கொரோனா வைரஸ் காலத்திலும் கூட சிரிப்புக்குப் பஞ்சமில்லை!

கொரோனா வைரஸ், 21 நாள் ஊரடங்கு நாட்களில் முதல்வாரம் வெற்றிகரமாகக் கடந்து போய்விட்டது. என்னென்ன நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தீர்களானால், ஊடகச் சேட்டைகள் நிறையவே குறைந்திருக்கின்றன, நாளிதழ்கள் விளம்பரங்கள் இல்லாமல் மிகவும் இளைத்துப் போய் வருகின்றன, டிவி சேனல்களில் மெகாசீரியல்கள் அப்படியே ப்ரொடக்ஷன் நின்றுபோய், முன்பு எப்போதோ ஒளிபரப்பான சீரியல்களை தூசுதட்டி எடுத்து நேரத்தைக் கடத்த ஆரம்பித்து விட்டன, சேனல் விவாதங்கள் பார்ப்பவர் அதிகம் இல்லாமல் போரடிக்க ஆரம்பித்துவிட்டன இப்படி ஏகத்துக்கும் நல்ல விஷயங்களாக இந்த ஒருவாரத்தில் நடந்திருக்கின்றன என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் தொலைகாட்சி ஊடகங்கள் இந்த அளவுக்கு மவுசு இழந்து கிடந்ததே இல்லை. ராமானந்த சாகர்  எடுத்த ராமாயணமும், பி ஆர் சோப்ரா எடுத்த மகாபாரதமும் DD National, DD Bharti சேனல்களில் மறுஒளிபரப்பு செய்ய ஆரம்பித்ததில் தூர்தர்ஷனுக்கு பார்வையாளர்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். எப்போதும் வீட்டுக்குள் அடைந்து கிடக்காத வீட்டுக்காரர் இரவு 11 மணி ஆனதுகூடத் தெரியாமல் புத்தகவாசிப்பில் மூழ்கிக்கிடக்கிறார் என்று  முகநூலில் ஒரு  அம்மணி படம் போட்டு ஸ்டேட்டஸ் போடுகிறார்.  இப்படி நல்ல விஷயங்களுடைய பட்டியல் நீண்டுகொண்டே போகிறது!


ஆதன் தமிழ் சேனல், அதன் நெறியாளர் மாதேஷ் இப்படி இரண்டையும் நான்மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டதே இல்லை. அதுபோலவே மூத்த பத்திரிகையாளர் மணி! இந்த ஆசாமி பத்திரிகையாளராக என்ன எழுதிக் கிழித்தார் என்பது உண்மையிலேயே தெரியாது. இங்கே மாதேஷும் மணியும் தொலைபேசியிலேயே ஒரு நேர்காணலை நடத்தி இருக்கிறார்கள் என்பது ஏப்ரல் முதல் தேதி காமெடி என்பதற்குமேல் பிரமாதமாக சொல்வதற்கில்லை. நிதி நெருக்கடி நிலைமை வருமா என்பதே தெரியாமல், அதன்மீது வளவளவென்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

முகநூலில் நான் தொடர்ந்து கவனிக்கிற சிலபேர்களில் B R  மகாதேவனும் ஒருவர். அவர் வேறுசில விஷயங்களைக் கவனப்படுத்தி  ஒரு தொகுப்பாக எழுதியிருக்கிறார்.

கொரானா அரசியல்

நோய் பரவி பேரிழப்பு ஏற்பட்டால் உயிர் இழப்பு சார்ந்த வேதனை மட்டுமல்லாது நிவாரணப்பணி, பொருளாதார மீட்பு நடவடிக்கை சார்ந்தும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி தேசத்தை மேலும் முடக்கலாம்.

பெரிதாக இழப்பு எதுவும் நடக்கவில்லையென்றால், ஊரடங்கு, தேசத்தின் ஒற்றுமை, மக்களின் பொறுப்புணர்வு, தற்காப்பு நடவடிக்கைகள், மருத்துவ – சுகாதார – காவல் பணியாளர்களின் கடின முயற்சி எல்லாம் ஒன்றுமில்லை. நோய் வீரியம் குறைவு என்று சொல்லிவிடலாம்.

