சண்டேன்னா மூணு! #கொரோனாவைரஸ் #அரசியல் #ரஜனிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடி வேண்டிக் கொண்டபடி இன்று நாடெங்கும் மக்களே முன்வந்து ஊரடங்கை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒழுங்கு, சுயகட்டுப்பாடு மிகவும் அவசர அவசியமாகத் தேவைப் படுகிற நேரம் இது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவருவதில், வளர்ந்த நாடுகளே தடுமாறிக் கொண்டிருக்கின்றன. வர்த்தகப்போரில் மட்டுமல்ல, இந்த நோய்த்தொற்று பரவலைக் கையாளுவதிலும் கூட அமெரிக்கா தோற்று வருவதாக கடுமையான விமரிசனங்கள் வருகின்றன. நோய்த் தொற்று சீனாவிலிருந்துதான் ஆரம்பித்தது என்ற சர்ச்சையைத் தாண்டி, மருத்துவ உபகரணங்கள் சீனாவிடமிருந்துதான் வந்தாக வேண்டும் என்கிற கள யதார்த்தம் மிகவும் உறுத்தலாகத் தெரிகிறது. கொரோனா வைரசை சோதனை செய்வதற்கான கிட்  தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்ய இந்திய அரசு பேசி வருவதாகத் தெரிகிறது.

        
இது ஊரடங்கு உத்தரவல்ல! ஊரையும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ளச் செய்யப்படும் அக்கறை என்ற வாசகங்கள் சரிதான்! ஆனால் இது வெறும் டீசர் மட்டும் தான்! மெயின் பிக்சருக்கும் தயாராக இருக்கவேண்டும் என்று பிரதமர் சூசகமாகச் சொன்னதையும் புரிந்து கொள்ள வேண்டுமே! 

வீடியோ 35 நிமிடம் 

குவாரன்டைனுக்கு அனுப்பப் பட்ட பிறகும் கூட தான் ஒரு சினிமா பிரபலம் என்று காட்டிக் கொள்ளும் கனிகா கபூர் மாதிரியான பந்தா பேர்வழிகள் நிறைய உள்ள நாடு இது! இவர்போல சினிமா பந்தா பேர்வழிகளை  நிரந்தரமாக விலக்கி வைப்பது உத்தமம்! வீண் வதந்தி பரப்புகிறவர்களையும் சேர்த்துத் தான்! 


கொரோனா வைரஸ் உலக அரசியல், பொருளாதாரம், எல்லாவற்றிலும் அதிரடி மாற்றங்களை உருவாக்கி விட்டதா? வளர்ந்த மேற்கத்திய நாடுகள் தடுமாறுவதில், வளரும் நாடுகள் எதுவும் தயாராக இல்லாத சூழ்நிலையில், அடுத்தது என்ன என்பதை எவராலும் கணிக்க முடியாது என்று சொல்ல நினைத்தாலும் இங்கே இந்தச் செய்தி வேறுவிதமான சூழ்நிலையை சொல்கிறது.  சீனா உலகத்தின் நட்ட நடுநாயகமாய் ஆவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. American Tianxia பற்றி சால்வடோர் பாபோன்ஸ் இப்போது என்ன எழுதுவார் என்று யாருக்காவது கவலை இருக்கிறதா? ஒபாமா மாதிரியே டொனால்ட் ட்ரம்பும் கிடைத்த வாய்ப்புக்களை அலட்சியப் படுத்தி Making America Great Again என்பதை  வெறும் கோஷமாகக் குறுக்கிவிட்டார் என்று சொல்லி விடலாமா?

    
முதலிலேயே தமிழருவி மணியனை நான் ஒரு காமெடி வால்யூவுக்காக மட்டுமே  பொருட்டாக எடுத்துக் கொள்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். ரஜனிகாந்த் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்: எந்த நம்பிக்கையில் மனிதர் இத்தனை bold ஆகச் சொல்கிறார்? ரஜனிக்கே அதுபற்றிய தெளிவான பார்வை இருக்குமா? வீடியோ 42 நிமிடம்

மீண்டும் சந்திப்போம்.     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!