Showing posts with label ராகுல் காண்டி. Show all posts
Showing posts with label ராகுல் காண்டி. Show all posts

சண்டேன்னா மூணு! #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும்! #தோல்வியின்பிம்பம்

முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி  அடுக்க ஆரம்பித்துவிட்டார்! புரியாமல் பேசினாரா அல்லது திமுக பாரம்பரியப்படி பொய்மேல் பொய்யாக அடுக்கினாரா என்கிற குழப்பம் இந்த 43 நிமிட வீடியோ பார்க்கிற எவருக்கும் வரும்.


இந்தப்  பேட்டி வேறுபல சேனல்களிலும் வந்திருக்கலாம் ரெட்பிக்ஸைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பக்கா மோடி எதிர்ப்பு ஆசாமிகளை நம்பிப் பிழைக்கிற சேனல் என்பது மட்டுமே அல்ல. வேறெந்த சேனலிலும் இது முழுமையாக கிடைக்கவில்லை. அமைச்சரின் ட்வீட்டரில்/ சொந்த யூட்யூப் சேனலில் தான் முழுதாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

குழலி புருஷோத்தமன் முகநூலில் நச்சென்று கேள்வி எழுப்பியிருக்கிறார் 

இந்த கம்பி கட்டுற கதையெல்லாம் வேண்டாம் அமைச்சரே. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது போல பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைக்கவும். 

நீங்கள் சொல்லும் சிக்கல்கள் அதிமுக ஆட்சியில் இருந்த போதும் இருந்தது, ஆனால் அதை சொல்லி தான் அவர்கள் அடிமை அவர்களால் முடியாததை நாங்கள் செய்கிறோம் என சொல்லி வாக்கு வாங்கி வென்று இப்போது மத்திய அரசின் மீது பழி போடும் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லக்கூடாது. 

நீட் தேர்வு நீக்க முடியாது, டீசல், பெட்ரோல் விலையை குறைக்க முடியாது எனில் தெரிந்தே பொய் சொல்லி உள்ளீர்கள், பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது ஏன்? கிஷோர் கே சாமியை கைது செய்யவா பொய் சொல்லி ஆட்சியை பிடித்தீர்கள்?!

தேர்தல் வாக்குறுதிகள் சும்மா லுலுலாயிக்குச் சொல்லப் படுவது, நிறைவேற்றுவதற்காக இல்லை என்பது பாமக  ஆதரவாளரான புருஷோத்தமனுக்கும்  தெரியும். ஓட்டுப் போட்ட பாமர ஜனங்களுக்குத் தெரியுமா? இந்தப்பேட்டியில் தேதி போட்டாங்களா என்று அமைச்சர் சூடாகிக் கேட்ட வசனம் ட்வீட்டரில். செம காமெடியாகிப்போனதைத் தவிர வேறொன்றும் சாதித்தமாதிரித் தெரியவில்லை. அமைச்சர்கள் காமெடி சென்ஸ்  உள்ளவர்களாக இருக்கலாம் தவறில்லை! முழுக் காமெடியனாகவே மாறிவிடக்கூடாது இல்லையா! நாடு தாங்குமா?  . 


இந்து தமிழ்திசையை விட்டு வெளியேறிய எழுத்தாளர் சமஸ், ஊடகர் ஆகிவிட்டாராம்! சின்ன  ஊடகர் பெரிய ஊடகரைப்பற்றி நாளை பேசுகிறா!ராம் . இனி சென்னை அண்ணா நகர்  கேகே நகர் அசோக் நகரில் எல்லாம்......!! 

 


ஜெகமே தந்திரம் திரைப்படத்தில்  ஈழத்தமிழர் இயக்கத் தலைவராக வரும் சிவதாஸ் கதாபாத்திரம் கார்ல் மார்க்ஸ் புத்தகம் ஒன்றைப்படிக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கிறது. நம்மூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் புரட்சியாளர்களுக்கு திடீரென ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டதாம்! Abhinav Surya என்பவர் முகநூலில் இப்படிப்பொங்கி இருக்கிறார்.

