ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!
அண்ணாச்சி உங்க கூட்டணி தமிழ்நாட்ல தவிச்சாலும், இந்தியா லெவெல்ல பட்டய கெளப்புது. வாழ்த்துக்கள். All the best for next government!
ReplyDeleteசெய்திகளை அலசி எனக்குச் சரியெனப்படுவதை பதிவுகளாக எழுதிவருகிறேன். அவ்வளவுதான்! நான் பிஜேபி கட்சிக்காரனோ ஆதரவாளனோ இல்லை திரு. ரஹிம்
Deleteஇந்த அசுர வெற்றி தலைக்கனத்தைத் தராமல் இருக்கவேண்டும்.
ReplyDeleteதலைக்கனம் ஏறினால் காங்கிரசுக்கு ஏற்பட்ட கதிதான் ஸ்ரீராம்! ஆனால் அதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிற இடத்திலா நாம் இருக்கிறோம்? :))))
Deleteசார்... அப்படியே தமிழ்நாட்டிற்கான என் கணிப்பையும் பாராட்டத் தவறாதீர்கள்..ஹாஹா....
ReplyDeleteதமிழ்நாட்டைப் போலவே, மத உணர்வும், அந்த அந்தப் பகுதி வெற்றிக்குக் காரணம் என்றால் அதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
பாராட்டுதானே வேண்டும்! சரியாகக் கெட்ட சேதி ஒன்றைக் கணித்ததற்காக, பிடியுங்கள் பாராட்டை!
Deleteநல்லது நடந்திருந்தால், நிச்சயமாகப் பாராட்டியிருப்பேன் நெ.த! தமிழகம் ஒரு தனித்தீவாகச் சிந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெற்கே கேரளம் தமிழகம் தவிர மற்றெல்லாப் பகுதிகளிலும் பிஜேபி வெற்றி பெற்றிருப்பதற்கு வெறும் மதவுணர்வு மட்டுமே காரணமாக இருந்திருக்கும் என்பதே தவறான கற்பிதம்!
வெறும் மத உணர்வுதான் பாஜக வெற்றிக்குக் காரணம்னு சொல்லலை. அதுவும் நிச்சயமாக உண்டு. ஒருவேளை சில அதிகப்பிரசங்கிகளை (அதீதமாக வெறுப்புணர்வை வெளியிடும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்) அடக்கி இருந்தால், இன்னும்கூட பெரிய வெற்றியை பாஜக பெற்றிருக்கும்னு நினைக்கிறேன்.
Deleteஆந்திராவை விட்டுட்டீங்க. அப்ப தமிழகம்,கேரளா, ஆந்திரா மூன்று தீவுகளா?
Deleteஆந்திரா தெலங்கானா இரண்டிலும் பிஜேபி ஏற்கெனெவே கால்பதித்தாயிற்று. கேரளமும் தமிழகமும் தான் இன்னமும் வறட்டு இழுப்புகளாகவே இருக்கின்றன
Delete89+50+108+13 -- எந்தக் கணாக்கு போட்டாலும் நெருங்கவே முடியவில்லையே!
ReplyDeleteஅதற்கெல்லாம் இசுடாலின் மாதிரி கணக்கு சார்வாளிடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்குமே ஜீவி சார்! பரவாயில்லையா?
Deleteதமிழகத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது பாராளுமன்றத்தில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக ஆகிவிட்டது. அதனால் அதிமுக இஸ்லாமியர்களின், கிறிஸ்தவர்களின் பெரும்பகுதி வாக்கை இழந்தது (இதுபோலத்தான் மதமாற்றத் தடைச் சட்டத்தின்பிறகு அதிமுகவுக்கு நடந்தது).
Deleteஆனால், சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவை இயற்கை கைவிட்டுவிடவில்லை. சுடாலின் இன்னும் காத்திருக்கணும்.
