#பாண்டிச்சேரி தேர்தல் களம் தயாராகிறது! ஆனால் தமிழ்நாடு?

Dr.தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டவுடனேயே, தனது கடமையை செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்பது காங்கிரஸ் மற்றும்  திமுகவுக்கு கலக்கத்தை உண்டுபண்ணி இருக்கிறது


நாராயணசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதா இல்லையா என்பதை சட்டமன்றத்தில் தான்  நிரூபிக்க வேண்டும் என்பதை S.R. பொம்மை வழக்கு அதன் பின்னர் வேறு சில வழக்குகளிலும் நீதிமன்றம் தெளிவாக்கிய பிறகு, துணை நிலை ஆளுநர் உத்தரவு மீது குறை சொல்ல முடியாத ஒன்றாக இருக்கிறது. தமிழக அரசியல் களம் சூடாவதற்கு முன்னாலேயே புதுச்சேரி அரசியல் களம் சூடேறிவிட்டது. கோட்டைவாய் நாசாவுக்கு இப்போது இரண்டே வழிகள் தான் முன்னால் இருக்கின்றன ஒன்று  கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அவை கூடுவதற்கு முன்பே ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்திப்பது அல்லது திங்கட்கிழமை அவையைக் கூட்டி அங்கே பெரும்பான்மையை நிரூபிக்க கடைசி நிமிடம் வரை முயற்சி செய்வது. இந்த இரண்டில் எதைச் செய்தாலும் நாசாவுடைய அரசியலுக்கு அஸ்தமன காலம்தான் என்பது மட்டும் நிச்சயம்! 


புதுச்சேரி விவகாரத்தில் என்னநடக்கப்போகிறது? திமுக சார்பு ஊடகங்கள் இதைப்பற்றிப் பேசுவார்களா, என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் இனிமேல் தான் தேடிப்
பார்க்கவேண்டும்.கோலாகல  ஸ்ரீனிவாஸ் போன்ற சிலர் இந்த நேரத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருப்பது என்னவோ நிஜம்.

தேதிமுகவை அதிமுக கழற்றிவிடப்போகிறது என்கிற மாதிரி நிறைய ஆரூடங்கள் உலாவருவதை நான் நம்பவில்லை. அதேபோல காங்கிரசுக்கு ரோஷம் வந்து கமல் காசர், மற்றும் சில உதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கக்கூடும் என்பதும் கூட அப்படித்தான்! எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை சீட் என்பதை இரண்டு கழகங்களும் வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே தமிழக அரசியல் களமும் தேர்தல் களமும் சூடேறும் என்பதை நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன!

மீண்டும் சந்திப்போம்  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!