#ஜகமேதந்திரம் உங்க "போராளி" businessக்கு "மார்க்ஸ்" முதலீடா?

போர் நடக்கும் இடங்களுக்கு ஆயுதங்களை விற்று, அதிலிருந்து வரும் காசைக் கொண்டு, போரால் பாதிக்கப்பட்டவர்களை அகதிகளாக அங்கீகரிக்க "போர்" ஒன்றை நடத்துகிறார்களா? இவர்கள் தான் "இயக்கம்" ஆ? என்ன லாஜிக் இது? இது தான் "புரட்சி"யா?

ஏகாதிபத்தியம், சுரண்டல், போர்கள், அகதிகள்,  நெருக்கடி, இனவாதம்.. இவற்றுக்கிடையேயான இணைப்பு வரை மட்டும் "புரட்சிகர" வசனங்கள் எழுத கற்றுக்கொண்ட  கார்த்திக் சுப்புராஜ், இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் "ஆயுத உற்பத்தி & விற்பனை" பொருளாதாரத்திற்கும் இடையே உள்ள இணைப்பைப் பற்றி கற்றுக்கொள்ள மறந்து விட்டாரா?

"ஆயுத உற்பத்தி" நிறுவனங்கள் போர்கள் நீடிப்பதன் மூலம் லாபம் அடைவதை மறந்து விட்டாரா? அப்படி என்றால் இந்த so-called "இயக்கம்" கூட இந்த ஏகாதிபத்திய அயுத விற்பனை சுழற்சியில் ஒரு இணைப்பு தானே? புரட்சியின் பாதையிலே நமக்கு ஆயுதங்கள் தேவையாக இருக்கலாம். ஆனால் அதை இந்த "gang"கள் "விற்பனை" செய்து தான் நாம் பெற வேண்டுமா?

கொஞ்ச நாள் முன்னாடி தான் "புலிகளின் போதை பொருள் கடத்தவில்லை" என சமூக ஊடகங்கள் அனைத்திலும் வாதிட்டு விட்டு, இன்று "புலிகள் ஆயுதம் கடத்தினார்கள்" என்று "பெருமையுடன்" காட்டும் திரைப்படத்தை பாராட்டிக் கொண்டு இருப்பது என்ன லாஜிக்? "ஆயுதம் கடத்தி விற்று அந்த காசை வைத்து இனவெறிக்கு எதிராக போராடுங்கள்" என்பது தான் மார்க்சியம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடமா?

அதிலும் அந்தக்கடைசி வரி என்னை அப்படியே பிடித்து உலுக்கிவிட்டது. மார்க்சீயத்தையும் மறந்து சகாவு EMS எழுதிக்குவித்த தத்துவ விளக்கங்களையும் துறந்து, மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கான செயல்திட்டத்தையும் மறந்து  அங்கே சோனியா காங்கிரசுக்கும் இங்கே திமுகவுக்கும் பக்கவாத்தியம் வாசிப்பதையே வாழ்நாள் பயனாகக்கருதிச் செயல்படுகிறவர்களுக்கு இங்கே வந்திருப்பது ரோஷமா என்பது புரியாமல் திகைத்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். 😰😖  


