பஞ்சாப் விவசாயிகள் போராட்டம், டில்லிக்குள் ட்ராக்டர் பேரணி அத்துமீறி வன்முறையில் இறங்கியதில், மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டதில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.பிப்ரவரி 1 (நேற்று) அன்று நாடாளு மன்றத்தை நோக்கிப் பேரணி என்று அறிவித்திருந்ததுமே பிசுபிசுத்ததில் ஜகா வாங்குகிற மாதிரியாகிப் போனதில், காங்கிரஸ், இடது சாரிகள் முதலான துண்டு துக்காணிக் கட்சிகளுக்குப் பெருத்த ஏமாற்றம்! அடி! நேற்றைக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததை நேரலையில் பார்த்துக் கொண்டு, ஊடகங்களில் கருத்து கந்தசாமிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டிருந்ததில் நேற்றைய பொழுது ஒருவாறாகக் கடந்தும் போய்விட்டது. உள்ளூர் சேனல்கள் என்னமாதிரிப் புலம்பிக் கொண்டிருந்தன, திமுக+ என்ன எதிர்மறையாகச் சொல்லின என்பதை இன்றுதான் கொஞ்சம் ஆற அமரப் பார்த்தேன்.
சேகர் குப்தாவின் ஒருபக்கச் சார்பு தெரிந்த விஷயம்! ஆனாலும் இங்கே லயோலாத்தனமான ஊடங்களைப் போல முழுப்பூசணிக்காயை ஒருசில சோற்றுப் பருக்கைக்குள் மறைக்கிற வேலை அவ..ரிடம் இல்லை. (லயோலா கல்லூரியில் திரிக்கிற வேலை படிக்காதவர் என்பதால் கூட இருக்கலாம்!) எதிர்க்கட்சிகளிடம் இருந்து வராத ஒரு பட்ஜெட் மதிப்பீட்டை, அவர்கள் இடத்தில் இருந்து சேகர் குப்தா இந்த 18 நிமிட வீடியோவில் சொல்வதை பார்க்கலாம்.
இது ஹிந்து ஆங்கில நாளிதழின் 6 நிமிட ஹைலைட்ஸ். பட்ஜெட்டை லாலிபாப் என்று சொன்ன இசுடாலின், ஆட்சி முடிவதற்குள் பொதுத்துறையை விற்று விடுவார்கள் என்று பொருமுவதையே பொருளாதார மேதைமையாகக் கருதும் பானாசீனா போன்றவர்களை இடது கையால் புறந்தள்ளிவிடலாம்!
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்! பொருளாதாரம் தெரிந்த, போதித்த ஒருவர்.அவரிடம் வெறும் 6 மாதம் மாணவராய் இருந்ததாலேயே பானாசீனா பொருளாதார மேதை ஆகிவிடுவாரா என்ன?
சோனியா வகையறாவை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏற்றிய சாதனை ஒன்று தான் இன்னமும் இவர் என்ன சொல்கிறார் என்று அவ்வப்போது கொண்டிருப்பது! அதற்காக சுவாமி சொல்கிற எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமா? மேலே அவர் சொன்னது உண்மையிலேயே சரியான தீர்வுதானா? எந்தவொரு சித்தாந்தப் பின்னணியும், எந்தவொரு உறுதியான நிலைப்பாடும், தன்னிஷ்டம்போல கருத்துக்களைப் பொதுவெளியில் அள்ளியிறைப்பதுமே இவரை வெறும் Loose Cannon (நம்பமுடியாத பீரங்கி) ஆக வைத்திருக்கிறது. நரேந்திர மோடி இவரை ராஜ்யசபா எம்பி ஆக்கினதோடு சரி, சுவாமி எதிர்பார்த்த நிதி அமைச்சர் பதவி கொடுக்கவேயில்லை! சரிதானென்று இப்போது புரிகிறதா? போதாக்குறைக்கு சுவாமிக்கு இப்போது 82 வயதாகிவிட்டது.
ஆளுநரின் பன்ச் பற்றி இங்குதான் முதலில் படிக்கிறேன். சிரித்து விட்டேன்.
ReplyDeletehttps://youtu.be/tLm1oKkQsWc
Deleteஇந்த வீடியோவின் முதலாவது நிமிடத்திலேயே ஆளுநர் அப்படிச் சொன்னதை தந்திடிவி மிக மோசமாக மொழிபெயர்த்துச் சொல்லியிருக்கிறது. ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்களது உரைதான்! அதில் குறுக்கிடுவதோ கூச்சல்போடுவதோ முறையில்லை. அதன்மீது விவாதம், நந்திதேறிவிக்கும் தீர்மானம் இப்படி இரண்டு விதங்களில் சபை உறுப்பினர்கள் தங்களுடைய கருத்தைப் பதிவு செய்யலாம்.
காங்கிரஸ், திமுக இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாமே நாடாளுமன்ற நடைமுறைகளைக் கொஞ்சம்கூட மதிப்பதில்லை என்பது மிகப்பெரிய சாபக்கேடு, ஸ்ரீராம்!