#2021தேர்தல்களம் மாறும் உதிரிகள்! மாறுமா கூட்டணிக் கணக்குகள்?

சாணக்யா தளத்தில் ரவீந்திரன் துரைசாமி ஆவேசமாகப் பேசுகிற வீடியோ ஒன்றை இப்போது பார்த்தேன் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த நாட்களில் முகம் தெரியாத பல வலைப்பதிவர்களுடன் அரசியல் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் காரசாரமாகவே நிறைய நடந்திருக்கின்றன. ஒன்றிரண்டு  திமுக சார்பு ஆபாச வசைப்பதிவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அனேகமாக எல்லாமே கண்ணியமாக இருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.. அதில் தஞ்சாவூர்க்காரர் ஒருவர் டெக்சாஸில் (USA ) ஜமீன்தார் போல வாழ்வதாகச் சொல்லிக் கொள்கிறவர், தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன ஜாதிக்கு எத்தனை சதவீத ஓட்டு என்கிற தரவுகளை வைத்துக்கொண்டு, அரசியலை அடிக்கவராத குறையாகப் பேசுகிறவர். இப்போது கூகிள் பஸ் கூகிள் ப்ளஸ் என்றெதுவும் இல்லாத நிலையில் தொடர்பு எல்லைக்கு அப்பால் போனவர். (அவரைப்போல நிறைய வலைப்பதிவர்கள் இன்றைக்குத் தொடர்பில் இல்லாமல் போனார்கள்) 


கொஞ்சம் மூச்சுவாங்க ரவீந்திரன் துரைசாமி பேசுவதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர் இந்த 27 நிமிடப் பேச்சில் சொல்கிற கள யதார்த்தம் நன்றாகவே புரியக் கூடியதுதான்! தமிழ்நாட்டில் ஒருசில அபூர்வமான சந்தர்ப்பங்களைத் தவிர மூன்றாவது, நான்காவது அணி என்பதெல்லாம் கவைக்குதவாத வெறும் பேச்சுதான் என்பதை நாமும் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். அப்படியானால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமாரோடு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய IJK (இப்படி ஒரு உதிரிக் கட்சி இருப்பது தெரியுமா? புதிய தலைமுறை சேனலை நடத்துகிறவர் கட்சி!) சேர்ந்தாயிற்று. கமல் காசரை சரத் குமார் பார்த்துப்பேசிவிட்டு வந்திருக்கிறார். கமல் காசர் என்ன சொன்னார் என்பது இன்னமும் வெளியே  தெரியவில்லை.


பழ. கருப்பையாவுக்கு கமல் காசர் கட்சியில் அட்மிஷன் கிடைத்து MLA வேட்பாளராகவும் உறுதிசெய்யப் பட்டு விட்டார் என்கிற அதிரடிச்செய்தியை முடிந்தவரை காமெடிச் செய்தியாக்கிய 2 நிமிட வீடியோ.

தினமலர் இந்த ஒருநிமிட வீடியோவிலேயே ரவீந்திரன் துரைசாமி மாதிரி ஜாதிக்கணக்குப் போட்டுச் சொல்கிறது. ஆனால் வாக்குகள் பதிவாகி, எண்ணும் போதல்லவா இதெல்லாம்  நிஜக்கணக்கா அல்லது வெறும் மனக்கணக்கா என்பது புரியவரும்! கருணாநிதி போடாத சாதிக்கணக்கா? எத்தனைமுறை பலித்ததாம்?

சத்தியம், சமத்துவம், சமர்ப்பணம் என்ற முப்பெரும் தாரக மந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டு, தமிழ் உள்ளங்களில் பட்டொளி வீசி பறக்கும் இ.ம.மு.க-வின் கொடி, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான வடிவம் கொண்டது. தமிழ் இளைஞர்களின் கனவுகளை சுமந்து இனி களமாடும் எமது கொடி #IMMK #VoteForIMMK
Image

4:02 PM · Feb 27, 2021Twitter for iPad 


கமல் காசர், சீமான் போன்றவர்கள் எல்லாம் என்ன நோக்கம், நம்பிக்கையில் அரசியல் கட்சியைத் தொடர்ந்து நடத்துகிறார்கள் என்பது கொஞ்சம் ஆய்வுக்குட்படுத்தப் படவேண்டிய விஷயம். 

கொஞ்சம் யோசித்து என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.  

  

      

2 comments:

  1. //கொஞ்சம் யோசித்து என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.//

    ஜெயிக்குமளவு இல்லாவிட்டாலும் ஒரு சாமான்ய மனிதனை விட சற்றே பிரபலமாகவும் செல்வாக்காகவும் இருக்கலாம்.சதவிகிதக் கணக்கில் வாக்கு வாய்ப்பு கூடினால் பேரத்தில் கொஞ்சம் காசும் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. காசு சம்பாதிப்பதையும் தாண்டி இங்கே ஒவ்வொரு உதிரிக்கட்சிக்கும் ஒவ்வொருவித உள்நோக்கம் இருப்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும் ஸ்ரீராம்! சீமான் தமிழ் தேசியம் பேசுவது ஒருவித வியாபாரம். திருமாவளவன் தன்னை அடையாளப்படுத்துகிற விதம் வேறு ரகம் கமல் காசர் எத்தரகம் என்பது புரியாமல் மன்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!