோகனும் கொஞ்சம் ஈர்க்கிறார்!
இன்னொருத்தரை இதிலும் சேத்துக்கலாம், அடுத்த எழுத்துக்கும் சேத்துக்கலாம்! ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி!
11. K – Kids & their names? ஒரே பையன்தான்! சரியான வால்பையன்! வாசுதேவன்!
12. L – Life is incomplete without? - Life, Love எல்'லுன்னு ஆரம்பிக்கும்போதே , ஒண்ணு இல்லாம, மத்தது கிடையாதுன்றதும் தெரியணும்! தெரிஞ்சுக்கறது தான் வாழ்க்கையோட உண்மையான தேடலே! தெரிஞ்சப்புறம், இதுவேற அதுவேறன்றதே இல்லாம ஆயிடணும்!
13. M – Marriage date? ஒரு படத்துல நாகேஷ் "ம்ம்ம்ம்மாட்டிக்கினான்!"ன்னு ம்ம்ல கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்வாரே, நினைவுக்கு வருகிறதா? நான் ம்ம்ம்ம்மாட்டிக்கினு அடுத்த மாசம் இருபத்தோராம் தேதியோட இருபத்தோரு வருஷம் நிறையுது!
14. N – No Entry! இது நோ என்ட்ரின்னும், வாத்தியார் மாதிரி,'நான் சொல்றதைத் தான் கேக்கோணும்! கேள்வி ஏதும் கேக்கக் கூடாது'ன்னு சொல்லும் போது, பீச்சே மூர்னு 'இங்க திரும்பி வராதே'ன்னு சொல்லும்போது கேள்வி நிறையக் கேக்கத் தோணும்! இந்த மனோபாவத்தை, ஆசிரியப் பணியாற்றும் சில பதிவர்களிடம் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்! என்னிடம் இந்த சுபாவம், மறந்தும் ஒட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதில் கவனமாகவும் இருக்கிறேன்!
15. O – Oranges or Apples? இதுல எதுக்கு ஓர வஞ்சனை! ஸ்டார்ஜன் சொன்ன மாதிரியே, இதுல ஆறு!(ஆரஞ்சி!) அதுல அஞ்சு!(ஆப்பிள்)ன்னு சொல்லிட்ட்ப்போச்சு! இங்க, இந்திய தேர்தல் முறைகளில் இருக்கும் குறைகளைக் கண்டு கொதித்துப் போன போது, இரண்டு மூன்று வருடங்களாகத் தேர்தல் வருகிற நேரத்தில் மட்டும், ஒரு ஓவோ, இரண்டு ஓவோ இல்லை 49(O) அப்படீன்னு ஒரு சத்தம் கேட்கும்! ரெகுலர் தேர்தல்னா ஐநூறா, ஆயிரமா, இல்லே திருமங்கலம் மாதிரி இவங்க நாலாயிரம்னா அவங்க மூவாயிரம், இடைத்தேர்தல்னா ஜாலிதான்னு ஜனங்க, மானாட மயிலாடற ரேஞ்சுக்குப் போன வளர்ச்சியைக் கண்ட பிறகு
49 O' ன்னாலே எனக்குக் கொஞ்சம் அலெர்ஜி!
16. P – Phobias/Fears? இது இல்லாத உயிரினம் எது? நேரடியாகத் தெரியாவிட்டாலும், இந்த ஒரு அச்சமே, உயிரினங்களின் வளர்ச்சிக்கும், அழிவுக்கும் காரணமாக இருப்பதை மறுக்க முடியுமா? இன்றைக்கு ஹிந்து நாளேட்டில், முதல் பக்கச் செய்தி! காசாப் பகுதியில் இஸ்ரேலி ராணுவம் திட்டமிட்டே,சிவிலியன்களைப் படுகொலை செய்தது என்று ஒரு விசாரணை அறிக்கை வெளிவந்திருக்கிறது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல்! அது நேற்று! இன்றைக்கு ஒன்றுக்குப் பத்து, நூறு, ஆயிரம், லட்சம்! எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
17. Q – Quote for today? : “All life is Yoga” - Sri Aurobindo. வாழ்க்கை முழுவதுமே யோகம்! யோகம் என்பது, உலகத்தைத் துறப்பது அல்ல, உலகத்து நடப்புகளில் இருந்து விலகி இருப்பதும் அல்ல.இந்த நேரத்தின் அவசியம்,விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றமே! ஸ்ரீ அரவிந்தரை வணங்கி,அவருடைய அமுதமொழிகளை உள்வாங்கி, ஒளிபொருந்திய பாதையில் பயணிக்கவே இவன் செய்யும் பிரார்த்தனையும்!