தீமை நடந்தால் பழி மத்திய அரசின் மீது. நன்மை நடந்தால் புகழ் மத்திய அரசுக்குக் கிடைக்கக்கூடாது. தேச விரோத சக்திகளின் செயல் திட்டம் இதுவே.

ஏற்கெனவே தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக இந்தியா வந்து பல மசூதிகளில் கூட்டங்கள் கூட்டி நோயைப் பரப்பச் செய்த சதித்திட்டம் மெள்ள அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது. அதை திசை திருப்ப செயல் திறன் இன்மை, அலட்சியம் என்ற போர்வையில் திட்டமிட்டே மக்கள் ஊரடங்கை மீற ஒவ்வொரு மாநில அரசும் தன்னால் ஆன திருபு வேலைகளைச் செய்துவருகிறது.

கொல்ல முயற்சி செய்தவனின் கை ரேகை பதிந்த கத்தியை காட்சிப் பொருளாக வைத்து பலரையும் தொட வைத்துவிட்டால் கொலைகாரனைத் தப்புவித்துவிட முடியும் அல்லவா. அதுதான் இப்போது நடந்து வருகிறது.இப்போதைக்கு கொலைகாரன் பிடிபடாவிட்டாலும் பரவாயில்லை; குத்துப் பட்டவன் இறக்காமல் இருந்தாலே போதும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

கொலைத் தொழிலை ஒரு கலையாகக் கற்றிருக்கும் கூட்டத்திடமிருந்து இப்படித்தான் தப்பியாக வேண்டியிருக்கிறது.

*
இன்றைய நாட்டு நடப்புகளை வேறொரு கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது.இந்தியாவில் கொரானா நோய்ப் பரவல் இல்லை. சமூகத் தொற்றாக மாறவில்லை.அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டிருக்கிறார்கள். அல்லது கனிகா கபூர் போன்ற பிரபலங்கள் விருந்துக் கூட்டம் நடத்தியும் இத்தாலியில் இருந்து கேரளா வந்த கிறிஸ்தவ குடும்பம் ஊரெல்லாம் சுற்றி வந்தும் அவர்களிடமிருந்து பிறருக்குப் பரவவில்லை.

அடுத்ததாக 21 நாள் ஊரடங்கு என்பது நிச்சயம் நோய்த்தொற்றுச் சங்கிலியை முடக்கித்தான் போட்டிருக்கிறது. சந்தைகளில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூடுவதை நாம் பெரிதும் நோய் சார்ந்த பயத்துடன் பார்க்கவேண்டாம் என்றே இதுவரையான நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஏனென்றால் கோயம்பேடு, கோவை என பேருந்து நிலையங்களில் மக்கள் கூடி நின்ற பின்னரும் பின் வந்த நாட்களில் அது நோயாக வெடித்திருக்கவில்லை. அதிகபட்சம் ஐம்பது மணிநேரத்துக்குள்ளான ஆயுள் கொண்ட கொரோனா கோயம்பேட்டில் கூடி நின்றவர்கள் மூலம் மாநிலம் முழுவதும் இத்தனை நாட்களுக்குள் பரவியிருக்கவேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதாவது, நோய்த் தொற்று இல்லாத ஆயிரம் பேர் ஒரு இடத்தில் கூடி நின்றாலும் பெரிய இழப்பு இல்லை என்பதுதான் மருத்துவ உண்மை. அதற்காக மக்கள் பெருந்திரளாகக் கூடுவதை அனுமதிக்க முடியாதுதான். அது நிச்சயம் தவறுதான். ஆனால், அது தொடர்பான அச்சம் தேவையில்லை என்றே தோன்றுகிறது (உயிரிழப்புகள் பெருகாததால்).

அது அரசியல்வாதிகளின் சதி அல்லது செயல்திறன் இன்மை மட்டுமே (முதலாவதே உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு). அதை வேறு வகையில்தான் கையாளவேண்டும்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சீனர்களைக் கட்டிப் பிடித்து வெளிப்படுத்திய போலி நட்புணர்வு (ஆட்சியாளருக்கு எதிரான ஆட்டுமந்தைச் செயல் மட்டுமே), ஒரே நேரத்தில் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து குவிவதால் ஏற்படும் சிக்கல் இவையே அங்கு இத்தனை உயிரிழப்புகள் ஏற்படக் காரணம்.