ராகுல் காண்டிக்கு நேற்று 51வது பிறந்தநாளாம்! பதிவர் சேட்டைக்காரன்  முகநூலில் இதுகுறித்து வெளியான இரு ஆங்கிலக்கட்டுரைகளைத் துவைத்தெடுத்து இருக்கிறார். சுட்டி கொடுப்பது வாசிப்பதற்காகவே என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமா? TheWire தளத்தில் நளின் வர்மா  எழுதியிருப்பது கொஞ்சம் வித்தியாசமாக! அதாவது காங்கிரஸ் கெட்டுக்குட்டிச் சுவரானதுக்கு ராகுலைக் குறை சொல்லக்கூடாதாம்! ஏனென்றால் காங்கிரஸ் 1980 களிலும் 1990 களிலும் சீரழியத் தொடங்கிவிட்டது. அதற்கு ராகுல் காண்டியைக் குற்றம் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும் என்பது அவருடைய வாதம். சிலநாட்களுக்கு முன்னால் NDTV தளத்தில் அசுதோஷ் குப்தா எழுதிய கட்டுரைக்கு லிங்க் கொடுத்து ஜூன் 14 அன்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் அசுதோஷ் கொஞ்சம் கூடததயக்கமே இல்லாமல் ராகுல் காண்டி ஒன்று தலைமைப்பொறுப்பை ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் நந்திமாதிரிக் குறுக்கே நிற்காமல் வழிவிட்டு விலக வேண்டும் என்பதைத் தலைப்பிலேயே தெளிவாகச் சொல்லி ஆரம்பித்ததுதான் சரியான பார்வையாக இருக்கமுடியும் என்று எனக்குப் படுகிறது.

The problem with Rahul Gandhi is that he thinks he is giving Modi a spirited fight on each and every issue, and that the Congress, sooner rather than later, will be the default choice. He forgets that India has changed, the default setting has been replaced by a new political algorithm. Capturing the mind space of the voter is not a weekend game but is 24x7 live streaming. Dynasts like Jitin Prasada and Scindia are happier in their cozy comfort. The surround sound of their hangers-on satisfies their false egos. Ideological commitment for them is more like candy floss, the flavour of which can be changed with the changing times and winning elections is like earning a blue tick from Twitter. இப்படி சிவப்புநிறத்தில் வேறு இரண்டு வாரிசுகள் பெயர் இருந்தாலும் சொல்வது நூற்றுக்குநூறு பொருந்துவது ராகுலுக்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால் ராகுல் காண்டி எனும் தோல்வியின் பிம்பத்தையும் சரியாக மதிப்பிட முடியும் என்றுதான் எனக்குப் படுகிறது. இதுபற்றி உங்களுடைய கருத்தென்ன என்பதை பின்னூட்டங்களில் பகி.ரலாமே 

மீண்டும் சந்திப்போம்   

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தெரியாத ராகுல் காண்டி! கள நிலவரம்!

போகிற இடங்களிலெல்லாம் RSS, பிஜேபி மீது சேற்றை வாரியிறைப்பதை ஒரு வாடிக்கையாகவே ராகுல் காண்டி வைத்திருக்கிறார். 50 வயதுக்கு மேலாகிவிட்டது. 17 வருடம் எம்பியாகவும் காலம்தள்ளி விட்டார். ஆனாலும் ராகுலுக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியல் செய்யவும் தெரியவில்லை என்பது அவரைப்  பெற்றெடுத்த சோனியா வாங்கிவந்த சாபம்! 


"இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. ஒரு சித்தாந்தம், எல்லோரும் எனக்குக் கீழே என்கிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ், மோடி, அமித் ஷாவின் சித்தாந்தம். இன்னொரு சித்தாந்தம் சகோதரத்துவம், பாசம், மரியாதை என்கிறது. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம்.என்னுடைய பிரச்சினை என்னவென்றால் இவ்வளவு தொன்மையான பண்பாட்டு, பாரம்பரியம் கொண்ட மக்களின் பிரதிநிதியான தலைவர்கள், அமித் ஷா, மோடி உள்ளிட்டோரின் காலில் விழுந்து கிடக்கிறார்களே என்கிற கோபம் எனக்கு வருகிறது". என்று நேற்றைக்கு சேலத்தில் நடந்த  திமுக கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காண்டி பேசியிருப்பதாக இந்து தமிழ்திசை செய்தி.


Congress leader Rahul Gandhi attacked Rashtriya Swayamsevak Sangh (RSS) in a tweet on 25 March claiming that it does not have the values of a family. In his column, Arun Anand talks about the cordial relationship between the Congress party and the RSS from the early 1960s and how the party's veteran leader Dau Dayal Khanna triggered the Ram Janmabhoomi movement in the early 1980s.இந்த 6 நிமிட வீடியோவில் அருண் ஆனந்த் என்கிற ஆராய்ச்சியாளர் காங்கிரசுக்கும் RSS அமைப்புக்கும் இடையில் சுமுகமான உறவே இருந்தது என்று விளக்குகிறார்.