18. R – Reason to smile? : இடுக்கண் வருங்கால் நகுகன்னு சொல்லிட்டுப்போயிட்டாங்களே! அதுக்காகவாவது..:-))
19. S – Season? இங்கே டீவீக்காரங்க அடிக்கிற கூத்து, சீசன் ஒன, சீசன் டூ, சீசன் த்ரீன்னு போயிகிட்டே இருக்கறதால, சீசன்ற வார்த்தையைக் கேட்டதுமே அலெர்ஜியாத்தான் இருக்கு!
அட, நீங்க பருவகாலத்தைச் சொன்னீங்களா? வசந்தகாலம் தான்!
20. T – Tag 4 People? நாலெல்லாம் கம்மி! அப்ப...நாப்பது, நானூறு, நாலாயிரம்? அதுவும் கூடக் கம்மியாத்தான் தோணுது! அதனால, படிக்க வர்ற எல்லோரையுமே! இஷ்டமிருந்தாக் கோத்துக்கலாம்!
20. T – Tag 4 People? நாலெல்லாம் கம்மி! அப்ப...நாப்பது, நானூறு, நாலாயிரம்? அதுவும் கூடக் கம்மியாத்தான் தோணுது! அதனால, படிக்க வர்ற எல்லோரையுமே! இஷ்டமிருந்தாக் கோத்துக்கலாம்!
இல்லேன்னா, ஒரு பின்னூட்டத்தில் சொல்லிட்டு அபீட்டாயிக்கலாம்! பெப்சி உங்க சாய்ஸ் மாதிரி, இந்தக் கோத்துக்கற சங்கிலியும் உங்க சாய்ஸ் தான்!
21. U – Unknown fact about me? அதெப்படி தெரியாத ஒண்ணை...? சொல்லிட்டாத் தெரிஞ்சதாப்போயிடுமே! அப்புறம் அதை எப்படித் தெரியாத ஒரு உண்மைன்னு பீலா வுடறது:-))
21. U – Unknown fact about me? அதெப்படி தெரியாத ஒண்ணை...? சொல்லிட்டாத் தெரிஞ்சதாப்போயிடுமே! அப்புறம் அதை எப்படித் தெரியாத ஒரு உண்மைன்னு பீலா வுடறது:-))
எனக்கே கூடத் தெரியாமத் தான் இருக்கு! அதனால, ஒரு ஒப்பந்தம் செஞ்சுக்கலாம்! என்னைப்பத்தித் தெரியாத உண்மை ஏதாவது உங்களுக்குத் தெரிய வந்தா, நீங்களே சொல்லிடுங்க! எனக்குத் தெரிய வந்தா, நானே சொல்லிடறேன்! காட் ப்ராமிஸ்! போதுமா!
22. V – V for Vendetta! படம் புடிக்கும்! மத்தபடி, வென்டெட்டா, வெண்டைக்காய் எதுவுமே புடிக்காது!
23. W – Worst habit? ஒண்ணு, ரெண்டு இல்ல,நிறைய இருக்கு! ஹாபிட்ஸ், பழக்கங்களுடைய அடிமையாகவே நாம் இருந்துவிடாமல், நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது. பழக்கங்களின் பிடியில் இருந்து விடுபடும்போது, மனிதன் இப்போதிருக்கும் நிலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு உயர முடியும். இந்த டாபிக், என்னுடைய பதிவுகளின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது.
24. X – X கிராஸ் ரோட்னு சொல்வோமே, அது மாதிரி!வெறும் கிராஸ், சிலுவை இல்லை! வாழ்க்கையின் பல தருணங்களில், எதிரும் புதிருமான விஷயங்கள் சந்தித்துக் கொள்வதை, அதன் பின் எழும் ஒரு புதிய வீச்சு, வேகத்தை அனுபவித்திருக்கிறேன்!
25. Y – இந்த எழுத்தைக் கொஞ்சம் கவனித்துப்பார்த்திருக்கிறீர்களா? இல்லையானால், WHY?
23. W – Worst habit? ஒண்ணு, ரெண்டு இல்ல,நிறைய இருக்கு! ஹாபிட்ஸ், பழக்கங்களுடைய அடிமையாகவே நாம் இருந்துவிடாமல், நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது. பழக்கங்களின் பிடியில் இருந்து விடுபடும்போது, மனிதன் இப்போதிருக்கும் நிலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு உயர முடியும். இந்த டாபிக், என்னுடைய பதிவுகளின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது.
