H ராஜா கணிப்பு! Fail ஆன நீதிபதிகள்! கதறும் கி வீரமணி!

நண்பர்  நெல்லைத்தமிழன் இங்கே என்னுடைய அரசியல் பதிவுகளில் தேர்தல் கணிப்புகளில் மாறுபட்ட கருத்தைத் தொடர்ந்து சொல்லி வருகிறார். அப்படி மாறுபடுவதில் தவறொன்றுமில்லை.   அரசியல் நிகழ்வுகளை என்னதான் தொடர்ந்து கவனித்து வந்தாலும், இது இப்படித்தான் இருக்கும் என்று கணிப்பது மிகவும் கடினம். அதுவும் வெளிப்படையாகத் தங்கள் எண்ணத்தை மறைப்பதோடு மட்டுமல்லாமல் குண்டக்க மண்டக்க என்னத்தையாவது சொல்லிக் குழப்பிவிடும் ஜனங்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி, சரியாகக்  கணிப்பது என்பது இன்னமும் கடினம். 

ராஜாவை மதிப்பிட ஜாமீன் வாரிசையும் மதிப்பிட்டாக வேண்டும்  

ஒரு வேட்பாளராகவும் , மோடி மாதிரியே தமிழகத்தில் வெறுப்பரசியலைக் கண்டு அஞ்சிப்  பதுங்கி விடாமல், எதிர்நீச்சல் போட்டுவரும் பிஜேபியின் தேசியச் செயலாளர் திரு H ராஜா இந்தத் தேர்தலைப் பற்றி என்ன சொல்கிறார்? அவருடைய முகநூல் பகிர்வாக ஏப்ரல் 30 அன்று சொன்னது;



தேர்தல்கள் முடிந்து விட்டன. பல கருத்துக் கணிப்புகள், கணிப்பு என்கின்ற பெயரில் திணிப்பு முயற்சிகள் பல நடந்துள்ளன. முடிவுகள் வரும்வரை காத்திருப்போம்.
ஆனால் செல்வி.ஜெயலலிதா அவர்களும் திரு. கருணாநிதி அவர்களும் இல்லாத முதல் தேர்தல் இது. இத்தேர்தல் பல முந்தைய வாக்கு வங்கி கணக்குகளைத் தகர்த்திருக்கும். Motivated media கணக்குகள் பொய்யாக மாறும். மோடி எதிர்ப்பு ( வெறுப்பு) பிரச்சாரம் எடுபடாமல் போயிருக்கும் என்பதே என் கணிப்பு.

இத்தேர்தலின்போது நான் 22 நாட்கள் நாளொன்றிற்கு 30 முதல் 50 கூட்டங்கள் பேசியுள்ளேன். குறைந்தபட்சம் 780 கூட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். குறைந்தபட்சம் 4.5 லட்சம் வாக்காளர்களை நேரில் சந்தித்துள்ளேன். இதில் நான் பார்த்த, உணர்ந்தவைகள்.

1. வங்கிக் கணக்குகள், கழிவறை திட்டங்கள், சமையல் எரிவாயு திட்டம், பிரதமர் வீட்டுவசதித்திட்டம், விபத்துக் காப்பீடு திட்டம், சிறு குறு விவசாயிகள் நிதி உதவி திட்டம் ஆகியவை மோடி சர்கார் திட்டங்கள் என மக்கள் உணர்ந்துள்ளனர்.

2. கீழ் மட்டத்தில் அஇஅதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது.

3. திமுக தலைவர் ஸ்டாலினின் இந்து விரோத பேச்சுக்கள் மற்றும் திக வீரமணியின் கிருஷ்ணபகவான் குறித்த அருவருப்பான பேச்சு இந்துக்களிடையே குறிப்பாக கிராமங்களில் முகச்சுளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

4. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

5. மோடிஜி யின் ஊழலற்ற திறமையான மத்திய அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற உணர்வை மக்கள் முகத்தில் அறிய முடிந்தது.

எனவே புதிய வாக்கு வங்கிக் கணக்கு இத்தேர்தல் மூலம் உருவாக்கப்படும் என்றே தோன்றுகிறது
ஆக இந்தத் தேர்தல் கணிப்புகளுமே நிறைய மாறுதலுக்கு உட்பட்டவை என்பதை நெல்லைத்தமிழனுக்குச் சொல்லிக் கொள்ள ஆசை!  

இது நடந்தது தமிழகத்தில் தான் என்பதை மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கி கொள்கிறேன். கட்டப்பஞ்சாயத்தே மேல் என்று கமெண்ட வேண்டாம் என்றும் மன்றாடுகிறேன்.
யாருப்பா அது வீரமணியைக் கதற விட்டது? 

