உயிராய்ப் பூமியில் தோன்றிய தருணமே
ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!
ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.
மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன் பயம் கொள்ள வேண்டும்?
மரணம் உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை
அங்கேயே தேங்கிவிடாதே தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறுதுளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறுதுளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறுதுளியாய் ஆனதைப்பார்!
ஜலாலுதீன் முகமது ரூமி !
இந்த சூபிக் கவிஞனின் தாக்கம் எனக்கு நிறையவே உண்டு.
இங்கே ஒருபதிவில் மதங்களைப் பற்றிய விவாதம், கோவி கண்ணனுடைய பதிவு-மதங்கள்-கிழக்கும் மேற்கும்! பதிவிலும் தொடர்ந்த பின்னூட்டங்களிலும் கிளர்ந்தெழுந்த சிந்தனையில் தேடிப்பிடித்து, மொழியாக்கம் செய்தது. மொழிபெயர்த்ததில் குறை இருந்தால் அது என்னுடையதே!
ஆங்கில மூலம் இதோ!
From the moment you came into this world,
A ladder was placed in front of you,
That you might transcend it.
From earth, you became plant,
From plant you became animal,
Afterwards you became a human being,
Endowed with knowledge, intellect and faith.
Behold the body, born of dust, how perfect it has become.
Why should you fear its end?
When were you ever made less by dying?
When you pass beyond this human form,
No doubt you will become an angel and soar through the heavens,
But don't stop there, even heavenly bodies grow old.
Pass again from the heavenly realm and
Plunge, plunge into the vast ocean of consciousness,
Let the drop of water that is you become a hundred mighty seas.
A ladder was placed in front of you,
That you might transcend it.
From earth, you became plant,
From plant you became animal,
Afterwards you became a human being,
Endowed with knowledge, intellect and faith.
Behold the body, born of dust, how perfect it has become.
Why should you fear its end?
When were you ever made less by dying?
When you pass beyond this human form,
No doubt you will become an angel and soar through the heavens,
But don't stop there, even heavenly bodies grow old.
Pass again from the heavenly realm and
Plunge, plunge into the vast ocean of consciousness,
Let the drop of water that is you become a hundred mighty seas.
But do not think that the drop alone becomes the ocean.
The ocean, too, becomes the drop.
The ocean, too, becomes the drop.
(The Way of Passion, A Celebration of Rumi, Andrew Harvey,
Frog Ltd. Berkeley, California)
ரூமியைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் புரிந்து கொள்ள, இந்த கவிதை உதவும்!
Come, come again, whoever you are, come!
Heathen, fire worshipper or idolatrous, come!
Come even if you broke your penitence a hundred times,
Ours is the portal of hope, come as you are .
I hold no religion or creed,
an neither Eastern nor Western,
Muslim or Infidel,
Zorastrian, Christian, Jew or Gentile.
I come from neither land nor sea,
am not related to those above or below,
was not born nearby or far away,
do not live either in Paradise or this Earth,
claim descent not from Adam and Eve or the Angels above.
I transcend body and soul,
My home is beyond place and name.
It is with the beloved, in a space beyond space.
I embrace all and am part of all.
ONCE a beloved asked her lover: “Friend,
You have seen many places in the world!
Now – which of all these cities was the best?
He said: “The city where my sweetheart lives!”
Seek knowledge which unravels mysteries
Before your life comes to close
Give up that non-existence which looks like existence,
Seek that Existence which looks like non-existence!
மிகவும் அருமையான கவிதையை மொழி பெயர்ப்பு செய்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteமதங்கள் வேண்டா சூபி மனிதர்களில் தோன்றிய உன்னதக் கவிஞனைப் பற்றி அறிந்தேன்.
//மதங்கள் வேண்டா சூபி மனிதர்களில் தோன்றிய உன்னதக் கவிஞனைப் பற்றி அறிந்தேன்.//
ReplyDeleteமதங்கள் வேண்டாம் என்பவர்கள் சூஃபியா?
