கொஞ்சம் செய்தி! கொஞ்சம் அரசியல்! இப்போது வாசிப்பில்!

நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர்  தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்குப் புரிகிற நாகரிகமான வார்த்தையிலேயே பிஜேபியின் சார்பில் பேசிவந்த கரு.நாகராஜன்  திருப்பிக் கொடுத்தது நான்கு நாட்களாகப் பற்றிக்கொண்டு எரிகிறது. காங்கிரசுக்கு வால் அறுந்தது போதாதென்று, கூட்டணியில் இருக்கிற அத்தனை கட்சிகளும் வாலை அறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கோபண்ணா ஒரு அறிக்கை விட்டிருப்பது  ஜோதிமணியையும் மிஞ்சுகிற  செம காமெடி! காங்கிரஸ்காரர்கள் என்றாலே கிறுக்கு  மாய்க்கான்கள் தான் என்பது D K  பரூவா காலத்திலிருந்தே தொடரும் விஷயம்தான்!

 
 
ஒருவிதத்தில் ஜோதிமணி பாவம் தான்! ஆனால் அவரை விட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த கரூர் தொகுதி மக்கள் மிகவும் பாவம் என்று எவருமே சொல்ல மாட்டேன் என்கிறார்களே! இந்திய அரசியலைக் காங்கிரஸ் எந்த அளவுக்குக் கெடுத்துச் சீரழித்திருக்கிறது என்பதற்கு காங்கிரசுக்கு கிடைத்த புது ரத்தம் ஜோதிமணியே ஒரு நல்ல உதாரணம். 


இன்றைக்கு ராஜீவ் காண்டி நினைவு தினமாமே! கருணாநிதி , கொஞ்சம் பொறாமையோடு  ஆனால் 
சரியாகத்தான் அந்த நாட்களிலேயே சொல்லி இருக்கிறார் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது!  


கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லைஎன்று முன் ஒருகாலத்தில் உறுதியாக இருந்ததுண்டு. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு போல அபத்தமான புத்தகம் படித்த  பிறகு  அந்த எண்ணம் மேலும் உறுதியானது. ஆனால் என் மகனுக்கு  அப்படி சங்கல்பமெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு இருபது புத்தகங்களுக்கும் மேல் கிழக்கு வெளியீடுகளாக வாங்கிப் படித்துவிட்டு இங்கே தள்ளிவிட்டிருக்கிறான். அதில் வினய் சீதாபதி எழுதியதன் தமிழ்வடிவமும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு முன்  திருப்பூர் ஜோதிஜி இந்தப்புத்தகம்  பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வரவே நேற்று முன்தினம் வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த நாளைய  அரசியல்  நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டு வாசிப்பு தொடருகிறது. 

என்னமோ ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தை வாசிக்க எடுத்துக் கொண்டதாகப் பீலா விட்டிருந்தது என்ன ஆயிற்று? வெறும் 80 பக்கங்களிலேயே மூடி வைத்தாயிற்று! எங்கள் தொகுதி எம்பி வடித்த காவியங்கள் காவல்கோட்டமும் வேள்பாரியும் எதிரே ஷெல்பில் இருந்தாலும் எடுத்துப்படிக்க இன்னமும் மூடு வரவில்லை! 

மீண்டும் சந்திப்போம்.  
 

2 comments:

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!