அது நான்தான் என்று முகநூலில் சொல்கிறார் Ananthakrishnan Pakshirajan
பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுக்கப்பட்டது என்பதற்கு யுனெஸ்கோ வலைத்தளத்தில் ஆதாரம் இல்லை என்று முதலில் குறிப்பிட்டது நான்தான் என்று நினைக்கிறேன். என் சுவற்றில் அவருக்கு விருது வழங்கப்பட்டதாக படித்த நினைவு எனக்கும் இருக்கிறது, ஆனால் யுனெஸ்கோ வலைத்தளம் அவ்வாறு சொல்லவில்லை என்று பதிவிட்டிருந்தேன்.
இன்று வரை பெரியாரியர்கள் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.
யாரோ இதைப் பற்றி விக்கிபீடியாவில் வந்த பதிவைத் திருத்தி விட்டார்களாம். கொதித்தெழுந்து திரு வீரமணி ஒரு பதிவை இட்டிருக்கிறார். பதிவிலும் யுனெஸ்கோவிலிருந்து ஆதாரம் ஏதும் இல்லை. பெரியாருக்கு விருதுப் பத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால் அதையாவது வெளியிட்டிருக்கலாம். அதையும் செய்யவில்லை. பெரியார் விட்டுச் சென்ற ஆவணங்களில் காவலர் திரு வீரமணிதானே? அவர் வெளியிட்டிருக்கும் படத்தில் இருக்கும் பட்டயம் International Education Year 1970 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வருடத்தை ஐக்கியநாடுகள் நிறுவனம் உலக கல்வி வருடமாக அறிவித்தது என்பது உண்மை. ஆனால் அதற்காக எந்த விருதையும் ஐநாவோ அல்லது யுனெஸ்கோவோ அறிவித்ததாகத் தெரியவில்லை.
விருது பெரியாரை Socrates of South East Asia என்று அழைக்கிறது என்று திரு வீரமணி சொல்கிறார். இந்தியாவிற்கு தென்கிழக்கு ஆசியாவிற்கும் என்ன தொடர்பு? யுனெஸ்கோ இந்தத் தவறைச் செய்யுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. கேள்விகளுக்குப் பதில்கள் அளிப்பது திரு வீரமணியின் கடமை. ஆனால் அவர் பெரியாரியப் பாணியில் பதில் சொல்லியிருக்கிறார்.
திரு வீரமணியின் பதிவில் சில வரிகள்:
"பார்ப்பனர்களைப் பிறவிக் குற்றவாளிகள் என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய உண்மை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்."
"பார்ப்பனர்கள் என்றாலே ஒரு கிரிமினல் கும்பல் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலந்தாழ்ந்தாவது தமிழர்கள் உணரவேண்டும்."
விக்கிபீடியாவைத் திருத்தியவர் ஒரு பிராமணர் என்று இவர் நினைப்பதால், எல்லாப் பிராமணர்களைப் பற்றியும் இவர் எழுதியிருப்பது
எல்லா முஸ்லிம்களும் மனிதவெடிகுண்டுகள் என்று சொல்வது போன்றது இது.
திராவிடர் கழகமும் அதன் மூலவர் பெரியாரும் அப்பட்டமான நாசி இனவெறியர்கள் என்பதை திரு வீரமணி தெளிவாகச் சொல்கிறார்.
தமிழகத்தில் இருக்கும் ஊடகச் சண்டியர்கள் எந்த அற உணர்வும் இல்லாத நாசி இனவெறியர்களா, அல்லது நாசி இனவெறியர்கள் தரும் கூலிக்கு வேலை செய்பவர்களா அல்லது தாங்கள் செய்யும் தொழிலுக்கு சிறிதளவாவது நன்றியோடு இருப்பவர்களா என்பது அவர்கள் திரு வீரமணியின் பதிவை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.
பதிவுகள் பொழுதுபோக்குவதற்காக மட்டுமில்லை! சிந்திக்க வைப்பதற்கும் தான்! மேலே உள்ள கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறோம்?    

   

15 comments:

  1. //இது நடந்தது தமிழகத்தில் தான் என்பதை மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கி கொள்கிறேன்// - ஆசிரியர்களுக்கும் இதுபோல தேர்வு வைக்கணும், அதிலும் 10 வது வகுப்பு வரை-தொடக்கப்பள்ளியிலிருந்து. அதுவும் பல செய்திகளைச் சொல்லும்.