நெ.த! சென்ற தேர்தலில் ஜெயலலிதா தனியாகவே நின்று 37 சீட்டுகளைப் பிடித்தும் பயனில்லாமல் போன மாதிரியே இசுடாலின் அரும்பாடுபட்டு மெகா கூட்டணி அமைத்து காங்கிரஸ் விசிக மதிமுக இடதுசாரிகள் என்று அத்தனைபேருக்கும் சீட்டுகொடுத்து ஏறத்தாழ அதே அளவு, அதேமாதிரி ஒன்றுக்கும் பிரயோசனமில்லாமல் ஒரு ரிசல்ட்டை வாங்கியிருக்கிறார்.
Deleteதிமுக அதிமுக இரண்டுமே பிஜேபியுடன் மாறிமாறிக் கூட்டணி வைத்துவிட்டு இப்போது பிஜேபியுடன் சேர்ந்ததால் தான் பின்னடைவு என்று சொல்வது என்ன லாஜிக்? எந்த அளவுக்கு உண்மை?
சார்... பாஜக மோடி அவர்கள் தலைமையில் 'தீவிர இந்துத்துவத்தை' எடுத்துச் செல்வதாக பிம்பம். அவர் பிரதமரான காலத்தில் தமிழகத்தில் எத்தனை லட்சம் என்.ஜி.ஓக்கள் கடையை மூடினார்கள், மூடவைக்கப்பட்டது, மதமாற்றம் செய்ய எவ்வளவு பிரச்சனைகள் வந்தது, கடை வைத்திருப்பவர்கள், ஜி.எஸ்.டி என்ற பெயரில் கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டிவந்தது, இயல்பான இஸ்லாமியர்களிடம் இருந்த 'அச்ச உணர்வு', அதனை ஊதிவிட்ட இஸ்லாமியக் கட்சிகள் மற்றும் திமுக+காங்கிரஸ்... இவைகள்தாம் மொத்தமாக 10-12% வாக்குகளை அதிமுகவிடமிருந்து அந்நியப்படுத்தியது. ரிசல்டை கூர்ந்து பாருங்கள். நான் சொல்வதற்கு ஆதாரம், மதத் தலைவர்கள் பேச்சு, அவர்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு அனுப்பிவைத்த கடிதங்கள்-வாட்சப்பில் பார்த்தேன், தொலைக்காட்சியில் காண்பித்த, 'அதிமுக வாக்கு சேகரிப்பாளர்களை மசூதிப் பக்கம் வரவிடாதது, ஏன் பாஜகவுடன் கூட்டு வைத்தீர்கள்' என்று கேட்டது போன்றவை. நீங்களும் அவைகளைப் பார்த்திருப்பீர்கள்.
Deleteஅப்போ சென்றமுறை எப்படி பாஜக கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றது என்றால், அப்போது மோடி அவர்கள் குஜராத்தின் சாதனையை மத்தியில் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பும், தொடர்ந்த கொள்ளையடிப்புகளால், திமுக+காங்கிரஸ் அரசை மக்கள் மனதளவில் வெறுத்ததும்தான்.
Demonetisation தருணத்திலிருந்தே இங்கே மோடிக்கெதிரான விஷமப் பிரசாரமும் தொடங்கிவிட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம் நீட் தேர்வுக்கெதிரான போராட்டம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் என்று தொடர்ந்து கலவர நிலைமையை திமுக தொடர்ந்து மெயின்டைன் செய்து கொண்டிருந்தது.
Deleteஆளும் அதிமுகவோ தமிழக பாஜகவோ இந்த எதிர்மறையான பிரச்சாரங்களை எதிர்கொள்ள என்ன செய்தன ?
காலவதியான பிரதமர் என்று எல்லாம் சொன்னார்களே!
ReplyDeleteகாலாவதியானது யார் என்பதைத் தேர்தல் முடிவுகளும் காலமும் சொல்லிவிட்டதே!
Delete