அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அதன்மீது நேர்மையாகத் தனது விமரிசனங்கள், கருத்தைப் பதிவு செய்வது தமிழக ஊடகச் சூழலில் அரிதிலும் அரிது ஆனால் ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பது உண்மை. துக்ளக் வார இதழின் தலைமைச் செய்தியாளராக இருக்கும் திரு.ரமேஷ், அப்படி ஒருசில விதிவிலக்குகளில் ஒருவர் என்பது என்னுடைய கருத்து சொல்லவந்ததைப் பூசி மெழுகாமல், பொய்க்கலப்பில்லாமல் ஆணித்தரமாக எடுத்து வைப்பது துக்ளக் ரமேஷுடைய பாணி!
இந்த 26 நிமிட வீடியோவில் முதல் 3 நிமிடங்களை FF செய்துவிடலாம்! ஒரிஜினல் பேட்டி 23 நிமிடம் இதில் TTV தினகரனின் அமமுக (உண்மையில் VK சசிகலா) என்ன மாதிரியான தாக்கம், அதாவது அதிமுகவுக்கு எவ்வளவு சேதம் என்று இதர ஊடகங்கள் ஆவலோடு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிற சப்ஜெக்ட் மீது சிம்பிளாகச் சொல்லிவிடுகிறார் (சசிகலாவின் நோக்கம் என்னவாக இருந்தாலும் தீயசக்தி திமுகவை எதிர்ப்பது என்பதிலிருந்து விலகமுடியாது;விலகினால் அது அரசியல் தற்கொலை என்பது புரிந்துகொள்ளமுடியாத ஒன்றா என்ன?) அப்படியே திமுகவின் வேல்பிடித்து போஸ் கொடுக்கிற அரசியலின் போலித்தனம், தேமுதிக கொஞ்சம் அதிக சீட் எதிர்பார்க்கிற விவகாரம், திமுக கூட்டணியில் இன்னும் தொடர்கிற குழப்பங்கள் என்று தமிழக அரசியல் களநிலவரங்களை, நேரடியாகவே சொல்லிவிடுகிறார் என்பது நான் இந்த நேர்காணலைப் பரிந்துரை செய்வதற்கான காரணம். பாருங்களேன்!
வீடியோ 3 நிமிடத்துக்கும் குறைவு, மறுபடியும் முதலில் இருந்தா? இப்படி அயர்ச்சி எல்லாம் எனக்கு இல்லவே இல்லை! நாயைஆட்டுவிக்கும் வாலாக இருப்பது யார்?சினிமா KD brothers மட்டுமே தானா? அர்ஜுன மூர்த்தி, அப்புறம் லதா ரஜனிகாந்த், இப்போது இந்த RMM ராஜா. இன்னும் எத்தனைபேர் அந்த மனிதர் பெயரைச் சொல்லிக்கொண்டு யாரைக்குழப்ப அல்லது பயமுறுத்த நினைக்கிறார்கள்? ஏதாவது புரிகிறதா?
தமிழக அரசியலில் சினிமா புகுந்து எப்படி இன்னும் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்! ஆனால் இதைக்குறித்து என்ன செய்வது என்று யாருக்குமே, (சினிமாத்துறையில் சிக்கிச் சீரழிந்தவர்களையும் சேர்த்துத்தான்) தெரியவில்லை!
7th சேனல் மாணிக்கம் நாராயணனுடன் சித்ரா லட்சுமணன் உரையாடல் 27 நிமிடம். வெள்ளித்திரைக்கு பின்னால் இருக்கும் அவலங்கள், துயரங்களை, இந்த வீடியோவை வைத்து முகநூலில் சிவகாசிக்காரன் வலைப்பதிவர் ராம்குமார் அருமையான பகிர்வை நேற்றைக்கு எழுதியிருக்கிறார்
மீண்டும் சந்திப்போம்.
திரு ரமேஷ் என் அலுவலகத் தோழியின் உறவினர். அவர் எழுதிய ஒரு புத்தகம் கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தேன். மௌனம்தான் பதில்!
ReplyDeleteபுத்தகத்தின் தலைப்பென்ன தெரியுமா ஸ்ரீராம்? நானும் கொஞ்சம் முயற்சித்துப் பார்க்கிறேன்
Deleteஎனது அரசியல் பயணம் என்ற தலைப்பில் அல்லயன்ஸ் வெளியீடாக 2018 இல் துக்ளக் ரமேஷ் அரசியல்வாதிகளிடம் எடுத்த பேட்டிகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது அதைத்தான் கேட்கிறீர்களா ஸ்ரீராம்?
Deleteஆம். அதைதான் கேட்கிறேன். அவர் கையெழுத்துடன் கேட்கிறேன். உறவினர் கேட்கிறார் என்றால் பதினைந்து மூன்றில் தர மாட்டாரா என்ன!!
Deleteபதினைந்து மூன்றில் கேட்கவேண்டிய இடமே வேறாயிற்றே ஸ்ரீராம்! எழுதியவரிடத்திலா போய்க் கேட்பது?
Deleteபதினைந்து மூன்று..... ஒன்றும் புரியவில்லையே
ReplyDeleteஇலவச மாயைகளால் சூழப்பட்டிருக்கும் தமிழ்ச்சூழலில் இதுகூடப் புரியவில்லையா பரமசிவம் சார்? இலவசத்தை நாசூக்காகக் குறிக்கும் OC ஓசி என்றால் தெரிகிறது இல்லையா?
Delete