24. X – X கிராஸ் ரோட்னு சொல்வோமே, அது மாதிரி!வெறும் கிராஸ், சிலுவை இல்லை! வாழ்க்கையின் பல தருணங்களில், எதிரும் புதிருமான விஷயங்கள் சந்தித்துக் கொள்வதை, அதன் பின் எழும் ஒரு புதிய வீச்சு, வேகத்தை அனுபவித்திருக்கிறேன்!
25. Y – இந்த எழுத்தைக் கொஞ்சம் கவனித்துப்பார்த்திருக்கிறீர்களா? இல்லையானால், WHY?
ஒரு பாதை, ஒருகட்டத்தில் இரண்டு எதிரெதிர் திசைகளில் பிரிவதைச் சொல்வது போல இல்லை? ஏதோ ஒரு பாதையில், பயணிக்க மட்டும் நமக்கு சுதந்திரம் இருக்கிறது. அந்தப்பாதை எப்படி இருக்கும், எங்கே அழைத்துச் செல்லும் என்பது, வாழ்க்கைப் பயணத்தில் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. நாம் செல்லுகிற பாதையில், என்னென்ன அனுபவங்கள் காத்திருக்கும் என்றும் தெரியாது. ஆனால், பயணம் செய்கிறவன், அந்த அனுபவங்களை, அனுபவித்துத் தானாக வேண்டும். கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!
26. Z – Zombie or Zombi..? நிறைய நேரம் கணினி முன்னாலேயே பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பதால், என்னை ஒரு Computer Zombie என்று நினைத்தால், அது தவறு ஏதுமில்லை! ஆனால், நான் மூளை களைத்துப் போன சோம்பேறி மட்டும் இல்லை!
அன்புக்குரியவர்கள்: ......அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள் அத்தனைபேரும் தான்!
ஆசைக்குரியவர்: ...நிறையப்பேர்! சின்னச் சின்ன ஆசைகளில் இருந்து, பேராசைகளாக நிறையப்பேரை இந்த வகையில் என்னால் சொல்ல முடியுமே! ரவா முறுகல் தோசை..? நம்ம ஊட்டுல அதெல்லாம் தெரியாது!அதுனால தான் கோவி கண்ணன் சொன்ன மாதிரிச் சொல்ல முடியவில்லை:-))
இலவசமாய் கிடைப்பது: .....வேறென்ன, உபதேசம் தான்! ஒருத்தருக்குச் சக்கரை வியாதி இருக்கிறது என்று நாக்குத் தவறிக்கூடச் சொல்லிவிடக் கூடாதே? எத்தனை இலவச உபதேசங்கள், மருத்துவ டிப்ஸ்,கிடைக்கும் தெரியுமா?!வைத்தியருக்கே அத்தனை மருந்து, வைத்தியம் தெரிந்திருக்காது!
ஈதலில் சிறந்தது: .....இந்த ஈதல், இசைபட வாழ்தல் இதை பற்றி எல்லாம் நானும் நண்பர் டாக்டர் சுந்தர வடிவேலுவுடன், கொஞ்சம் வள்ளலார் ஈடுபாடு கொண்ட அன்பர்களோடு நிறைய விவாதித்துக் களைத்துப்போயிருக்கிறேன். ஈயென்று இரங்கும், உண்மையிலேயே தேவையும் தாகமும் இருப்பவனுக்கு எதுவும் ஈயப்படுவதில்லை. புளித்த ஏப்பக்காரனும், பொய் முகம் காட்டுகிறவனுமே இங்கே ஈ'க்களை விரட்டிவிட்டுத் தாங்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு முன்னாள் மறைந்த திரு (டணால்) தங்கவேலு, அன்னதானம் செய்து, "வாங்கிக்கட்டிக் கொண்ட" கதையை குமுதம் வார இதழில் நொந்துபோய்ச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. நான் கடவுள் படத்தில், விளிம்புநிலை மாந்தராக வரும் ஒரு கதாபாத்திரம் பேசுகிற வசனம் இது:"புண்ணியம் தேடுறாங்களாம்!"
இதைப்பற்றின பார்வைகளே கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது.
உலகத்தில் பயப்படுவது: ....எங்க வீட்டு வால்பையனுக்குத்தான்!
ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ஒலகம் புரிஞ்சுகிட்டேன்! கண்மணி என் கண்மணி! இதுக்குத் தனியா வேற விவரிச்சுச் சொல்லணுமாக்கும்!