Stanley Rajan 8ம . · தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது இல்லை ஆனால் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அடிமையாகிவிட்டார்கள் ; ராகுல்காந்தி ஒரு தேசிய தலைவனாக இல்லாமல் மதிகெட்ட நாம் தமிழர் தும்பி போல் கத்தி கொண்டிருக்கும் ராகுலை கண்டால் இப்பொழுதெல்லாம் பரிதாபம் வரவில்லை, எரிச்சலே மிஞ்சுகின்றது காங்கிரஸ் என் இப்படி நாசமானது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது திமுக, அதிமுகவின் கடந்தகால வரலாறு கூட இந்த தத்தி தலைவனுக்கு தெரியவில்லை, சரி அரசியல்தான் தெரியாது, பாட்டி தந்தை கடந்துவந்த பாதையுமா ஒருவனுக்கு தெரியாது? கருணாநிதி இந்திரவின் காலில் விழுந்து அடங்கிய வரலாறு என்ன? 1977க்கு பின் ஒரு வார்த்தை கருணாநிதி இந்திராவினை எதிர்த்திருப்பார்? மிசாவில் திமுகவினரை நொறுக்கி தள்ளி , சர்க்காரியா கமிஷனை ஏவிவிட்டு கருணாநிதியினை தன் கண் அசைவில் உருட்டி வைத்திருந்தார் இந்திரா., மறுக்க முடியுமா? அப்பக்கம் ராமசந்திரனை மிரட்டி தனிகட்சி தொடங்க வைத்தது முதல், ராமசந்திரனின் ரகசியம் அறிந்த டிஜிபி மோகன் தாஸை கொண்டும் இன்னும் ரே கமிஷன் எல்லாம் வைத்தும் அவரை கட்டுக்குள் வைத்திருந்தார் இந்திரா.ஆம், திமுக அதிமுக இரண்டுமே இந்திராவின் காலடியில் பணிந்து சுருண்டிருந்த காலங்கள் இருந்தன ‌ ராஜிவ் ராமசந்திரனை அழகாக கையாண்டார், பிரபாகரனுக்கு எதிராக அமைதிபடையினை அனுப்பிவிட்டு ராமசந்திரனோடு சென்னையில் மேடையேறும் வித்தை ராஜிவுக்கு தெரிந்திருந்தது இங்கு யார் இந்திராவினை, ராஜிவினை பகிரங்கமாக எதிர்த்தார்கள்? எல்லாம் வாய்சவுடால் விட்டுவிட்டு அவர்கள் காலடியில் கவிழ்ந்து கிடந்தார்கள் இதெல்லாம் தெரியாமல் தமிழ்நாட்டுக்கு வந்து ஜோதிமணி எழுதி கொடுப்பதை உளறும் ஒரு முட்டாள் தலைவனை தேசியவாதிகள் வன்மையாக கண்டிக்கின்றோம்.ராகுல் தமிழக அரசியல்வாதி அல்ல, அவர் அகில இந்திய அளவில் எதிர்கட்சி தலைவராக அறியபடும் பொழுது இப்படி திராவிட, தமிழ்தேசிய கும்பலை போல் பேசிதிரிவது கண்டிக்கப் பட வேண்டிய செயல். ஒன்று அவர் காங்கிரஸ் தலைவராக தேசியம் பேசட்டும், இல்லை இப்படி பேசுவதாக இருந்தால் நாம் தமிழர் கட்சியில் காங்கிரஸை இணைத்துவிட்டு பேசட்டும் எத்தனையோ முட்டாள்களை தேசிய அரசியலில் காங்கிரஸ் கண்டிருந்தாலும் ராகுல் போல மகா மோசமான ஒரு அப்பாவி முட்டாளை எங்கும் கண்டதில்லை காணவும் முடியாது இங்கு பாஜகவுக்கு சமநிலை கொடுக்க காங்கிரஸ் அவசியம், காங்கிரஸ் மீண்டெழ ராகுல் அரசியலை விட்டே அகற்றபடுதல் மகா அவசியம்

