இட்லி வடை பொங்கல்! #64 #கொரோனா #அரசியல் படுத்தும் பாடு!

இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுதி ஐந்து வாரங்களாகி விட்டது! ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்தத் தலைப்பில் நடப்பு அரசியல் நிலவரங்களை எழுதிக் கொண்டிருந்ததில் ஏற்பட்ட தடங்கலுக்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சதீஷ் ஆசார்யா! முன்னொரு காலத்தில் என்னுடைய அபிமான கார்டூனிஸ்டாக இருந்தவர்! காரணமில்லாத வெறுப்புடன் கார்டூன்களை வரைகிற மாதிரி எனக்குத் தோன்றியதால் அபிமான லிஸ்டில் இல்லை என்றாலும் அவர் வரைகிற கார்டூன்கள் என்னுடைய பார்வைக்கு வந்து கொண்டுதானிருக்கின்றன.

   
இன்றுமுதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமானந்த சாகர் எடுத்த ராமாயணம் தொடர் காலை, இரவு இருநேரமும் எட்டு மணிக்கு மறு ஒளிபரப்புச் செய்யப் படுவதையும், பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களில் பலர்  தற்போது வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பதால் சொந்த ஊருக்கு  கால்நடையாகவே திரும்பிக் கொண்டிருக்கிற அவலத்தையும் முடிச்சுப்போட்டு விஷமத்தனமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆனால் இணையத்தேடலில் ராமாயணம் சீரியல் பற்றிய தேடல் எண்ணிக்கை மிக அதிகமாகவே தூர்தர்ஷன் வெப்சைட் திணறியதாகச் செய்திகள் சொல்கின்றன.

சதீஷ் ஆசார்யா   கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்க வைக்கிறமாதிரி, இந்தியாவைக்குறித்து மிகவும் கேவலமாக எழுதிக் கொண்டிருக்கிற ஊடகக்காரர் ஒருவரைப் பற்றி முகநூலில் நண்பர் ராஜசங்கர் கொஞ்சம் ஆவேசத்துடன் எழுதியிருப்பதை வாசித்தேன். The Callousness of India’s COVID-19 Response என்ற தலைப்பில் நேற்றைக்கு வித்யா கிருஷ்ணன் என்கிற முன்னாள் ஹிந்து நாளிதழ் ஜர்னலிஸ்ட் எழுதிய விஷமத்தனமான கட்டுரையையும் வாசித்தேன். நடிப்புச் சுதேசிகள் என்று மகாகவி பாரதி அன்றைக்கே இவர்களைப் போல்வாரைப் பற்றி நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத்திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே --வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாடிவைத்தது நினைவுக்கு வருகிறது 

3 நிமிடம் 

இக்கட்டான இந்த நேரத்தில்...தங்கள் மாநிலங்களில் பணி நிமித்தம் வந்து தங்கி இருக்கும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும்.. அரிசி,பருப்பு, சமையல் எண்ணெய் , இன்ன பிற உதவிகள் அனைத்தும் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் - மத்திய அரசு
இந்த விஷயத்தில்....பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக அரசு செயல்படுகிறது என்று தான் சொல்லவேண்டும்.
பிற மாநில தொழிலாளர்களுக்கும் உதவி பொருட்கள் கிடைக்கும் என்பதை.. தமிழக முதல்வர்..நேரடியாகவே அறிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த ...நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் பலனை ...இது போன்ற பேரிடர் காலங்கள் முழுமையாக உணர்த்துகிறது.
இது ஒருபக்கம் இருக்கட்டும்! இன்னொரு முக்கியமான கேள்வியை இங்கே கேட்டிருக்கிறார்:  
உலகத்துல எந்த நாட்டுலேயும் ஒரு விசாவுல உள்ளே போயி அந்த விசாவுக்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்ய முடியாது. அப்படி இருக்க,
1. எப்படி இத்தனை வேற்று நாட்டு இஸ்லாமியர்கள் (தாய்லாந்து, துருக்கி மலேஷியா, யூகிர், சைனா, கில்கிஸ்தான்) இந்தியாவுக்குள் வருகை புரிந்தனர்?
2. எந்த விசா கேட்டகிரியில வந்தாங்க?
டூரிஸ்ட் விசாவா இருந்தாலும் பிஸினஸ் விசாவா இருந்தாலும், அப்படியே உண்மையை சொல்லி ரிலீஜியஸ் விசா வாங்கி வந்தாலும் இங்கே தங்குமிடத்தில் அதாவது இந்தியாவில் இரண்டு லோக்கல் கார்டியன் அல்லது கிளையென்ட் அல்லது லோக்கல் ரிலீஜியஸ் இன்ஸ்டிடியூஷன் ஏதாவது ஒன்றின் தகவல்கள் நமது குடியுரிமை அதிகாரியிடம் தரப்படவேண்டும்.
தந்தார்களா? அப்படி தரப்பட்டது நுண்ணறிவு துறை போலீஸிடம் பகிரப்பட்டதா??
அப்படி பகிரப்பட்ட தகவல்கள் சரிப்பார்க்கப்பட்டு மீண்டும் குடியுரிமை அதிகாரி வசம் வந்ததா??
அப்படி வந்திருந்தால், இரண்டு வாரங்களாக இவர்கள் சென்ற இடங்களை வெகு சுலபமாக கண்டறியலாமே??
தரப்பட்ட விசாவிற்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்ததாக, விசா ரூல்ஸை மீறியதாக இதுவரை இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டதா??
எனக்கு தெரிந்து இல்லை.
ஒரு பத்து பேரை குடியுரிமை வழக்கில் போட்டு காய்ச்சி எடுத்தா தான் அடுத்தவனுக்கு பயம் வரும், இல்லேனா வேறொரு வழியில் அவனுங்க உள்ளே நுழைவானுங்க.
மார்க் மை வேர்ட்ஸ்...
எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 
பிஜேபியின் H ராஜா கம்யூனிஸ்டுகளின் ஏழைப் பங்காளர்கள் வேடத்தைத் தோலுரிக்கிறாரா? அல்லது மத்தியில் ஆளும் கட்சியில் தேசியச் செயலாளராக இருந்தும் தனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று பொருமுகிறாரா?
விடைதெரிந்தவர்கள் வந்து பதில் சொல்லலாம்! மீண்டும் சந்திப்போம்.    

2 comments:

 1. ஷண்பத் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு இப்போது மட்டுமல்ல, பின்னரும் விடை கிடைக்கப் போவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சொல்கிறீர்கள் ஸ்ரீராம்? எதற்கும் இந்த 6 நிமிட வீடியோவை ஒருமுறை பார்த்துவிடுங்கள்! https://youtu.be/PUCUWpEUEIo

   உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு இதுமாதிரி ஒழுங்கீனங்களை மிகக்கடுமையாகக் கையாள்கிறது. இத்தனை நாட்கள் யாருமே கேட்கமாட்டார்கள் என்று ஆடிக் கொண்டிருந்தவர்கள்.இனிமேலாவது திருந்தியாக வேண்டும் என்கிற சூழ்நிலை உருவாகிவருகிறது.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!