சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் அரசியல் செய்திகள்!

மம்தா பானெர்ஜி இரண்டு நாட்களாகஊடகங்களின் பேசுபொருளாக ஆகியிருக்கிறார்! கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் தீதியின் அரசு மிக மெத்தனமான போக்கைக் கையாள்வதில்  மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி நிலைமையைப் பார்த்து அறிக்கை தர அனுப்பியிருப்பதை மேற்கு வங்க அரசு ஒத்துழைக்க மறுத்து தடுத்து நிறுத்தியிருப்பதில்  மம்தா பானெர்ஜியின் மமதை மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சகம் கொஞ்சம் கடுமை காட்டியபிறகே, மாநில அரசு மத்தியக்குழு தன்வேலையைச் செய்ய அனுமதித்திருக்கிறது என்பது இந்திய அரசியலின் விசித்திரங்களில் ஒன்று.  டைம்ஸ் நவ் வீடியோ செய்தி இங்கே 


மத்திய அரசோடு மாநில அரசும் சேர்ந்து செயல்படவேண்டிய தருணம் இது. தன்னுடைய பிடிவாதம் அரசியல் சுயநலத்தையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒவ்வொரு அரசியல் கட்சியும், தனிநபரும் பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டிய தருணம் இது என்பதை மம்தா பானெர்ஜி போன்ற கலகக் குரல்களுக்கும் புரியவைக்க வேண்டியவிதத்தில் மத்திய அரசு சொல்லிவிட்டது என்பதுதான் லேடஸ்ட் நிலவரம். "We are not getting support from West Bengal, we are not being permitted to do our job. We have written to West Bengal again and have told them they have to assist otherwise action may be initiated. We are getting assistance from Madhya Pradesh , Rajasthan and Maharashtra. Our decision to send teams was based on multiple inputs, not only from the health ministry," said Home Ministry's Punya Salila Srivastava in a media briefing என்கிறது NDTV செய்தி. 


ஆர்னாப் கோஸ்வாமி  எடிட்டர்ஸ் கில்டிலிருந்து ராஜினாமா செய்துவிட்டாராம்! நேற்று டிவி விவாதம் ஒன்றில் அதை அறிவித்ததன் சிறுபகுதியை இங்கே பார்க்கலாம். I resign from the Editors Guild of India for its absolute compromise on editorial ethics, for being an organisation that is only operating in self-interest.’ என்று ராஜினாமா முடிவு, அதற்கான காரணங்களை விவாத நேரலையிலேயே தெரிவித்ததை  இன்றைய செய்திகளில் தான் தெரிந்துகொள்ள முடிந்தது. வரவர சோம்பேறித்தனம் எனக்கு அதிகமாகிக் கொண்டு வருகிறதோ?


S R சேகருக்கென்ன, அவர்பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்! படியளக்கும் கழகத்தைப் பகைத்துக்கொள்ள ஆதித்தன் வகையறா பைத்தியக்காரர்களா என்ன? தினத்தந்தி மாதிரி ஒரு பச்சோந்தி ஊடகத்தில் வேலைசெய்யப்போனது கார்டூனிஸ்ட் அடடே! மதி செய்த தவறு.  

அமெரிக்கா கச்சா எண்ணை தேவையில் ...ஏறக்குறைய தற்சார்பை உறுதி செய்து கொண்டிருக்கிற நாடு. எண்ணெய் வள நாடுகளை [OPEC] நம்பி இருக்கவில்லை.

ஏற்கனவே சவுதியும், ரஷ்யாவும் போட்டி போட்டுக் கொண்டு எண்ணை உற்பத்தியை அதிகரித்து சந்தை படுத்தியிருக்கும் நிலையில்..சர்வதேச கச்சா எண்ணை விலை வீழ்ந்தது.

இப்போது ....அமெரிக்கா..தன்னுடைய எண்ணை இருப்பை திறந்துவிட்டிருக்கிறது.

கச்சா எண்ணை விலை அதலபாதாளத்திற்கு சென்று ...அமெரிக்காவின் எண்ணை அரசியலையும், பதிலடியையும் வெளிப்படுத்துகிறது. எண்ணைக்காக மத்திய கிழக்கு OPEC நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை பல உலக நாடுகளும் குறைத்துக் கொண்டே வருகின்றன.

இதனால் இந்தியாவிற்கு என்ன நன்மை ?

நன்மை உண்டு. ஊரடங்கிற்கு பின்..வரும் நாட்களில் தெரியவரும்.

இந்த நேரத்தில் ...

இந்தியாவும்..உள்நாட்டில் ... தன்னுடைய கச்சா எண்ணை உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ..திட்டமிட்டு போராட்டங்கள் மூலம் தடுக்கப்படுகின்றன என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. 

நம்பிக்கைகள் வாழ்க! மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!