வானதி சீனிவாசனை துக்கடா அரசியல்வாதி என்று துச்சமாகப்பேசியதோடு கமல் காசரின் ம.நீ. ம நிறுத்திக் கொள்ளவில்லை. மய்யத்தின் கொக்கரிப்பு கொஞ்சமும் குறையவில்லை. 





பிஜேபி மய்யத்தின் குமரவேலுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. என்றாலும் மய்யம் அடங்குவதாக இல்லை.ஆக, கமல் காசருடைய சாயம் மெல்ல மெல்ல வெளுத்து வருகிறதே, கவனிக்கிறீர்களா?


பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கம் இதுதான் களநிலவரம் என்று இந்தப்படத்தை முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சரியாகத் தான் சொல்கிறாரா?
உங்கள் கருத்து என்னவென்பதை சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

#தனிக்கச்சேரி பீஹார் தேர்தல் களம் தரும் படிப்பினைகள்

சுவாசிக்கப்போறேங்க தளத்தில் பீஹார் தேர்தல் முடிவுகளைப் பற்றி நேற்று கொஞ்சம் எழுதியிருந்தேன். ஒரிஜினலாக இந்தப் பக்கங்களில் தேர்தல் முடிவுகள்  முழுமையாக வெளிவந்தபிறகு #தனிக்கச்சேரி வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லியிருதேன்.சில சுவாரசியமான விஷயங்கள், தேர்தல் களம் தரும் நல்ல படிப்பினைகளாகவும் இருப்பதை பேசாமல் இருந்தால் எப்படி? ஒரு தேர்தல் தமாஷாக, சிவசேனா, பீஹார் சட்ட சபைத்தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட்டு அத்தனை இடங்களிலும் தோற்றது. NOTAவிற்கு கிடைத்த வாக்குகளை விட மிகக் குறைவான வாக்குகளையே பெற முடிந்த சிவசேனா அடித்துக் கொள்ளும் ஜம்பம்/தம்பட்டம் என்னவென்று தெரிந்தால் வாய்விட்டுச் சிரிப்பீர்கள்! 

If Nitish becomes Bihar CM, credit goes to Shiv Sena: Saamana சிவசேனாவின் அதிகாரபூர்வமான பத்திரிகை சாம்னா பீற்றிக்கொள்வது இது! 


 

The Print தளத்தில் சேகர் குப்தா இந்த 25 நிமிட வீடியோவில் ஒரு ஆறு முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுகிறார் நண்பர்களை இந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். சேகர் குப்தா பட்டியலிடும் அந்த ஆறு படி
ப்பினைகள் என்னென்னவென்று சுருக்கமாகப் பார்த்துவிடலாமா? 

1. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் களத்தில் இன்றும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார்.ஜனங்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் இருக்கிறார்.

2. நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட நிறைய விஷயங்களில் நரேந்திர மோடி மீதான ஜனங்களின் நம்பிக்கை கொஞ்சமும் குறையவே இல்லை. காங்கிரஸ் கட்சி 
தொடர்ந்து நரேந்திர மோடி அரசு மீது அள்ளிவிடும் குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்வாரில்லை என்பது காங்கிரஸ் கட்சி பிரமுகர்களைத்தவிர மற்ற எல்லோருக்குமே புரிந்திருக்கிறது.

3. காங்கிரஸ் கட்சி தன்னால்  நஜீரணிக்க முடியாத அளவுக்கு கூட்டணிக்கட்சிகளிடம் சீட்டுகளைக் கேட்டுப் பெற்றாலும், அவைகளில் கால்வாசி இடங்களில் கூட ஜெயிக்க முடியாத அளவுக்கு பலவீனப்பட்டுப்போய்க் கிடக்கிறது.ராகுல் காண்டி முகத்துக்காகவோ அவர் இன்னாருடைய பேரன் என்பதற்காகவோ ஜனங்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை.ராகுல் காண்டியை ஒரு சீரியசான அரசியல்வாதியாக எவருமே பார்ப்பதற்குத் தயாராக இல்லை.

