மண்டேன்னா ஒண்ணு! #அரசியல்படுத்தும்பாடு

உள்ளூர் அரசியல் தான் படுத்துகிறது என்று பார்த்தால் அங்கே அமெரிக்க அரசியல் அதற்குமேல் அபத்தக் களஞ்சியமாக இருப்பதை யாரேனும் கவனிக்கிறீர்களா? பல வருடங்களுக்கு முன்னால் இர்விங் வாலஸ் எழுதிய The Man என்கிற நாவலைப் பற்றி இந்தப் பக்கங்களில் விரிவாக பகிர்ந்ததுண்டு. ஒரு அரசின்  உயர்பொறுப்பில் இருப்பவர்களைத் தகுதி நீக்கம் Impeach செய்வது பற்றி என்னுடைய மாணவப்பருவத்தில் முதன்முதலாக அறிந்து கொண்டது அந்த நாவலில் தான்! நம்முடைய அரசியல் சாசனத்திலும் அதேபோல ஷரத்துக்கள் இருப்பதைத் தெரிந்து கொண்டதெல்லாம் அப்புறம் தான்! அரசியல் என்னென்னமாதிரி பாடுபடுத்தும் என்பதை ஒரு சின்னக் காணொளியாக: 


டொனால்ட் ட்ரம்புக்கு முன்னால் இரு அதிபர்கள் ஆன்ரூ ஜான்சன், பில் க்ளின்டன் இப்படி அமெரிக்க காங்கிரசால் (நம்மூர் மக்களவை மாதிரி) தகுதி நீக்கம் செய்யப்பட சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறார்கள் ரிச்சர்ட் நிக்சன் காங்கிரஸ் impeach  செய்வதற்கு முன்னாலேயே ராஜினாமா செய்துவிட்டார் ஆனால் டொனால்ட்  ட்ரம்ப் ஒருவர் மட்டுமே அமெரிக்க சரித்திரத்திலேயே இரண்டு முறை காங்கிரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் என்ற பெருமையை அல்ல, டெமாக்ரட்டுகளின் சிறுமையை வெளிப்படுத்துவதாக இருப்பதை மேலே 10  நிமிட வீடியோவில் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். அமெரிக்க அரசியல் சாசனம் மிகத்தெளிவாக பதவியில் இருப்பவர்களைத் தகுதிநீக்கம் செய்வதைப் பற்றி மட்டுமே பேசுகிறது அமெரிக்க டெமாக்ரட்டுகள் ஒருபடி மேலே போய், பதவிக்காலம் முடிந்து, இப்போது முன்னாள் அதிபர் என்ற அடைமொழி மட்டுமே இருக்கிறவரையும் தகுதி நீக்கம் செய்யப் போகிறார்களாம்! நாளை 9/2/21 அன்று அமெரிக்க செனெட்டில் விசாரணை ஆரம்பம். எப்படியிருக்கும் என்பதை நேரலையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.(தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை காங்கிரசில் மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு இருந்தால் போதும். தகுதி நீக்கம் குறித்த விசாரணை செனெட்டில் தான் நடந்தாகவேண்டும்) அதிக விவரங்களுக்கு இங்கே

விதியே விதியே! என் தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்? என நொந்து கொள்ள வைத்த இரண்டு நேர்காணல்கள் ஒன்று டாக்டர் தமிழிசை 31 நிமிடம் மற்றொன்று இசுடாலின்  38 நிமிடம்  அரசியல் பார்வையாளனாக இருப்பது எத்தனை கொடுமை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அதிலுள்ள  தமாஷையும் அனுபவிக்க வேண்டுமே, அதற்காகவும் தான்!  


ஜெயலலிதா படத்துக்கு சசிகலா மாலை, கும்பிடு போட்டதாகச் செய்தி வந்ததெல்லாம் சரிதான்!  

ஜெயிலுக்குப்போவதற்கு முன்னால் செத்தாலும் விட மாட்டேன் பாணியில் மூன்று முறை ஜெ. சமாதியில் ஓங்கி அறைந்து சபதம் போட்ட மாதிரி ஏதாவது இன்றைக்கும் நடந்ததா? 

மீண்டும் சந்திப்போம்.    


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!