இந்தியாவிலும் பலர் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் (மூன்றாம் கட்டத்துக்குச் சென்றால்) நிச்சயம் இழப்பு அதிகரிக்கும். ஆனால், ஊரடங்கு ஒப்பீட்டளவில் சரியான நேரத்தில், சரியான முறையில் அமலாகிவிட்டதால் கொஞ்சம் தைரியமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு நோய் சார்ந்து அல்ல; பிற வழிகளில்தான் பிரச்னையைத் தரப்போகிறது. இந்தியப் பொருளாதாரமும் சமூக ஒழுங்கும்தான் பெரிதும் பாதிக்கப்படப் போகிறது.

தேசம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத புயல், வெள்ளம் வந்து போனதுபோல் ஒரு பெரும் சேதம் ஏற்படவாய்ப்பிருக்கிறது. ஆனால், உயிரிழப்பைவிட இது ஒப்பீட்டளவில் சமாளிக்க முடிந்த பிரச்னையே. கத்திக் குத்து அல்ல; சாட்டையடிதான்.

கொரானா வைரஸ் பற்றிய மருத்துவர்கள் சொல்லும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அது தன்னளவில் அபாயகரமானது அல்ல. ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட உடம்பைத்தான் அது மேலும் பாதிக்கும். அந்த நோய்களைத்தான் தீவிரப்படுத்தும்.

அதை அப்படியே சமூக அளவில் பொருத்திப் பார்த்தால், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம், பிரிவினைவாதம், எதிர் பொருளாதாரச் செயல்பாடுகள் போன்றவற்றைத்தான் அது மேலும் தீவிரப்படுத்தும்.

இதற்கான மருந்து மருத்துவ நெருக்கடி நிலை அல்ல.  

         
  மீண்டும் சந்திப்போம். 

5 comments:

  1. நவீன வெடிகுண்டுகள்...

    கத்தி.. ரத்தம் இதெல்லாம் இல்லாமல் புது யுக்தி...

    பிறருக்குப் பரப்பி விட்டுச் செத்து ஒழிந்தால் ஏகப்பட்ட புண்ணியமாமே...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      சாதா புண்ணியமெல்லாம் இல்லையாக்கும்! சுவனத்தில் 72 கன்னிகைகள் எதிர்கொண்டு அழைத்து சுகம் தருகிற அளவுக்கு!

      Delete
    2. ஏற்கனவே இந்த விஷயத்தை அறிந்திருக்கிறேன்..
      என்றாலும் ரசனைக்காக -

      அடேங்கப்பா!..

      Delete
  2. sir neenda naatkalukku piragu ungal thalathukku vanthu ullen . neengal nalamadum iruppathu therindhu mikka magizhchi athudan ungal oorilum corona virus paravamal makkal nalamaga irukkirargal endra nambugiren .
    mooga nool thalathil irundhu neengal pagirndha vishayam naanum avathanithen.. thailandil irundhu pilgrimage ponal mecca mathina thaane povargal namma naatil enna irukku ? thablik samacharam vera kelvi pattirupeergal... ivargal buildingai check panna, surgical strike kku design pannum ajit doval vara vendiyathirukku rama rama

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சரவணன்!

      இறைவனருளால் நானும் குடும்பமும் நலமாக இருக்கிறோம். ஆனால் மதுரை? மதுரைக்கும் கொரோனா வந்துவிட்டது. பக்கத்தில் விருதுநகருக்கும் வந்துவிட்டது. ஆனால் அச்சம் கொள்ள என்ன இருக்கிறது என்பதற்காகத்தான் கொரோனா ஊரடங்கு விளைவித்திருக்கிற நல்லவிஷயங்களைப் பதிவின் ஆரம்பத்திலேயே பட்டியலிட்டுச் சொன்னதே!

      நலமாக, பாதுகாப்பாக இருங்கள்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!