மதங்களுடைய தேவை முடிந்து விட்டது என்று தான் ஸ்ரீ அரவிந்த அன்னையும் தெளிவாகச் சொல்கிறார். மதங்கள், அதை ஏற்படுத்தியவர்கள், அல்லது அவர்களைப் பின்பற்றியவர்களால் ஏற்படுத்தப்பட்டது. அந்த நேரத்து சத்தியங்கள், யதார்த்தங்கள் என்பதை மறுக்க முடியாது. அந்த அனுபவங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாதவர்களால், சமயங்கள் பிணக்குறும் சமயங்களாகக் குறுகியும் போயின.
ReplyDeleteமதங்கள், சமய நம்பிக்கைகளைக் கடந்து, ஆன்மீகப்பாதையில் உயர்வதில் தான், மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில், அடுத்த முன்னேற்றத்திற்கான வழி இருக்கிறது. இதைத் தான், இந்தப்பக்கங்களில், கொஞ்சம் கொஞ்சமாக நான் புரிந்து கொண்டு வருவதைப் பகிர்ந்து கொண்டும் வருகிறேன்.
கீழே ரூமியின் இரண்டாவது கவிதையிலேயே உங்களது கேள்விக்கு விடை இருக்கிறது அருண்! ஸுஃபி ஞானிகள் அத்தனை பேருமே மதங்களை இவ்வளவு வெளிப்படையாக வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால், மதங்கள் கடந்த ஒரு அற்புத அனுபவத்தைத் தாங்கள் பெற்றதை, மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்கள்.
ReplyDeleteஸுஃபி என்பது மதங்களைக்கடந்த ஒரு மெய்ஞான அனுபவம். எந்த ஒரு மதத்திலும் இப்படிப்பட்ட, குறுகிய சமய வரையறைகளைத் தாண்டி, ஆன்மீக அனுபவத்தில் உயர்ந்த நிஜமான ஞானிகளைப் பார்க்கலாம்!
//கீழே ரூமியின் இரண்டாவது கவிதையிலேயே உங்களது கேள்விக்கு விடை இருக்கிறது அருண்!//
ReplyDeleteதமிழ் கவிதைகளையே டிக்ஸ்னரி வச்சி படிக்கிறவன் நான்!
//ஆன்மீக அனுபவத்தில் உயர்ந்த நிஜமான ஞானிகளைப் பார்க்கலாம்! //
ReplyDeleteஅப்படி உயர்ந்தால் அவர்களால் நாட்டுக்கு என்ன பயன்!
இதுவரை அம்மாதிரி யார் யார் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறார்கள்! இப்போ நீங்க போட்டிருக்குற கவிதை தான் அந்த நல்லதா?
//வால்பையன் said...
ReplyDeleteSeptember 15, 2009 2:42 PM
//ஆன்மீக அனுபவத்தில் உயர்ந்த நிஜமான ஞானிகளைப் பார்க்கலாம்! //
அப்படி உயர்ந்தால் அவர்களால் நாட்டுக்கு என்ன பயன்!
இதுவரை அம்மாதிரி யார் யார் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறார்கள்! இப்போ நீங்க போட்டிருக்குற கவிதை தான் அந்த நல்லதா?//
ஹா ஹா, என்னவொரு வில்லத்தனம்?
ஒரு சமுதாயப் பிணக்குகள் இல்லாமல் வாழவேண்டும் என வாழ்ந்து காட்டுவதே நாட்டுக்கு நல்லது செய்வதுதானே அருண் அண்ணா. அப்படி வாழ்ந்து காட்டியவர்கள் தான் சூஃபி மனிதர்கள். தனது வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ வழி செய்பவர்களே வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். தங்களது எழுத்தின் மூலம் அதைச் செய்தவர்களில் ஒருவரே இந்த ரூமி.
கிருஷ்ணமூர்த்தி அவர்களே....உங்களின் ழொழிப்பெயர்ப்பு அருமை ....
