திமுக நிலைமை என்னவாம்? கஸ்தூரி கலாய்க்கிறார்!

காங்கிரஸ் கட்சி தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிற ரகம் இல்லை என்பது தாத்தன் நேரு காலத்தில் இருந்தே தெரிந்த விஷயம் தான்!  ஆனால் எத்தனை பேர் அதை நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள் என்ற மிதப்பில் தவறுக்கும் மேலாகத் தவறுகளைச்  செய்து கொண்டே போகிற ஒரு மேட்டிமை மிகுந்த கட்சி அது.


எக்சிட் கணிப்புகளுக்குப் போட்டியாக, காங்கிரஸ் கட்சியும் தனியாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தவிருக்கிறதாம்! என்ன லட்சணத்தில் இருக்கும் என்று ஊகம் செய்ய முடிந்தாலும், தேர்தல் ஆணையம், EVMகள் மீது சேற்றை வாரி இறைக்கப்போகிற சதியாகவேதான் தெரிகிறது.

The Howl..
விடுங்கய்யா.பெங்கால்ல 32 வருசம் ஆண்ட கட்சி இப்போ எக்ஸிட் போல்ல கூட வர மாட்டேங்குது
ஜன நாயகத்தில எல்லாம் சாத்தியம்.
அவ்வ்வ்.....         
கவிஞரே! காங்கிரஸ்காரனுக்கு மட்டும் அது மண்டையில் ஏற மாட்டேனென்கிறது என்பதுதான் பிரச்சினையே!  

Pseudo Seculars கருத்து சொல்ல வந்தால் இப்படித்தான் பல் இளிக்குமாம்! லல்லுவோடு இருந்தவரை நிதீஷ் குமார் சிக்குளர்! லல்லு சங்காத்தம் வேண்டாமென்று ஒதுங்கிய பிறகு என்ன சொல்கிறார்கள் என்று கவனித்துப் பாருங்கள்!
கமலின் ‘நாக்கு’ நாடகம்?
நாதுராம் கோட்சே பற்றி கமல்ஹாசன் எதற்குப் பேசுகிறார் என்று யாருக்குமே முதலில் புரியவில்லை. ஆம், அரவக்குறிச்சி இடைத்-தேர்தலுக்கு பள்ளப்பட்டியில் பிரசாரம் செய்த கமல், ‘‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இதை நான் சொல்லவில்லை. இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே! நான் காந்தியின் கொள்ளுப்பேரன். நீதி கேட்க வந்திருக்கிறேன்’’ என்று பேசினார். இப்போது எதற்காக கோட்சேவை இழுக்கிறார், யாரிடம் நீதி கேட்கப் போகிறார் என்று யாருக்கும் புரியவில்லை என்றாலும், கமல் பேசியதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், கமல் இப்படி குண்டக்க மண்டக்க பேசுவது சகஜம்தான்.   

காங்கிரசும் அடிமைகளும் என்னதான் அழுது புரண்டாலும் தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் கொந்தளித்துக் குதித்தாலும் ஜனங்கள் கொஞ்சமும் சட்டை செய்யப்போவதில்லை என்பதாவது புரிந்தால் சரி! சுமந்த் சி ராமன் என்னவோ வித்தியாசமான கதை சொல்கிறார்.

என்னத்த சொல்லி என்னத்த செய்ய?
ஒட்டுறதுதானே ஒட்டும்   


காங்கிரசோடு கூட்டணிவைத்த திமுக நிலைமை என்னவாம்? 

கஸ்தூரி ட்வீட்டரில் இப்படிக் கலாய்க்கிற அளவுக்குத் தான் திமுக இருக்கிறதென்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

மீணடும் சந்திப்போம்.


  

2 comments:

  1. கஸ்தூரி கணிப்பு : எடப்பாடி ஈஸியா சமாளிச்சுருக்கார்.

    சுமந்த் வி ராமன் நீ..............ளமாகப் பேசுகிறார்!

    ReplyDelete
    Replies
    1. சுமந்த் சி ராமனுக்கு காங்கிரஸ் கட்சி என்னமாவாது செய்து 23 ஆம் தேதி இந்தக் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கிவிடுமென்று ஒரு நப்பாசை இருக்கிறது போல, ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!