இந்திய அரசியல் அரங்கம் இன்று! அஞ்சறைப்பெட்டி

காங்கிரஸ்காரன் நிலைமை மாவு விற்கப்போனால் சூறாவளி வீசுகிறது உப்பு விற்கப்போனால் கனமழை கொட்டித் தீர்க்கிறது என்ற வழக்கைவிடப் பரிதாபமாக இருப்பதுதான் இந்தத் தேர்தலின், எக்சிட் கணிப்புகளின் விளைவாக இருக்கிறது. தேர்தல் கமிஷன் மீது பழியைப் போட்டு, தோல்விக்கான சப்பைக்கட்டு கட்டலாம் என்று பார்த்தால் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்று சர்டிபிகேட் கொடுத்து காங்கிரசின் அற்பதிருப்தியையும் கெடுத்திருக்கிறார்.  


நேற்று டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரணாப், “இந்தியாவில் நிறுவனங்களை வலுப்படுத்த விரும்பினால், இந்த நாட்டில் நிறுவனங்கள் நல்ல முறையில் செயல்படுகின்றன என்பதை நினைவில்கொள்ள வேண்டும். அதேபோல, இத்தனை ஆண்டுகளாக நம் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது என்றால், அதற்குத் தேர்தல் ஆணையம் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கிறது. 
பிரணாப் முகர்ஜி
தொடக்கத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுகுமார் சென் முதல் தற்போது தேர்தல் ஆணையராக இருப்பவர்கள் வரை அனைவரும் சிறந்த முறையில் தங்களின் பணிகளைச் செய்துள்ளனர். தேர்தல் ஆணையர்களை நீங்கள் விமர்சிக்காதீர்கள்; அவர்கள் சரியாகவே செயல்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து, காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Congress spokesperson PL Punia, however, has said that he did not think that the former president was "aware" of the incidents of the poll panel giving a clean chit to Prime Minister Narendra Modi for every alleged violation. "The Election Commissions, over time, have always done a good job...but this Election Commission has given a clean chit to the prime minister on almost every violation...Today 21 parties will be meeting the Election Commission and we hope that they take cognizance of the matter... I don't think former president Pranab Mukherjee is aware of most of the incidents," he told News18. பிரணாப் குமார் முகர்ஜியைப் பற்றித் தெரிந்தவர்கள் எவரும் அவருடைய அரசியல் நிலவரத்தை கிரகித்துக் கொள்ளும் திறனைச் சந்தேகப் பட மாட்டார்கள்.   


ஹிந்துநாளிதழில் சுரேந்திரா இன்று வரைந்த கார்டூன் இது. இரு நாட்களுக்கு முன்னால் கேலி செய்தவர்கள் கூட இன்று வரிசையில் நிற்கிறார்களாம்! தூரிகையின் கற்பனை வலிமை மிகுந்ததுதான்! தூரிகைக்கும் கூட அரசியல் கள யதார்த்தம் புரிகிறதென்று எனக்குப் படுகிறது.  


திமுகவின் கோரிக்கைகளைக் கருணையோடு சென்னை உயர்நீதி மன்றம் கேட்கிற மாதிரி, உச்ச நீதிமன்றமும் செய்யுமா என்ன?

கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இன்று கலந்து கொள்ளவில்லை. தேவே கவுடாவின் JD(S),   பிஜு ஜனதா தளம்  இரண்டும் பிஜேபிக்கு தூதுவிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.


நேற்றைக்கு பிஜேபியின் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் முதலானோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்கத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட விவரங்களை மனுவாகக் கொடுத்து, வன்முறை நடந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் எப்படி முடிவெடுக்கப் போகிறதோ? எப்படியாகினும் மம்தா பானெர்ஜி தலைக்குமேல் கத்தி தொங்குவது நிஜம்.

நேற்றே வந்திருக்கவேண்டிய #அஞ்சறைப்பெட்டி ஒருநாள் தாமதமாக. மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!