#1300 உடைந்து நொறுங்கும் பிம்பங்கள்! #திராவிடமாயை #இந்தோசீனிபாய்பாய்

பொய்களால் கட்டமைக்கப்பட்ட பிம்ப, ங்கள் எத்தனை நாள் தாக்குப்பிடிக்குமென்று நினைக்கிறீர்கள்? ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி இப்படி திராவிட மாயைகள் தொடர்ந்து பரப்புரை பில்டப் கொடுத்தே கட்டமைத்த பிம்பங்கள் ஒவ்வொன்றாகச் சரிந்து, கரைந்துவரும் காலம் இது சற்று முன் மாரிதாஸ் வலையேற்றிய இந்தக் காணொளி இன்னும் விளக்கமாகச் சொல்கிறது.


ஈவெரா உண்மையிலேயே பாவம்! தாடிக்கார நாயக்கர் அவர் பாட்டுக்கு அந்தந்த நேரத்தில் தனக்குப்பட்டதை வாய்விட்டு உளறிக்கொண்டிருந்தார். எப்போதுமே ஒரே நிலையில் நின்றதில்லை. முன்னுக்குப்பின் முரணாக விளங்கிக் கொள்ளமுடியாதவராகவே கடைசி வரை வாழ்ந்தார், இறந்தார். அவ்வளவுதான்! அதற்குமேல் அவரைப்பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமே  இல்லாதபோது ஈவெராவே நினைத்துப்பாராதவிதமாக அவருடைய பிம்பம் இங்கே தொடர்பொய்கள், பரப்புரைகள் வழியாகக் கட்டமைக்கப்பட்டதன் பின்னணி கொஞ்சம் விபரீதமான விஷயம் தான்!  வீடியோ 21 நிமிடம் தான்! அவசியம் பார்க்கவேண்டுமென பரிந்துரைக்கிறேன். 

இந்த 25 நிமிட வீடியோவில் சேகர் குப்தா, சீன ராணுவம் (PLA) இந்தியாவின் ( யுத்த)) தந்திரோபாயங்களை எப்படிப் புரிந்துகொள்கிறது, (அதன் மீது தன்னுடைய தந்திரோபாயங்களை எப்படித் தீர்மானிக்கிறது என்று சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்) என்பதை  2013 இல் வெளியான ஒரு ஆவணத்தை வைத்து சுருக்கமாகச்  சொல்கிறார். நண்பர்கள் அவசியம் பார்க்கவேண்டிய காணொளியாகப்  பரிந்துரை செய்கிறேன். 

இந்தப்பக்கங்களில் இது #1300 வது பதிவு.  

 மீண்டும் சந்திப்போம். 

7 comments:

 1. பெரியார் வீடியோ அப்புறம் பார்க்க வேண்டும்.  வியாழன் பதிவில் அன்று வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு பற்றி ஒரு சிறு பிரஸ்தாபம் வந்தது.

  ReplyDelete
  Replies
  1. அதையும் பார்த்தேன் ஸ்ரீராம்! ஈவெரா முதல் மனைவி நாகம்மையுடன் வைக்கத்துக்குப் போனது நிஜம். அங்கே ஈவெரா இருமுறை சிறைப்பட்டதும் நிஜம். ஆனால் ஈவெரா சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி சார்பாக அனுப்பப்பட்டதாக, தனிப்பட்ட முறையில் அங்கே நடந்த சத்யாக்கிரகத்தை தலைமகயிற்று நடத்தும்படி எழுதப்பட்டதாகச் சொல்லப்படுபவை கொஞ்சம் ஆராய்ச்சிக்குரிய விஷயம். முழுக்க முழுக்க உண்மைதான் என்று சா.ன்றுகள் இல்லாத விஷயம்

   திருவிதாங்கூர் சமஸ்தானம் தங்களுக்கும் தங்களுடைய பிரஜைகளுக்குமிடையிலான பிரச்சினையில் மூன்றாவது தரப்பு குறுக்கிடுவதில் விருப்பமில்லாதிருந்ததை ஒரிஜினல் காந்தி அந்தநேரத்தில் வைக்கம் போராட்டத்தை நடத்திய உள்ளூர் தலைவர்களுக்கு எழுதிய பல கடிதங்களில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் பிரச்சினை உள்ளூர் மக்களுடனேயே பேசி சுமுகமாகத் தீர்க்கப்பட்டது. இங்கே நிறையப்பேர் நினைக்கிற மாதிரி, அது கோவிலுக்குள் நிழைய அனுமதி மறுக்கப்பட்டதற்கெதிரான போராட்டம் இல்லை. கோவிலுக்கு வெளியே இருந்த வீதிகளை ஈழவ சமூகம் பயன்படுத்துவதைத் தடை செய்ததற்கு எதிரான போராட்டம்.

   ஈவெரா வைக்கத்துக்குப் போனார், சத்யாக்கிரகம் செய்தார்,சிறைக்குக்குப்போனார் என்பதற்குமேல் அங்கே அவர் சாதித்ததொன்றுமில்.லை. இங்கே திக ஊதுவதெல்லாம் வெற்றுத்தம்பட்டம்

   எபியில் நடக்கும் அரட்டைகளைத்தாண்டி இங்கே கொடுத்திருக்கும் இரு வீடியோக்களையும் பார்க்கக் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்! இரண்டிலும் கொஞ்சம் விஷயங்கள் இருக்கின்றன!

   Delete
  2. காணொளியைப் பார்த்து விட்டேன்.

   Delete
  3. #மகிழ்ச்சி #சிறப்பு ஸ்ரீராம்! அதே சூட்டோடு சேகர் குப்தா வீடியோவையும் பார்த்து விடுங்கள்! அதிலும் எல்லையில் நடந்து கொண்டு இருக்கும் விவகாரங்களைக் குறித்து சில முக்கியமான தகவல்கள் இருக்கின்றன

   Delete
 2. மாரிதாஸ் உண்மையை வெட்ட வெளிச்சமாக்கி விட்டார். காற்று போன பலூனாக திகவினர். முக்கியமாக, வைக்கம் ஆலயத்திற்கும் ஈவேராமசாமிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சேகர் குப்தா வீடியோ சீரியஸ் விஷயம். ஆற அமர பொறுமையாக கேட்க இருக்கிறேன். ஆனாலும் 43,000 ச.அடி நிலத்தை சீனாவிற்கு, 1962ல் நேரு தாரை வார்த்ததை பற்றி சேகர்குப்தா பேசியிருக்க மாட்டார் என்பது தெரியும்

  ReplyDelete
  Replies
  1. மாரிதாசுக்கு முன்னாலும் கூட நிறையப்பேர் இப்படிப் பொய்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள் பரமசிவம் சார்! இப்போது மாரிதாசும் குழுவினரும் தொடர்ந்து அம்பலப்படுத்தியதன் அடிப்படையில் பாடப்புத்தகங்களில் ஈவெரா யுனெஸ்கோ விருது வாங்கிய பகுதியை நீக்கும்படி நீதிமன்றம் நீக்கச்ச்சொல்லியிருப்பதுவரை போனது இதுவே முதல்முறை!

   Delete
  2. அப்புறம் 1962 போரில் சீனா அக்சாய்சின் பகுதியில் ஆட்டையைப்போட்டது சதுர அடிகளில் அல்ல 43000 சதுர கிலோமீட்டர்கள்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!