எது பொருளோ அதைப் பேசுவோம்! #2 மோசடிகள்! அரசியல்வியாதிகள்!

எது எதிலோ நம்முடைய கவனத்தை வைத்து, அதனால் பல முக்கியமான விஷயங்களைக் கோட்டை விட்டு விடுகிறோம் என்பதை முந்தைய பதிவில் J & K Bank விவகாரத்தில் காஷ்மீரி அரசியல்வாதிகள் புகுந்து விளையாடியதை ஒரு கோடி காட்டியிருந்தும் கூட இங்கேயோ அல்லது இணையத்திலோ எந்தவொரு அதிர்வையும் பார்க்க முடியவில்லை. இது எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி எதையும் தரவில்லை. நேற்றைக்கு பெங்களூரு சிவாஜி நகர் காங்கிரஸ் MLA  ரோஷன் பெய்க் 400 கோடி ரூபாய் வாங்கித் திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டார் என்று ஒரு தற்கொலை மிரட்டல் ஆடியோ வைரலாகப் பரவியதில்  IMA Jewels நிறுவனத்தில் அதிக வட்டி, வரும்படி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர்கள் கண்ணீர்! புகார்! மோசடி செய்யப்பட்ட தொகை 2000 கோடியைத் தொடும் என்கின்றன பெங்களூரு செய்திகள்!   • Investors who have come to file complaints against Mansoor Khan, MD of IMA jewels after an audio clip, allegedly Khan's, claiming to end his life due to financial problems, surfaced.
  12:32 PM · Jun 11, 2019 · Twitter for Android

 • Karnataka CM HD Kumaraswamy: IMA Jewels issue has been taken seriously. Government understands the situation of investors. I have also spoken to Home Minister MB Patil about the issue, case handed over to CCB (Central Crime Branch). Action will be taken against culprits.
  Quote Tweet
  ·
  Karnataka: Investors of IMA Jewels, protest outside its office in Bengaluru after they allegedly received a message from founder-owner Mohammed Mansoor Khan, saying he is "tired of bribing corrupt politicians & bureaucrats"
  Show this thread
  3:32 PM · Jun 11, 2019 · Twitter Web Client  

  Replying to
  Stop fooling the public... Till date not a single person in Karnatakas history has been arrested... When every politician/(YOU) is feasting Briyani with the culprit.... How will you dare catch him.... Congress MLA & HDD leaders are all hand in glove with the CHOR
  1
    

  A huge crowd gathered outside a jewellery store owned by I Monetary Advisory (IMA), an Islamic banking and halal investment firm, in Bengaluru’s Shivajinagar on Monday, after an audio clip of its founder-promoter Mohammed Mansoor Khan went viral. 

  In the audio clip, the IMA founder threatened to commit suicide stating he is tired of bribing politicians and bureaucrats. He also alleged that Congress leader and Shivajinagar MLA Roshan Baig took Rs 400 crore from him and refused to return it. Khan also claimed that there is a threat to his life and his family members என்கிறது டைம்ஸ் நவ் செய்தி. 

  இந்தக் காட்சியை ஏற்கெனெவே தமிழகத்தில் அனுபவ் நடேசன் முதற்கொண்டு, பாலு ஜூவல்லர்ஸ் என்று வரிசை கட்டிப் பார்த்திருக்கிறோம்! இப்போதுகூட சாரதா Scam என்று மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியும் கட்சிக்காரர்களும் இதே மாதிரி Ponzi திட்டங்களில் 40000 கோடி ரூபாய் வரை மோசடிப்புகாரில் சிக்கியிருப்பதாகச் செய்திகளில் பார்த்துப் பழகியதால், மரத்துப் போய் விட்டதோ?  
    
   

  எவ்வளவு பட்டாலும் எவ்வளவு ஏமாந்தாலும் ஜனங்களுக்கு ஏன் உறைக்கவே மாட்டேனென்கிறது? திரும்பத்திரும்ப இந்த மாதிரி மோசடிப்  பேர்வழிகளிடமும். அயோக்கிய அரசியல் வியாதிகளிடமும் ஏமாந்து கொண்டே இருக்க வேண்டுமென்று விதியா என்ன?

  எங்கே போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

  மீண்டும் சந்திப்போம்.
         

  2 comments:

  1. மீன்களை உண்டு வாழுகின்ற மீன் சின்னஞ்சிறு புழுவுக்கு ஆசைப்பட்டு(ஏன்?.. நாக்கு ருசி!..)
   தூண்டிலில் சிக்கி குழம்புச் சட்டிக்குள் கொதித்து அடங்குவதைப் போலத் தான்..

   கூந்தல் இருப்பவள் அள்ளி முடிகிறாள்...

   இவர்களிடம் பணம் இருக்கிறது.. எதையோ எதிர்பார்த்து முதலீடு செய்தார்கள்..
   அவனிடம் முளை இருக்கிறது.. எதையும் எதிர்பார்க்காமல் எடுத்துக்கொண்டு ஓடி விட்டான்!..

   ReplyDelete
   Replies
   1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்! வங்கிப்பணியில் இருந்த நாட்களில் வன்முறை, coercion என்று எதுவுமில்லாமல் சிம்பிள் டெக்னிக்கில் பணத்தை லவட்டுகிற திருச்சி ராம்ஜி நகர் கில்லாடிகளைப் பற்றிக் கதைகதையாக அறிந்ததுண்டு.

    ஆனால் அதிக வட்டி அதிகலாபம் என்ற அரதப்பழசான டெக்னிக்கில் தொடர்ந்து ஜனங்கள் ஏமாறுவது கொஞ்சம் அதிகப்படியான அபத்தம், ஏமாற்றமாக இல்லையா? கொங்கு மண்டலத்தில் பணியாற்றிய போது இதே மாதிரி மோசடிக் கும்பல் கடைவிரித்து, குறைந்த முதலீடு நூறே நாட்களில் பலமடங்கு மதிப்புள்ள பொருட்கள் என்று கூவிக்கூவி மோசடி செய்ததில், பணத்தை பெட் கட்டுகிற மாதிரி, முதலீடு செய்த பல லட்சாதிபதித் தொழிலதிபர்களை அறிந்திருக்கிறேன். கேட்டால், மோசடி தானென்று தெரியும், அவனைவிட நாங்கள் கில்லாடி, அவன் ஓடுவதற்கு முன்னால் கடையில் காட்சிக்கு வைத்திருக்கிற பொருட்களை எடுத்துக் கொண்டு வந்துவிட மாட்டோமா என்பார்கள்!

    இந்த தேசமும் மோசடிக்கும்பல்களும் ஏமாறுகிற ஜனங்களும் ஆக எல்லாமே விசித்திரமானது.

    Delete

  ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!