திமுக ஆதரவாளர்கள் தடுமாறுகிறார்கள்! நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பில்லையே என்கிற சிறு விஷயத்தை எப்படித் திசைமாற்றுவது என்று தவிக்கிறார்கள். #ModiGoback என்று கருப்பு பலூன் ஊதியவர்கள், ஐயோ மோடி அழைக்கவில்லை, தமிழ்நாட்டை அவமதித்துவிட்டார், தமிழ் நாடு புறக்கணிக்கப்படும் என்பதற்கான அறிகுறி என்றெல்லாம் புலம்பித்தவிப்பது, கேவலமாக இருக்கிறது.
அழைப்பு வந்திருந்தாலும் இசுடாலின் என்ன செய்திருப்பார்? திமுகவின் சார்பில் TR பாலு மற்றும் இன்னொருவர் கலந்து கொள்வார்கள் என்று திமுகதரப்பே செய்தி பரப்பியதே, அதற்கு என்ன சொல்வார் சுபவீ என்று பார்த்தால் செட்டியார் முழுப்பூசணியையும் வாதத்தால் மறைத்துப் பசப்புகிறார்.
காத்திருந்து காத்திருந்து... ஸ்டாலின் `அப்செட்!'- பதவியேற்புக்கு மோடி அழைக்காததற்கு என்ன காரணம்? விகடன் என்னமோ புருடா விடுகிறதே!
ஆந்திரா மாநிலத்தின் புதிய முதல்வராக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸைச்சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். அவரது பதவி ஏற்புவிழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்கிறது விகடன் தளச் செய்தி. ஆனால் இசுடாலினுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு ஜெகன் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட அழைப்பை நிராகரித்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன.
அரசியலில்மட்டுமல்ல பொதுவாகவே மரியாதை என்பது கொடுத்து வாங்கப்படுவது, கேட்டு வாங்குவதல்ல என்பதை சுபவீ செட்டியார்களுக்குப் புரிய வைக்க முடியாதா என்ன? #Prayforsubavee
முகநூல் ட்வீட்டர் எங்கு பார்த்தாலும் ஒரே நேசமணி புராணம்!
தமிழன் வீணாய்ப்போவதற்கென்றே வெட்டி அலம்பல்கள்! சுபவீ செட்டியார்கள் கடைதிறப்பதற்கு வேறென்ன வேண்டும்? சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
சுபவீ எப்போதுமே திமுக- க்கு ஜால்ரா போடுவது தான் வேலை
ReplyDeleteபைத்தியங்கள்தான் திமுகவுக்கு அழைப்பிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கும். ஸ்டாலின் பேசாத பேச்சா? அவருடைய அளவுக்கு அவரை ஜெகன் ரெட்டி அழைத்ததே பெரிசு."ஸ்டாலினுக்கு அழைப்பில்லை" என்று புலம்புகிறவர்கள் திமுகவின் அல்லக்கைகள்தானே. அவங்களுக்கு ஸ்டாலின் காலைக் கழுவாவிட்டால் வேறு என்ன வேலை இருக்கு?
ReplyDeleteகாத்திருந்து ஏமாந்ததாக விகடன் புருடாவுக்கு லிங்க் இருக்கிறதே நெல்லை! சுபவீ பேசுவது வரும்படிக்குத்தான் என்பது ஊரறிந்த ரகசியம்!
Deleteஸ்டாலினைப் புறக்கணிப்பது தமிழகத்தைப் புறக்கணிப்பது போலவா? இது என்ன புருடா? எங்க அழைப்பிதழ் வந்தால் தன் மகனைக் கூட்டிக்கொண்டு டெல்லி சுற்றிக்காட்டலாம் என்று நினைத்தாரோ?
ReplyDeleteஅந்தநாட்களில் DK பரூவா என்கிற காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான் இந்திராதான் இந்தியா இந்தியாதான் இந்திரா என்று உளறியதுண்டு. அதே உளறலை இசுடாலினைக் குஷிப்படுத்த இங்கே சில ஓசிச்சோறு தண்டங்கள் கையிலெடுத்திருப்பது ஆரோக்கியமான விஷயமில்லை.
Delete