ReplyDeleteமௌலானா ரூமியின் மூலநூலான "மஸ்னவி ஷரீப்" பார்ஸி மொழியில் உள்ளது....அதுதான் பல மொழிகளில் வந்துள்ளன....
தமிழிலில் மொழிபெயர்க்கப்பட்டு சிலவாரங்களுக்கு முன் எனக்கு கிடைத்தது....மிக அற்புதமான நூல்....இதன் ஞான கருத்துக்கள் எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடியாது...அதற்கு இறைவனின் பேரருள் வேண்டும்....
சாதாரணமனிதனுக்கு ஞானியைப்பற்றியோ ஞானத்தைப்பற்றியோ தெரியாது....ஞானத்தேடல் உள்ளவரே பேரின்பம் அடைகிறார்.....
வாழ்த்துக்கள்....
வாங்க ராதாகிருஷ்ணன்,
ReplyDeleteநம்ம அருண், சிறுகதைப்பட்டறைக்குப் போயிட்டு வந்தார். என்ன பண்ணார்னே தெரியல, வழக்கமா, ரொம்ப விடலைத்தனமாப் பொறுப்பே இல்லாம சுகம் ப்ரம்மாச்மின்னு ஆறு பதிவுகளா, நான் பாரதியைப் பாத்து அபின் அடிச்சேன், இவர்பாப்பாத்து கஞ்சா அடிச்சேன், அவரைப்பாத்து ..ன்ற மாதிரி எழுதும் பா.ராகவனே, இந்தப்பட்டறையைப்பத்தி எழுதின பதிவுல வம்புப்பின்னூட்டங்களா எழுதிப் பிரபலமான வால்பையன்னு கொஞ்சம் மிரண்டு போயி எழுதியிருக்காரு...
வில்லத்தனமா இல்லே. வில்லன்களுக்கே வில்லன்! வில்லாதிவில்லன்னு சொல்லணும்!
கூடிய சீக்கிரமே நம்ம வால்ஸ் எழுதின 'சரக்கு' பதிவுகள், வம்புப்பின்னூட்டங்கள் எல்லாம் கிழக்குப் பதிப்பகத்திலே இருந்து வெளிவரும்னு தோணுது!!
வாங்க, கிளியனூர் இஸ்மத்! முதல்தடவையா இங்கே பின்னூட்டம் எழுதியிருக்கீங்க!
ReplyDeleteரூமி தவிர வேறு ஸுஃபி ஞானிகளைப் பற்றிய பரிச்சயம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது.
உங்களுடைய பக்கங்களில் சொல்வது போல, மதங்களைத் தேடாத மனிதனைத் தேடி என்று அல்ல, மதங்களில் இருந்து விடுபட்டு ஆன்மீகச் சிந்தனைக்கு உயர்கிற மனிதனாக்க எத்தனையோ ஞானிகள் இந்த பூமிக்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
நாம் தான், அவர்கள் சொல்வதைக் கேட்கத் தவறிக் கொண்டிருக்கிறோம்.
//சாதாரணமனிதனுக்கு ஞானியைப்பற்றியோ ஞானத்தைப்பற்றியோ தெரியாது..//
ReplyDeleteசாதாரண மனிதனுக்கு தெரியாட்டி யாருக்கும் ஒன்னும் நட்டமில்லை!
ஞானிகளுக்கு சாதரண மனிதனை தெரியலைனா அவுங்க ஞானத்துக்கே இழுக்கு!
//அருண் அண்ணா.//
ReplyDeleteஎம்மேல எதாவது கோபம்னா பேசி தீர்த்துக்கலாம், இப்படியெல்லாம் திட்டக்கூடாது!
//தனது வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ வழி செய்பவர்களே வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். //
இன்னைக்கு ரஜினியும், அம்பானியும் தான் நிறையா பேருக்கு பாடமாக இருக்கிறார்கள்! அவர்களும் சூஃபியா!?