சண்டேன்னா மூணு! #வாழ்த்துவோம்! #கொரோனா #வரலாறு

கொரோனா வைரஸ் தொற்று களேபரங்களில் மனதை நெகிழச் செய்யும் சில நல்ல செய்திகளும் உண்டே! கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் கிட் தயாரிப்பதில் MyLabs என்ற இந்திய நிறுவனம் அரசின் பரிசோதனைக்குப் பிறகு அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது என்பதில் இதைத் தயாரிப்பதை ஆறே வாரங்களில் சாதித்த வைராலஜிஸ்ட் புனே நகரைச் சேர்ந்த மினால் டகவே போசலே என்கிற மராத்தியப் பெண்மணி! நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் 10 பேர் கொண்ட தனது குழுவுடன் டெஸ்ட் கிட் தயாரித்ததுடன் தீவீரப் பரிசோதனைக்குப்பிறகு அரசின் அனுமதி பெறுவதற்காக அனுப்பியபிறகே, மகப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்ந்து, ஒரு பெண் குழந்தையையும் ஈன்றெடுத்திருக்கிறார். தாயையும் சேயையும் மனம் கனிந்து வாழ்த்துவோம்!

  
We started the development process for Covid-19 six weeks ago on an emergency basis looking at the national crisis and need for an indigenous accurate solution for improved management. We have developed a unique formulation for test reagents that increases the catalytic activities of the enzymes, reducing the enzyme unit requirement, resulting in reduced cost”, said Minal, who has a decade long experience in the diagnostic field, and also worked on the swine flu disease at NIV, Pune, during the 2009 outbreak. On March 18 evening, within an hour of submitting the proposal for FDA approval, she got admitted to a hospital for a c-section and the very next day, Minal delivered her baby girl என்கிறது செய்தி. MyLabs தயாரிப்பைப் பற்றி ஒருவாரத்துக்கு முன்பே செய்தி வந்துவிட்டாலும், கண்டுபிடிப்பின் பின்னால் இருந்த மினால் பற்றிய செய்தி இப்போது தான் ஓரிரு நாட்களாக வந்து கொண்டிருக்கிறது.


ராகுல் காண்டி! முன்னெல்லாம் ட்வீட்டரில் மட்டும் தான் உளறிக்கொண்டிருந்தார். இப்போது கலீஞர், இசுடாலின் வழியில் கடிதமும் எழுத ஆரம்பித்து விட்டாராம்! #வாரிசுத்தொற்றுநோய்   காங்கிரசுக்கு சோதனைமேல் சோதனை கொடுத்துக் கொண்டே இருக்கிறது  என்பதில் சந்தேகம் யாருக்காவது இருக்கிறதா? உங்களுக்காகவே கீழே உள்ள செய்தி. 
   
”It is my choice," என்று சைனா வைரஸ் பாதிப்பை மறைத்து ஊர்சுற்றியதோடு நில்லாமல், மருத்துவ மனையில் ஏர்கண்டிஷன் வேலை செய்யவில்லை, டாக்டர் மூஞ்சி சரியில்லையென்றெல்லாம் கூப்பாடு போட்டவர் கனிகா கபூர்! தற்போது நான்காவது முறையாக சைனா வைரஸ் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. சிகிச்சை பலனளிக்கவில்லையோ என்று உறவினர்கள் கவலைப்படுகிறார்கள்.
இந்த நேரத்தில் இதைச் சொல்வது கொடூரம்தான்! இருந்தாலும் கொழுப்பெடுத்து ஊர்சுற்றுகிறவர்கள் பாலிவுட் பிரபலமாக இருந்தாலும் சரி, பல்லாவரம் குப்புசாமியாக இருந்தாலும் சரி, சைனா வைரஸ் பலிவாங்கியே தீரும்!
ஒழுங்கு மரியாதையா அரசாங்கம் சொல்றதைக் கேளுங்கடா! 21 நாள் உசிரோட இருந்தா அப்புறம் ஊர்சுத்துறதைப் பத்தி யோசிக்கலாம்.


