சண்டேன்னா மூணு! அரசியல்! அனுபவம்! காமெடி டைம்!

இந்தத் தேர்தலின் மொத்த விசேஷமே ராகுல் காண்டியை குடும்பத்தோடு கதற விட்டுக் கொண்டிருப்பதுதான் என்றால் என்ன சொல்வீர்கள்? என்ன சொல்ல இருக்கிறது?

ராகுல் கரண்டியின் வெளிநாட்டுக் குடியுரிமை பற்றி ஹிந்து நாளிதழ் உச்சநீதிமன்றம் 2015 இல் சொன்னதைக் கொஞ்சம் திரித்துப் போட்டது காலத்தின் கோலம். இதே ஹிந்து என் ராம் நாங்கள்தான் bofors ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தோம் ராஜீவ் காண்டியின் கறைபடிந்த கைகளை அம்பலப் படுத்தினோம் என்று அந்த நாட்களில் காலரை நிமிர்த்தி விட்டுக் கொண்டது,பாவம் அவருக்கே மறந்து போயிருக்கும்!

மிஸ்டர் க்ளீன் என்ற  இமேஜ் இத்தாலியக்காதல் மனைவியால் பறிபோன கதையை நேற்று பிரதமர் நரேந்திரமோடி ஞாபகப் படுத்தியதும் ராகுல்காண்டிக்கு அழுகாச்சி வந்துவிட்டது போல! ட்வீட்டரில் அழுகிறார்! இப்போது ஹிந்து என் ராமும் கூடச் சேர்ந்து அழுவாரா என்ன?  


  • Modi Ji, The battle is over. Your Karma awaits you. Projecting your inner beliefs about yourself onto my father won’t protect you. All my love and a huge hug.  
    Rahul
    11:15 AM · May 5, 2019 · Twitter for iPhone

    சோனியா வாரிசுகள் இப்போது ஒவ்வொரு விவகாரமாக கோர்ட் வாசற்படியேறி ஜாமீனில் வெளியே இருக்கிற போதே இந்த அளவுக்கு இருக்கிறதென்றால்........!!


    நாங்களும் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினோமாக்கும்!என்று காங்கிரசுக்கு திடீர் ஞாபகம் வந்து சொன்ன பொய்யை இங்கே தமிழ்நாட்டு ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை! போதாக்குறைக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒரு மனு, காங்கிரசின் பொய்யை துகிலுரித்துக் காட்டிவிட்டது. காங்கிரஸைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அலுப்பு வந்துவிடும் என்பதால், கொஞ்சம் தமிழ்நாட்டு சமாசாரங்களையும் பேசுவோமா?

    புதிய தலைமுறை சேனல் நெறியாளர் கார்த்திகேயனுக்கு என்ன பிரச்சினை என்று யாருக்காவது புரிகிறதா? பிஜேபியை எப்படியாவது கார்னர் செய்யவேண்டுமென்பது சேனலுடைய, அவருடைய அஜெண்டாவாக இருக்கலாம். அதற்காக ஒருவர் பேசுவதைத் தொடர்ந்து இடைமறிப்பதென்பது என்ன உத்தி? என்ன நாகரிகம்?

    மீண்டும் சந்திப்போம்.
        

    No comments:

    Post a Comment

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!