இருக்கிற குழப்பங்கள் போதாதென்று இவர் வேறு ...!

தமிழக அரசியல்களம் ஏற்கெனெவே குழம்பிய குட்டையாக இருப்பதில், இன்னும் ஒருவர் வேறு வந்து குழப்ப வேண்டுமா? ரஜனிகாந்த் அதைத்தான் மிகத் தெளிவாகச் செய்து கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. இன்று அவருடைய மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தது வரை சரி! ஆனால் கேட்டுக்கு வெளியே வந்து சும்மா மூன்று அல்லது நான்கு நிமிடம் எதையாவது பேசிவிட்டுக் குழப்பிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன?

    
என்ன செய்தி சொன்னார் என்பது உங்களுக்காவது புரிகிறதா? புரிந்ததோ இல்லையோ இந்தவாரம் முழுவதும் இந்த மூன்று நிமிடப் பேட்டிதான் பரபரப்பாக ஊடகங்களில் சேனல் விவாதங்களில் ஓடும் என்பதைத்தாண்டி வேறு என்ன இருக்கிறது? 


ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதைப்பற்றித்தான் பேசி முடிவெடுத்தார்களா? இல்லையா? இதையெல்லாம் ரங்கராஜ் பாண்டே மாதிரி ஒரு ஊடகக்காரர் வந்து பொழிப்புரை சொன்னால்தான் ஆயிற்று என்ற மாதிரி தமிழக அரசியல் களம் இருப்பது மிகவும் கேவலம்! இந்த வீடியோ 27 நிமிடம்  News 18 தமிழ் சேனலின் குணசேகரனுக்கு குஷியோ குஷி! போரிலிருந்து பின் வாங்குகிறாரா ரஜனி என்றொரு விவாதம்!
  

ரஜனியை மட்டும்தான் சந்திப்பார்களா என்று கமல் காசர் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாதல்லவா? ஒரு கோஷ்டி இஸ்லாமியர்கள் இன்றைக்கு CAA விஷயமாக கமல் காசரை சென்னை ஆழ்வார்ப்பேட்டை ம.நீ.ம. கட்சி அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார்கள். ஜனநாயக  முஸ்லிம் முன்னேற்றக கழகத்துடைய மாநிலத்து தலைவர் காஜா மொய்தீன், மலபார் முஸ்லிம் அசோசியேஷனின் சென்னைக்கு கிளை சார்ந்த சிலர் சந்தித்து, சால்வை அணிவித்துப் பேசி இருக்கிறார்களாம்! இருக்கிற குழப்பங்கள் போதாதென்று இது வேறு சேர்கிறதா?

குட்டையில் ஊற புதிய மட்டைகள் வருகின்றன என்று எடுத்துக் கொள்வதா? இருக்கிற குழப்பங்கள் போதாது என்று இவர்கள் வேறு கிளம்புகிறார்களே என சலித்துக் கொள்வதா? 

மீண்டும் சந்திப்போம்.   
          

2 comments:

  1. தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      எதற்காகத் தலையில் அடித்துக் கொள்ளவேண்டும்? அதுவும் நம்முடைய தலையில்! அதைவிட சிறந்த, பயனுள்ள வழிகள் நிறைய இருக்கின்றன!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!