TOI செய்தியை மேற்கோள் காட்டி கனிகா கபூர் பெயர் சொல்லி எழுதியிருந்தாலும் கடைசி இரண்டு லைனில் யாருக்குச் சொல்கிறார்? #புரிந்தவர்பிஸ்தா 
இங்கே ராமச்சந்திர குகா மட்டும்தான் வரலாறு எழுதுவாராமா? 
ஐரோப்பிய நாடுகளிலெ வத வத என முன்னாள் அரச குடும்பங்கள் உண்டு. எல்லாருமே இளவரசர் இளவரசி தான். சவூதியிலே கிட்டத்தட்ட முப்பதாயிரம் இளவரசர்கள் இருப்பது போல.
அப்படி ஒரு அரச குடும்பத்தின் இளவரசி தான் இப்போது மர்க்யா ஆனது. வயது 86. அவர் முன்னூறு வருடங்களுக்கு முன்பு ஆண்ட ஸ்பெயின் அரசரின் ஆண் வழிபேத்தி. அவருடைய தாத்தாவுக்கு தாத்தா இத்தாலியிலே ஒரு குட்டி கிராமத்துக்கு சிற்றரசர் போல இருந்தவர்.
ஐரோப்பிய அரச குடும்பங்கள் அவர்களுக்குள்ளே தான் மணம் முடித்துக்கொள்வார்கள் என்பதால் இருக்கும் ஏழெட்டு அரச குடும்பங்களும் மாமன் மச்சான் உறவு தான் இந்த இளவரசியின் சகோதர் நெதர்லாண்டு நாட்டு இளவரசியை மணமுடித்தார். இங்கிலாந்து அரசிக்கு ஸ்பெயின் நெதர்லாட்டு நாட்டு அரசர்கள் எல்லாம் தூரத்து மச்சினன்கள் முறை வரும்.
இறந்த இளவரசியின் விக்கி பீடியா பக்கம் https://en.wikipedia.org/…/Princess_Maria_Teresa_of_Bourbon…
இதிலே என்ன போர்பன் என பிஸ்கட் பேரு இருக்குன்னு சிலரும் அதென்னா விஸ்கி பேரா இருக்குன்னு பலரும் கேட்கலாம். பிரெஞ்சு அரச குடும்பத்தின் பெயர் அது. ஊரின் பெயரும் கூட.
எல்லா ஐரோப்பிய அரச குடும்பமும் சார்ல்மெலே எனும் ஆளிடம் இருந்து தான் தொடங்குகிறது. அதெப்படி என்றெல்லாம் கேட்ககூடாது. வெள்ளைத்தோல் வெள்ளைக்காரன் எழுதுவது தான் வர்லார். அதை அப்படியே அடிமை இந்துக்கள் படிச்சிக்கிடனும் இல்லாட்டி ஏ பார்ப்பானீய என பாயாசம் காய்ச்ச ஆரம்பிச்சுடுவாங்க.

வரலாறு புரிகிறதா? மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. சுவையான வரலாறுகள்.
    நமக்கும் பாடம் கத்துக் கொடுக்க ஒரு வைரஸ்.
    பரிசோதனை கிட் கண்டுபிடித்த அன்னைக்கு வாழ்த்துகள்.
    இந்தியாவிலிருந்து வரும் படங்களைக் காண்வே பத்றுகிறது. கீழ்த் தட்டு மக்களைக் கடவுள் அணைத்துக் காக்க வேண்டும்.
    நான் செய்திகள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
    மனம் ,உடல் ஓய்ந்துவிட்டால்
    நோயை வா என்று அழைப்பதற்கு நேர்.
    நீங்களும் நலமாக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      செய்திகளைத் தவிர்ப்பதனால் மட்டுமே நடப்பு நிலவரங்களிலிருந்து தப்பித்துக் கொண்டு விட முடியாதே! நானும் கொஞ்சம் புத்தகங்கள், சினிமா என்று வேறுவிஷயங்களிலும் கவனம் வைத்திருக்கிறேன். சிலரது எழுத்துக்கள் மனதுக்கு தெம்பூட்டுவதாக இருக்கும்.

      ஸ்ரீஅரவிந்த அன்னை என்னைப் பார்த்துக் கொள்கிறாள்! குறையொன்றுமில்லை!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!