சண்டேன்னா மூணு! அரசியல்! தட் வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன? மொமன்ட்!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்காகக் கூவுகிற ஊடகங்களுடைய பிரதான வேலை என்னவாக இருந்திருக்கும் என்று கண்ணை மூடி ஒருநிமிடம் யோசித்துப் பாருங்களேன்!

இசுடாலின் முன்னிறுத்தியபடி இந்தத் தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டி நரேந்திர மோடிக்கும் ராகுல் காண்டிக்கும் என்றா?  அல்லது சில மாநிலக்கட்சிகள் ஆசைப் படுகிற தட் தேவே கவுடா தருணம் நிஜமா கனவா என்றா?  அல்லது இங்கே பலமுறை சொன்ன படி நரேந்திர மோடி வெர்சஸ் Who என்பதற்குப் பதிலா? இதில் எதுவுமே இல்லை என்றால், காசுக்குக் கூவுகிற ஊடகங்களை விடுங்கள், உண்மையில் காங்கிரசின் நிலைதான் என்ன?  
       



The Quint  இணைய இதழ் என்ன சொல்ல வருகிறதாம்? ஏதாவது புரிகிறதா என்று கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்!  மே 23 அன்று முடிவுகள் என்னவாக வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும்! அரசியல்வாதியாக ராகுல் காண்டி வயசுக்கு வந்துவிட்டார்; ஒரு தலைவராகவும் உருவெடுத்துவிட்டார்!  
காங்கிரசுக்கு இப்போது தலையாய பிரச்சினையாக இருப்பது  ராகுல் மீதிருக்கிற பப்பு (சிறுபிள்ளைத்தனமானவர்) இமேஜ் மாறியாக வேண்டும், அவர் வயசுக்கு வந்துவிட்டார், தலைமை தாங்கத்  தயாராகி விட்டார் என்ற தகவலை நாட்டு மக்களுக்குக் கொண்டு சேர்த்தாக வேண்டும்! அவ்வளவுதான்! இந்தத் தேர்தலில் மோடி  ஜெயித்தால் என்ன? இப்படியாக இருக்கிறதோ? பப்பி பிரியங்கா கூட  உத்தரப் பிரதேசத்தில் இந்தத் தேர்தலில் அத்தனை அக்கறை காட்டுவதை விட 2022 சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரசுக்கு அதிக சீட் வாங்கித் தருவது என்றுதான் பாடு படுகிறாராம்! 

காங்கிரஸ் கந்தாயத்தை இதற்குமேல் விவரித்தால் கதை கந்தலாகிவிடும்! ஆனால் 2015 இலேயே துக்ளக் இப்படி அட்டைப் பட நையாண்டி  செய்திருக்கிறது 
       


கமல் காசர்! அரசியல் வெளிக்குள் வந்தபிறகும் இன்னமும் புரியாத புதிர்தான்! தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த கையோடு BiggBoss 3வது சீசன் வேலைகளில் பிசியாகியிருப்பது, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியலில் நீடிப்பாரா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.


அரசியல் அவதாரம் அவ்வளவுதானா என்ற கேள்விக்கு, இங்கே விவாதத்தில் பங்குகொண்டவர்கள் அப்படியில்லை என்றே பதில் சொல்வதையும்  கவனிக்க வேண்டியிருக்கிறது.


  • An Indian Army report underscores how military pressure on Pakistan is yielding results: Since mid-February, “no attempt to infiltrate terrorists into India” and “no cross-border tactical action." Moreover, Pakistan's "terror infrastructure near border has been temporarily shut."
    12:37 PM · May 11, 2019 · Twitter Web App
    Pakistani military, fearing Indian reprisal strikes, has moved terrorist training camps from the India border to Pakistan’s heartland. But as the Indian airstrike on the Jaish-e-Mohammed's lair in Balakot underscored, moving camps deep inside Pakistan is no guarantee of security.

    மீண்டும் சந்திப்போம்.        

    No comments:

    Post a Comment

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!