ஹிட்லருடன் செக்ஸ்! சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்!

இது பதிவர் யுவ கிருஷ்ணா எழுதின புத்தகத்தைப் பத்தினதோ, பரபரப்பாகப் புத்தக வெளியீட்டையுமே ஆக்கிக் காட்ட முடியுமென்று தொடர்ந்து நிரூபித்து வரும் கிழக்குப் பதிப்பகத்தைப் பற்றியதோ அல்ல!


சென்ற வாரம் ஜெர்மனியில், வானவில் என்ற பெயரில் இயங்கி வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குழு  சென்ற வாரம், ஒன்றரை நிமிடமே ஓடும் ஒரு விளம்பரப்படத்தை இணையத்தில் வெளியிட்டது பெரும் பரபரப்பு, சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அப்படியே நமக்கும் ஒரு பதிவு போடவும், படிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது! நாற்பது வயதே ஆன, இணையம், என்னென்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்! செப்டெம்பர் ரெண்டாம் தேதி தான் இணையத்துக்கு நாப்பது வயசுன்னு பதிவு போடப்போறேன்னு தெரிஞ்சு, செப்டம்பர் மூனாம் தேதியே இப்படி சுண்டி இழுக்கும் விடியோவை இணையத்தில் உலா வரச் செய்திருக்கிறார்கள். இன்று, செப்டம்பர் ஒன்பது முதல் ஜெர்மனி டீவீக்களிலும் வருமாம்!


அப்படி என்ன தான் சுண்டி இழுக்கிறதாம் அந்த வீடியோவில்?


இந்த வீடியோவில்,  கொஞ்சம் இருட்டான அறையில்,  சுண்டி இழுக்கும் [மெனசிங் இந்த வார்த்தைக்கு, இந்த இடத்தில் பொருத்தமான வேற அர்த்தம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பு!] பின்னணி இசையுடன் ஒரு உடலுறவுக் காட்சி  ஓடுகிறது. கடைசி ஷாட் வரை அந்த ஆணின் முதுகு மட்டுமே காண்பிக்கப் படுகிறது [ரொம்ப முக்கியம்!] கடைசியில் தான் அந்த ஆண் ஹிட்லர் என்று முகம் காட்டப் படுகிறது-கீழே "எய்ட்ஸ் மொத்தமாகக் கொன்று குவிக்கும் கொலையாளி" என்ற வாசகங்கள் ஓட, முடிகிறது.


இந்த வானவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு இயக்கம், ஹிட்லருடன் நிறுத்திக் கொள்ளவில்லை, ஸ்டாலின், சதாம் ஹுசேன் என்று  நிறையப்பேரைப் பரலோகத்திற்கு அனுப்பியவர்களின் படங்களையும் வைத்து இந்த மாதிரி, சுண்டி இழுக்கிற மாதிரி வாசகங்களோடு, எய்ட்ஸ் நோயும் இவர்களை மாதிரிப் பயங்கரமான கொலையாளிதான் என்று ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார்களாம்!


ஹிட்லரைப் பற்றிப் பேசுவது ஜெர்மனியில் கொஞ்சம் உணர்வுகளைத் தூண்டி விடுகிற விஷயம். இந்த விளம்பரமும் உணர்வுகளோடு நிறையவே உரசிப்பார்த்திருக்கிறது! என்ன, அங்கெல்லாம் யாரும் தீக்குளிக்க மாட்டார்கள், அவ்வளவுதான்!


இந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிறுவனம் சொல்கிற காரணம், "இந்தக் கொடூரமான வியாதிக்கு ஒரு முகம் கொடுக்க விரும்பினோம்!" மேலும் சொல்வது,"எய்ட்ஸ்  என்பது ஜெர்மனியில் மறந்துபோன விஷயம், கால் மிதியடியின் கீழ் குப்பையை மறைத்து விடுகிற மாதிரி. அதனால் தான் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க விரும்பினோம்"


ஹேம்பர்க் நகரத்திலுள்ள டாஸ் கொமிட்டீ என்ற விளம்பர நிறுவனம் தான் இதைத் தயாரித்திருக்கிறது. இந்த  வீடியோ மற்றும் மேலதிகத் தகவல்களைப் பார்க்க


சுண்டியிழுக்கும் விளம்பரங்கள், அதிர்ச்சி வைத்தியம் எல்லாம் சரி தான்! ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் விளம்பரங்கள் சுண்டியிழுக்கத் தான் செய்கின்றன, ஆனால் அதில் அதிர்ச்சியையும் காணோம்! வைத்தியத்தையும் காணோமே அது என்?


