சண்டே Supplement! என்ன மாயமோ? #அரசியல்

ஜோதிராதித்ய சிந்தியா ஆரம்பித்து வைத்த நேரம் ரொம்ப ரொம்ப நல்ல நேரம் போல! காங்கிரஸ் கட்சிக்குள் விரிசலும் பிளவும் ஒவ்வொரு மாநிலமாக விரிவடைந்து கொண்டே போகிறது என்று தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. சோனியாG & Co என்ன நடக்கிறதென்றே தெரியாமல் செயலிழந்து நிற்பதும் கூடத் தெளிவாகப் புலப்படுகிறது. பர்கா தத், சாகரிகா கோஸ் போன்ற ஊடகக்காரர்கள் கூட சோனியாG & Co ஒதுங்கி விடவேண்டும்; சரத் பவார், ஜெகன் மோகன் ரெட்டி முதலானவர்கள் காங்கிரசுக்குத் திரும்ப வேண்டும்  என்றெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்!

 வீடியோ 7 நிமிடம் 

குஜராத்தில் 4+7 காங்கிரஸ் MLA க்கள் தங்களுடைய ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துவிட்டார்கள் என்கிறது இந்தச் செய்தி. மத்தியப் பிரதேசத்தில் நாளை திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி மாநில ஆளுநர் கமல்நாத்துக்கு அறிவுறுத்தியிருசபாநாயகர் க்கிறார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பதன் மீதான தன்னுடைய முடிவை நாளை அறிவிக்கப் போவதாக சபாநாயகர் பிரஜாபதி சற்று முன் சொல்லி இருக்கிறார். கர்நாடகத்தில் அரங்கேற்றிய அதே நாடகத்தை அப்படியே அரங்கேற்ற காங்கிரஸ் கட்சி விரும்பினாலும், சபாநாயகரை வைத்து இன்னுமொரு நாலைந்து நாள் தள்ளிப்போடலாமே தவிர, ஆட்சி கவிழ்வதைத் தவிர்க்க முடியாதென்பது அவர்களுக்கே நன்றாகத் தெரிகிறது. வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களில் பகுதி பகுதியாக ராஜினாமா கடிதங்களைக் கொடுத்த சிந்தியா ஆதரவு MLAக்களில் 6 பேருடைய ராஜினாமாவை, அவர்களைச் சந்திக்காமலேயே சபாநாயகர் ஏற்றுக்கொண்டு விட்டார். அதேபோல சபாநாயகரைச் சந்திக்காமலேயே தங்களுடைய ராஜினாமாக்களும் ஏற்கப்படவேண்டுமென்று மீதமுள்ள 16 MLAக்களும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். M.P. சபாநாயகர், கர்நாடக MLAக்கள் ராஜினாமா விஷயத்தில் உச்சநீதிமன்றம் கொட்டு வைத்ததை கவனத்தில் வைத்துக் கொள்வாரா அல்லவா என்பதை நாளைதான் தெரிந்துகொள்ள முடியும்.16 MLAக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால் கமல்நாத் அரசு உடனடியாகக் கவிழும். அல்லாமல்  தள்ளிப்போட்டால் ஒருசில நாட்கள் நீடிக்கலாம், என்பதில் என்ன அப்படி அல்பசந்தோஷம் காங்கிரஸ்காரனுக்கு என்ற கேள்வியை யாருமே கேட்கமாட்டேன் என்கிறீர்களே! 


கொஞ்சகாலத்துக்கு முன்னால் இந்த S.P. லட்சுமணன் யாரென்றே தெரியாது! பேனைப் பெரியாளாக்கும் சேனல்கள் இருக்கும்போது இவரையும்  மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமரிசகராக  ஆக்கிவிட முடியாதா என்ன?ஆவுடையப்பன் திறந்தவாய் மூடாது 34 நிமிட  நேர்காணலை நடத்தி முடித்ததற்காகவே ஒரு அனுதாப உச்சுக் கொட்டிவிடலாம்!

மீண்டும் சந்திப்போம்.                

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!