4. RJD கட்சியின் கூட்டாளிகளாக இந்தத்தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரிகள் சுமார் 16 இடங்களில் ஜெயித்திருப்பது இந்தத்தேர்தலில் இன்னொரு அதிசயம்! 70 இடங்களில் போட்டியிட்டு சென்ற  2015 தேர்தலில் 27 இடங்களில் ஜெயித்த காங்கிரஸ் இப்போது அதே 70 தொகுதிகளில் போட்டி 51 தொகுதிகளில் மண்ணைக் கவ்வியது என்பதோடு  சென்ற தேர்தலில் வெறும் 3 இடங்கள் மட்டுமே ஜெயித்த இடதுசாரிகள் இந்த முறை 16 இடங்களைப்பிடித்திருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸ் எப்படி மரணப்படுக்கையில் கிடக்கிறது என்பதை எளிதில் விளங்கி கொள்ள முடியும்.அதேநேரம்  இடதுகளின் இந்த வெற்றி வேறொரு விஷயத்தையும் கோடிட்டுக் காட்டுவதையும்பார்த் தாக  வேண்டும். பொதுவாகவே கம்யூனிஸ்டுகள் ஜனநாயக நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் நம்புவதெல்லாம் வேறுவிதமான விபரீதம்.

5. தேஜஸ்வி யாதவ்! RJD கட்சியின் லல்லு பிரசாத் யாதவின் மகன். தந்தையின் கறைபடிந்த அரசியல் பின்னணியிலிருந்து விலகி, கொஞ்சம் வித்தியாசமான அரசியல் செயல்பாடுகளுடன் களத்தில் இறங்கி இருக்கிறார். பீஹார் அரசியலிலும் தேசிய அரசியலிலும் நட்சத்திரமாக வளரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

6.ஹிந்தி பெல்ட்டில் கடைசியாக மிச்சமிருந்த பீஹாரிலும் பிஜேபி வலுவாகக் காலூன்றி இருப்பது இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சம்.தேர்தல்களம் தந்திருக்கும் படிப்பினையும் கூட. கூட்டணிபலம் எதுவும் தேவைப்படாத அளவுக்கு பிஜேபி வளர்ந்திருப்பதை பீஹார் தேர்தல் களம் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறது. நிதீஷ்குமார் பற்றித் தனியாகச் சொல்ல எதுவுமே இல்லை.

அவ்வளவுதானா?  இன்னொரு முக்கியமான படிப்பினையும் கூட இந்தத் தேர்தல்களத்தில் வெளிப்பட்டு இருக்கிறது. சிறுபான்மை மக்களுடைய காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, அவர்களுடைய வாக்குகளை அறுவடை செய்துவந்த செகுலர் கட்சிகளுக்கும் முகத்தில் அறைகிற மாதிரி அசாதுதீன் ஒவைசியின் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

What the Owaisi phenomenon tells us about the Indian Muslim mind & future of ‘secular’ parties என்ற தலைப்பில் ஒரு 24  நிமிட வீடியோவில்  சேகர் குப்தா சொல்வதில் வேறுபல சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன. நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கொஞ்சம் பார்க்கலாமே! 

ஒவைசி கட்சியின் வெற்றி நிறையப்பேரை கலங்க வைத்திருக்கிறது. உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியாமல் குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்த கதையில் வருவதுபோல தப்பும் தவறுமாக பதற ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு NDTV தளத்தில் முகுல் கேசவன் எழுதியிருக்கிற  இந்தக் கட்டுரை.Bihar Result Throws Up A New Fact - How To Ally With Owaisi   

மீண்டும் சந்திப்போம்.