மண்டேன்னா ஒண்ணு! சோனியா காங்கிரஸ்! ஓசி விளம்பரம்! திராவிட பாசக!

கடந்த வாரம் ஜிதின் ப்ரஸாதா என்கிற ஒற்றை ஆளுமை காங்கிரசில் இருந்து வெளியேறி பிஜேபியில் சேர்ந்த  ஒரு விஷயத்தை வைத்து சிலநாட்களாக NDTV தளத்தில் வீர் சங்வி, ராமச்சந்திர குஹா, சல்மான் குர்ஷித் என வரிசை கட்டிவந்து கருத்துச் சொல்லிக்கொண்டிருப்பது கொஞ்சம் சுவாரசியமான அக்கப்போராகத்தான் இருக்கிறது. வீர் சங்வி சோனியா காங்கிரசின் இன்றைய நிலைமைக்குக் காரணமாக சில விஷயங்களைச் சொல்கிறார். சரித்திர எழுத்தாளர் ராமசந்திர குஹா, வழக்கம்போல செயலிழந்த வாரிசுகளே தலைமையில் நீடிப்பதுதான் காரணம் என்று அடுக்குகிறார். வக்கீலாகவும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் ராகுல் காண்டிக்கு வக்காலத்து வாங்கி ராமசந்திர குஹா சொன்னதைக் கண்டிக்கிறார்.ஆம் ஆத்மி கட்சியில் இருந்த ஜர்னலிஸ்ட் அசுதோஷ் குப்தா  ஜ்யோதிராதித்ய சிந்தியா மாதிரியே ஜிதின் பிரசாதாவும் வெளியேறியது  நல்லதுக்குத்தான் என்று ஆரம்பிக்கிறார். நான்கு விதமான கருத்துக்கும்  சுட்டி அந்தந்தப்பெயர்களிலேயே இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் படித்து, இன்னும் அதிகமாகக் குழம்பலாம்! 


சதீஷ் ஆசார்யா மோடி வெறுப்பில் பைத்தியம் முற்றுவதற்கு முன்னால் வரைந்த கார்ட்டூன் இது. விஷயம் இன்னதுதான் என்பதை நச்சென்று சொல்லி விடுகிறதே!


சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரை இனிமேல்  டாஸ்மாக் வளர்த்த மதுரை என்றாகிவிடுமோ? முழுச் செய்தியையும் வாசிக்கஇந்த கார்டூனுக்குத் தனியாக விளக்கவுரை எழுதத் தேவையே இல்லை. ஆனால் இன்று காலைநடந்த கைது விவகாரத்தில் தமிழக சேனல்கள் கொடுத்திருக்கும் கவரேஜ் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பைத் தாண்டி இருக்கும் என ஒரு தோராயமான மதிப்பீடு சொல்கிறது.

#அய்யோகொல்றாங்களே விளம்பரத்துக்குப் பின் இந்த நபருக்கு இந்த அளவு விளம்பரம் கொடுத்திருப்பதில் அரசு சாதித்தது என்ன? இந்த வேடிக்கையையும் பார்த்து விடுங்கள்! 
   


திராவிட பாசக என்று இங்கே தமிழக பிஜேபி நக்கல் செய்யப்படுவது எவ்வளவு சரியானது? எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்ப்பா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க: வடிவேலு காமெடி மாதிரியே இங்கே கட்சியை நடத்துகிறார்கள் என்ற ஆத்திரத்தில் பல பிஜேபி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குமுறுவதைப் பார்த்திருக்கிறேன்.


பிஜேபியின் கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு 128 நாட்கள் சிறையிலிருந்து, சமீபத்தில்தான்  வந்திருக்கிறார். வீடியோ நேர்காணல் 42 நிமிடம். பொறுமையாகப் பார்க்க வேண்டிய ஒன்று.

மீண்டும் சந்திப்போம்.   

4 comments:

 1. இந்த செய்திகளை படித்தால் தலை சுற்றுகிறது! காங்கிரஸ் பற்றி இவர்கள் எழுதுவதை பார்த்தால் சோனியாவிற்கும் / ராகுலுக்கும் 'இன்னுமாடா எங்களை நம்புறீங்க'..ன்னு தோணும்

  மதுவை கும்பிட்டு குடிக்கும் பயித்திக்காரர்களை பற்றி என்ன சொல்வது! அவருக்கு பின் இதனால் பாதிக்கப்படும் அவர் குடும்பத்தினருக்கு அனுதாபம்...

  கனிமொழி பற்றி எழுதியதெல்லாம் குடுத்த காசுக்கு குறைப்பது போலத்தான்!

  ReplyDelete
  Replies
  1. இதில் வீர் சங்வி எழுதியிருக்கிற கட்டுரையில் கொஞ்சம் சரியான அணுகுமுறை தெரிகிறது பந்து!

   வீர் சங்வி ஒருகாலத்தில் பர்கா தத் மாதிரி சோனியா காங்கிரசுக்கு மிகவும் விசுவாசியாக இருந்து தரகராக செயல்பட்டது அம்பலப்பட்டதில் அசிங்கப் பட்டவர். இன்னமும் காங்கிரசிடம் வாங்கித் தின்பவர்தான் என்றாலும் இன்றைய நிலைமைக்குக் காரணம் பிஜேபி இல்லை, காங்கிரஸ் தலைமையிடம் தான் இருக்கிறது என்று சொல்லவும் தயங்கவில்லை. மற்ற மூவரும் எல்லாம்தெரிந்த ஏகாம்பரங்கள்!

   ஒரு மதுரைக்காரனாக அந்தக்குடிமகன் செயலைப்பார்த்து நொந்து போனவன் நான்.

   கனிமொழி தன்னுடைய இருப்பைக்காட்டிக் கொள்ள ரொம்பவே மெனெக்கெடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது சொல்லுங்கள்!

   Delete
 2. பாரதிதாசன் கார்ட்டூனுக்கான செய்தி புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நேற்று முழுவதும் ட்வீட்டரிலும் முகநூலிலும் மிகவும் பரபரப்பாக அடிபட்ட ஒரு செய்தி அதை புரியவில்லை என்கிறீர்களே ஸ்ரீராம்! :-)))

   புரியாதது கூட ஒருவிதத்தில் பாக்கியம் தான்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!