உலகத்தில் பயப்படுவது: ....எங்க வீட்டு வால்பையனுக்குத்தான்!
ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ஒலகம் புரிஞ்சுகிட்டேன்! கண்மணி என் கண்மணி! இதுக்குத் தனியா வேற விவரிச்சுச் சொல்லணுமாக்கும்!
எப்போதும் உடனிருப்பது: நம்ம சத்யராஜ் கணக்கா, 'லொள்ளு"! அப்புறம்,ஸ்பெக்ஸ்..கண்ணாடி! போட்டிருக்கிறது கூட நினைவில்லாமல் குளிக்கவும் போயிருக்கிறேன்! அந்த அளவுக்கு கூடவே பழகிவிட்டது!
ஏன் இந்த பதிவு: ....அதானே? ஏன்? ஏனிந்தக் கொலைவெறி?
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!
ஒரு ரகசியம்: ........சொல்லிட்டா அது ரகசியமா இருக்காதேன்னு தான்!!
ஓசையில் பிடித்தது: ஒருகை ஓசை!......மௌனம்!
ஒரு ரகசியம்: ........சொல்லிட்டா அது ரகசியமா இருக்காதேன்னு தான்!!
ஓசையில் பிடித்தது: ஒருகை ஓசை!......மௌனம்!
ஔவை மொழி ஒன்று: ஔவியம் பேசேல்!
(அ)ஃறிணையில் பிடித்தது: புத்தகங்கள்! அவை அஃறிணை அல்ல! உங்களையும் என்னையும் விட உயிருள்ளவை! உயிரூட்டக் கூடியவை!
இவ்வளவு தூரம் வந்தீங்க, ஒண்ணும் சொல்லாமலே போனா எப்படி?
(அ)ஃறிணையில் பிடித்தது: புத்தகங்கள்! அவை அஃறிணை அல்ல! உங்களையும் என்னையும் விட உயிருள்ளவை! உயிரூட்டக் கூடியவை!
இவ்வளவு தூரம் வந்தீங்க, ஒண்ணும் சொல்லாமலே போனா எப்படி?
//இவ்வளவு தூரம் வந்தீங்க, ஒண்ணும் சொல்லாமலே போனா எப்படி? //
ReplyDelete-நல்லா சொன்னீங்க போங்க.
//Guns of Navarone//
ReplyDeleteஇந்த படத்தை பற்றி சொல்லமுடியுமா?
கேசட் இருக்கு பார்க்க ஏனோ தயக்கம்!
//ஒரே பையன்தான்! சரியான வால்பையன்! வாசுதேவன்!//
ReplyDeleteகணக்குல ரெண்டு காட்டுதே!
உங்க பையனைவிட என்னைத்தான் அதிகம் நினைப்பிங்க போல!
ReplyDeleteஎன் சேட்டையும், உங்க பையன் சேட்டையும் ஒரே மாதிரி இருக்கா!?
ஞாயிற்றுகிழமை அழைச்சிட்டு வர்றிங்களா, அமெரிக்கன் காலேஜிக்கு!
ReplyDeleteஞாயிற்றுக்கிழமை நான் வருவதே சந்தேகம்!
ReplyDeleteபையன் வெளியூரில் படிக்கிறான்! எனக்கு எல்லா வால் பையன்களையுமே பிடிக்கும்! ப்ரோபைலில் பார்த்திருக்கலாமே..பூக்கள், குழந்தைகள் [இங்கே வால் பையன்கள், வால் பொண்ணுகள் என்று படிக்கவும்] புத்தகங்கள் இவையெல்லாம் நிறையவே பிடிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறேனே!
ஐயா,
ReplyDeletea - z, ஆ - அஃ வரை எதிர்பார்த்தை விட சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்
//ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!//
அருமை. கல்விச் செல்வத்தை குறைவின்று எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்
//11. K – Kids & their names? ஒரே பையன்தான்! சரியான வால்பையன்! வாசுதேவன்! //
ReplyDeleteவாரிசுகளைச் சொல்லும் போது ஒரு குஷி வந்து விடுகிறது இல்லையா ?
:)
வாசுவுக்கு எனது அன்புகள்
நன்றி திரு.கோவி.கண்ணன்,
ReplyDeleteநல்ல வேளை! வால்பையன் என்று சொல்லும்போது வாலும் முளைத்துவிடுகிறது என்று சொல்லி விடுவார்களோ என்று கொஞ்சம் பயம், அப்புறம் ட்ரேட் மார்க் உரிமை மீறல் என்று வால்பையன்களிடமிருந்து மிரட்டல் என்று வராமல்... :-))