    ReplyDelete
  2. கி.வீரமணி ஒரு அல்லக்கை.... சொத்துக்களைத் தன் குடும்பச் சொத்துக்களாக்கிக்கொண்டவர். அவருக்கு கொள்கையாவது மண்ணாவது... சமீப காலமாக திமுகவுக்கு எடுபிடியாக இருக்கின்றார். சில வருடங்கள் அதிமுகவுக்கு எடுபிடியாக இருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. சேய்க்கழகத்திடமிருந்து தாய்க்கழகம் கற்றுக்கொண்ட வித்தை என்று கொஞ்சம் கௌரவமாகச் சொல்லக் கூடாதா? :)))

      Delete
  3. please read Otthisaivu Ramasamy blog. you can get correct information.

    ReplyDelete
    Replies
    1. ஒத்திசைவு பதிவுகளை படிக்கிறேன் என்பது வேறு விஷயம். ஆனாலென்னுடைய கருத்துக்களை என்னுடைய யோசனையில் தான் உருவாக்கிக் கொள்கிறேன்.

      Delete
    2. I mentioned about this blog only for Unesco matter. he has given a proper reply.

      Delete
    3. நன்றி திரு கோபால்சாமி! முகநூலில் இந்த யுனெஸ்கோ விருது பீலா பற்றி இன்னும் அதிகத் தகவல்கள் கிடைக்கின்றன. அவைகளிலிருந்து .ஒருகோடி காட்டுவதோடு நிறுத்திக் கொள்வதே உத்தமம்

      Delete
  4. தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிப்பது, ஜாதி, மத, இன, பண அடிப்படையில்தான். முடிவுகள் வரும் நாள் வரை எதையும் தீர்மானமாக சொல்லிவிடமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. "ஏதாவது பெரிய பிரச்சனைகள் நடக்காத/இல்லாத வரையில்".... உதாரணமா ராஜீவ் காந்தி கொலை, ஜெ.வின் 91-96 வெறுப்பைத் தரும் ஆட்சி, 2009-2014 மத்தியில் எதை எடுத்தாலும் ஊழல் நிறைந்த ஆட்சி என்பன போன்று...

      Delete
    2. கௌதமன் சார்! H ராஜா சொல்வதன் சாரமே இந்தத் தேர்தலில் பழைய மதிப்பீடுகளெல்லாம் மாறும் என்பதுதான்!

      நெல்லை! இப்படிச் சொல்கிற நீங்களே #ஜெ பற்றிக் கொஞ்சம் உசத்தியான மதிப்பீட்டைச் சொன்னதும் நடந்திருக்கிறதே!

      Delete
    3. //#ஜெ பற்றிக் கொஞ்சம் உசத்தியான மதிப்பீட்டைச் // புரியலையே கிருஷ்ணமூர்த்தி சார்.

      Delete
    4. #ஜெ உடல்நலத்தோடு/ஆயுளோடு இருந்திருந்தால் 37 எம்பிக்களை வைத்து சாதித்திருப்பார் என்று சொன்னதாக ஞாபகம்!

      Delete
  5. சம்பவம் 1 :

    பெரியார் பறைச்சி ரவிக்கை குறித்து பேசிய விவகாரத்தை குறித்து விவாதம் உருவானது, அவர் உண்மையாகவே பேசியது என்ன? அதற்கான எதிர்வினைகள் என்ன? அன்னை மீனாம்பாள் அதை கடுமையாக எதிர்த்ததாக சொல்கிறார்கள், அதற்கு பெரியார் தான் பேசியது தவறாக சொல்லப்பட்டது என்று மறுப்பு சொன்னதாகவும் சொல்கிறார்கள், இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

    ஆனால் இச்சம்பவத்தை கொண்டு பெரியாரை மதிப்பிழக்க செய்ய பயன்படுத்திக்கொண்டது திமுகவும் முரசொலியும் தான். பெரியாரை கடுமையாக சாடி திமுக காரர் சி.பி.சிற்றசு 25.11.61 ல் சென்னை நுங்கம்பாக்கம் ஏரிக்கரைத்திடலில் பேசினார், இது அடுத்த நாள் முரசொலியில் செய்தியாகவும் வெளிவந்தது, பெரியாரை கேலிச்சித்திரமாக கார்டூனாகவும் வரைந்தார்கள்.

    திமுகவை கேள்வி கேட்பவர்களை எல்லாம் பார்ப்பனிய அடிமைகள் என்று பட்டம் சுமத்தும் இன்றைய நாளின் விதியிலிருந்து திமுகவின் பெரியார் எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து அன்றைய திமுக பார்ப்பனிய அடிமைகளின் கூடாரம் என்று சொல்லிவிடக்கூடுமோ?