இளைய தளபதி, டாக்டர் விஜய் காங்கிரஸில் சேரப்போகிறார் என்ற சேதியை பலவிதமாகவும் கசிய விட்டுப் பார்த்தாயிற்று. சிரிப்புத்தான் வந்ததே தவிர, அதிர்ச்சியோ, வைத்தியமோ இல்லையே! ராகுல் காந்தி வர்றார்! அஞ்சடுக்குப் பாதுகாப்பு, அஞ்சாயிரம் போலீசுன்னதுமே, இளைய தளபதியோட எபக்டுக்கு, இவ்வளவு தேவையான்னு தான் தோணிச்சே தவிர.....!


காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இன்கம்டாக்ஸ் குச்சியைத் தூக்கினதுமே சினிமாக்காரங்கல்லாம், காங்கிரஸ்ல ஐக்கியமாயிடராங்களே, எப்பவாச்சும் நடந்தா அதிர்ச்சி, அதிசயம்னு சொல்லலாம்.


எப்பவுமே நடந்தா..?


எதோ ஒருதரம் சுண்டியிழுக்கிற மாதிரி இருந்தா, அது விளம்பரம்! எப்பவுமே சுண்டிக்கிட்டிருந்தா அது தீஞ்சுபோனது!


பன்ச் டயலாக் சினிமாவுல மட்டுமே பேசிப்பழகின இளைய தளபதிக்கு எங்கேயிருந்து பன்ச் உறைக்கிற மாதிரி விழுந்ததோ தெரியாது, ராகுல் காந்தியோட ஒரே மேடையில ஏறக்கூடப் பயமாப் போச்சுன்னு ஆகிப்போச்சு.

பிலிம் காட்டறதுக்குத் தமிழ்நாட்டுல ஒரு தியேட்டர் கூடக் கெடைக்காது, பாத்துக்கோன்னு ஒரு பன்ச், அவரோட திருமண மண்டபத்தின் முன்னால இருந்த பந்தல், "இடையூறாக" இருக்குன்னு ஒரு பன்ச் இப்படி எண்ணற்ற பன்ச் பன்ச்சா வந்ததுல, [ எத்தனை படத்துல இந்தப் பீலவுடற, பன்ச் டயலாக் கேட்டுக் கேட்டு நொந்திருப்போம்!] இளைய தளபதி தலையும் காணோம், வாலையும் காணோம்னு கப்சிப்னு ஆகிட்டதா செய்தி இங்கே!

3 comments:

  1. தமிழ்நாட்டில் எய்ட்ஸ் விழிப்புனர்வு கொஞ்சம் கூட இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்!

    சானிட்டரி நாப்கின் விளம்பரம் வந்தால் எப்படி சேனல் மாறுமோ அதே கதி தான் எயிட்ஸ் விளம்பரத்துக்கும்!
    என்னை கேட்டால் உயர்நிலை பள்ளிகளிலும்! கிராமபுறங்களிலும் அதிகமாக எயிட்ஸ் விழிப்புணர்வு தேவைப்படுகிறது!


    கிராமத்துல ஒருத்தன் வெக்கமில்லாம சொல்றான், எங்க போனாலும் காண்டம் யூஸ் பண்ண மாட்டாராம்!

    பைப் துரு புடிச்சி போயிரும்னு மிரட்டி வச்சிருக்கேன்!

    ReplyDelete
  2. பைப் துருப்பிடிக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும் வால்ஸ்!

    தமிழ் நாட்டில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படணும்னா, இந்தமாதிரிப் பிரபலம் யாரை வச்சுப் போஸ்டர் அடிச்சாப் பொருத்தமா இருக்கும்னு சொல்லவே இல்லையே:-))

    ReplyDelete
  3. இந்த கேள்விக்கு பதில் சொல்லலைன்னு புகார் பண்றிங்களா விதூஷ் பதிவுல!


    எனக்கு பிரபலம்ங்கிற வார்த்தையில நம்பிக்கையில்ல!
    மக்கள் இன்னைக்கு மதிக்கிறவனை நாளைக்கு மிதிப்பாங்க!

    சரியான ஆள் எயிட்ஸ் வந்து அவதியுறுபவன் தான், அவனது ஸ்டேட்மெண்டே மாற்றத்தை தரும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!