    சம்பவம் 2 ;

    கடுமையான அதிமுக / ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறார் திராவிட கழக ஆசிரியர் கி.வீரமணி, அக்காலகட்டத்தில் "பெட்டி வாங்கிக்கொண்டு பேசுகிறார் வீரமணி" என்றார் திமுக தலைவர் மு.கருணாநிதி, அத்தோடு மணி ( Money ) என்பது அவரது பெயரிலேயே இருக்கிறது என்றும் சொன்னார்.

    இதற்கு எதிர்வினையாற்றிய கி.வீரமணி, "என்னையொன்றும் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவன் என்று யாரும் சொல்லவில்லையே?" என்று சொல்கிறார் வீரமணி, அத்தோடு "இத்தனை ஆண்டு காலம் திமுகவை ஆதரித்தோமே, எத்தனை முறை பெட்டி கொடுத்தார் கருணாநிதி?" என்றும் பதிலுக்கு கேட்டார்.

    சம்பவம் 3 :

    திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்படுகிறார், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் தமிழிகத்திலுள்ள நடுநிலை நக்கி மக்கள் கூட அந்த கைதை பார்த்து பரிதாபப்பட்ட நிலை, ஆனால் அந்த கைதை வீரமணி வரவேற்றார், ஜெயா டிவி தொலைக்காட்சியிலும் அதை ஆதரித்து பேசினார், அத்தோடு நில்லாமல் ஜெயா தொலைக்காட்சியில் "உண்மை வீடியோ" என்று வெளியிடப்பட்ட தொகுப்புகளை திடலில் ஒளிபரப்பவும் செய்தார்.

    இந்த மூன்று சம்பவங்கள் சில உதாரணங்கள் தான், தினசரி நாளிதழின் அடிப்படையில் இன்றைய Political Correctness இணைய காலத்திலிருந்து அணுகினால், ஏராளாமான திமுக குறித்த சுவாரசியமான தகவல்கள் / சண்டைகள் கிடைக்கும். விவரம் அறிந்தோர் பலர், இதையெல்லாம் தெரிந்து தான் வேறு வழியில்லாமல் இருக்கிற கட்சியில் வெற்றிபெறக்கூடிய கட்சியாக திமுகவை ஆதரித்து வருகிறார்கள் என்பதை மறந்து, ஆதரவு என்பது உள்ளங்காலை நாக்கால் வருடுவது என்று உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

    அரசியலில் பிழைப்போர் இதையெல்லாம் கடந்து செல்லக்கூடியவர்கள், கே.என்.நேரு ரெட்டியார் சங்க கூட்டத்துக்கு போவார், ஜெகத்ரட்சகன் வன்னியர் சங்க கூட்டத்துக்கு போவார், பார்பனீயவாதிகளை குளுமை படுத்துவார், ஆழ்வார் மையம் நிறுவுவார், ஆண்டாள் புகழ் பாடுவார், ஒவ்வொருவரும் பதினைந்து கம்பெனிகளுக்கு மேல் உரிமையாளர்களாக, கல்வித்தந்தைகளாக, முதலாளியாக இருப்பார்கள், ஒரு குறையுமில்லை, கொழிக்கட்டும்.

    ஆனால் இத்தனை பிழைப்பு வாதத்தையும் அறிவுத்தளத்திலிருந்து நியாயப்படுத்துவதும், அதுவே சரியென்று நிறுவுவதும், அறிவுஜீவிகள் துணைவேந்தர் பதவி எதிர்காலத்தில் கிடைக்காதா என்று துதி பாடுவதும், விமர்சிப்போரை Character assassination செய்து அப்புறப்படுத்த நினைப்பதும், அறிவுச்சமூகத்திற்கு அழகல்ல, இதற்கெல்லாம் எதிர்வினையாற்றாமல் கடப்பதும் அறமல்ல.

    வாசுகி பாஸ்கர்

    ReplyDelete
    Replies
    1. //பெரியாரை கேலிச்சித்திரமாக கார்டூனாகவும் வரைந்தார்கள்//

      அந்தக் கார்ட்டூனை கூகிள் ப்ளஸ் பக்கங்களில் எடுத்துக் போட்டிருந்ததில் .சிலகாலங்களுக்கு முன் நண்பர் கோவி. கண்ணனுக்கும் எனக்கும் பெரிய கருத்துப் போராட்டமே நடந்தது. வாசுகி பாஸ்கர் பதிவை ஏகப்பட்டபேர் மறுபகிர்வு செய்திருந்ததையும் பார்த்தேன் ஜோதிஜி! .

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!