திரௌபதி திரைப்படம் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பையும் அதேபோல சில தரப்பிலிருந்து எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி 330 தியேட்டர்களில் ரிலீசாகி, ஜனங்களுடைய ஆதரவும் அதிகமாக இருப்பது, தியேட்டர்கள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதிலேயே வெளிப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு மூலகாரணமாக இருந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, அதற்குக் காரணமாக இருந்த வழக்குகள் பற்றி ஜனவரி மாதத்திலேயே இந்தப்பக்கங்களில் எழுதி இருந்தேன்.
வீடியோ 22 நிமிடம்
வழக்கறிஞர் நடந்ததென்ன
என்பதை விளக்குகிறார்
நாடகக் காதல்! சொன்னதில் தவறென்ன?
திரௌபதி! சமீப காலத்தில் நடந்த ஒரு அயோக்கியத் தனத்தை பட்டவர்த்தனமாகச் சொல்வதால் மட்டுமே ஒரு சாதிவெறிபி படமாகவோ கலவரத்தைத் தூண்டும் படமாகவோ இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிற தரப்பு பம்மிப் பதுங்குகிறது. News 7 நெல்சன் சேவியர் மாதிரி ஊடகக்காரர்கள், படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்துப் புழுங்குகிறார்கள்.
முகநூலில் நண்பர் ராஜசங்கர் கொஞ்சம் யோசிக்க வைக்கிற மாதிரி எழுதியிருக்கிறார்.
திரெளபதி படம் சரியா வரலை. அதிலே அது சரியில்லை இது சரியில்லை என கவலை, வருத்தம் தெரிவித்தவர்களுக்கும் பொங்கல் வைத்தவர்களுக்கும் சில பல கேள்விகள்.
இந்த படம் கதை இன்ன பிற எல்லாம் துறையிலே இருப்பவர்களுக்கு தெரிந்த பின்பு எவ்வளவு துறைவல்லுனர்கள் (டெக்னீசியன்கள்) அந்த படத்துக்கு வேலை செய்ய வந்திருப்பார்கள்? வேலையை ஒத்துக்கொண்டு பின்பு முடியாது என சொல்லீயிருப்பார்கள்?
சினிமாத்துறையை அவர்கள் கைப்பற்றுவது ஏதோ அவர்களை முன்னிறுத்தி படம் எடுப்பதற்கு மட்டும் தான் என நினைக்கிறோம் ஆனால் இந்துக்கள் நினைத்தாலும் பணத்தை செலவழித்தாலும் படம் எடுக்க ஆட்களே கிடைக்ககூடாது என்பது தான் அவர்களின் முதல் நோக்கமே.
சினிமாத்துறையிலே மட்டும் அல்ல. நமது கோவில்களிலே வேலை செய்பவர்களை குறி வைத்து மதம் மாற்றுவதும் இதனால் தான்.
கோவிலுக்கு பூ கட்டுபவர்கள், குடை செய்பவர்கள், சிற்பம் செய்பவர்கள் என ஆட்களை குறிவைத்து மதம் மாற்றுவார்கள். கும்பமேளா போன்ற இடங்களிலே முக்கியமான ஒருங்கிணைக்கும் வேலைகளை செய்யும் ஆட்களை சாதிகளை குறிவைத்து மதம் மாற்றுவார்கள்
அப்போது தானே அந்த வேலைகளை செய்ய ஆளில்லாமல் இந்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதத்தை விட்டு வெளியே வருவார்கள் எனவே உடனடியாக மதம் மாற்றிவிடலாம்.
அதே கதை தான் சினிமாத்துறைக்கும்.
இடதுசாரிகள், கம்மினிஸ்ட் கபோதிகள், சாதிவெறி பிடித்த வக்கிர மிருகங்கள் படம் எடுக்கும் போது உடனடியாக ஆட்கள் கிடைப்பார்கள். குறைவான பணத்திலேயே நல்ல தரமான இந்துக்களையும் இந்துக்களை அவமதிக்கும் படங்கள் எடுக்கமுடியும்.
நம்மால் முடியாது. இது தான் காரணம். படம் ஏன் ஒரு லோகோ போடக்கூட நம்மால் முடியாது.
நாம இந்த மாதிரியான விஷயங்களை வெறுக்கும்படி கொஞ்சம் கொஞ்சமாக பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்.
படம் வரைவது, சினிமா எடுப்பது ஏன் விஷுவல் கம்யூனிகேசன் எனும் படிப்பை கூட நாம் படிப்பதில்லை.
மருத்துவம் , பொறீயியல், பொருளாதாரம் படித்து போகிறோம். அவர்களோ குறைந்த பணம் கிடைத்தாலும் பரவாயில்லை மதத்துக்காக செய்வோம் என விஷூவல் கம்யூனிகேசன் படித்து நாமே நம்மை நம்முடைய பண்பாட்டை வழிபாட்டை மதத்தை வெறுக்குபடி பரப்புரை செய்கிறார்கள்.
எனவே நண்பர்கள் அதை அப்படி செய்திருக்கலாம் இதை இப்படி செய்திருக்கலாம் என பொங்கும் முன்பு என்ன நிலை என யோசிக்கவேண்டும்.
இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 5-10 வருடங்கள் கழித்து இப்படி ஒரு படம் கூட எடுக்கமுடியாது.
குறிப்பு : நான் தமிழ் படம் ஏதும் பார்ப்பதில்லை. இதையும் பார்க்கவில்லை. பார்க்கும் ஐடியா இருக்கிறது. சென்னையிலே படம் பார்க்கும் ஆட்கள் அட்டண்டன்ஸ் போடவும்
நான் சென்னையில் இல்லை. இருந்தால் ராஜசங்கரோடு படம்பார்க்க அட்டெண்டன்ஸ் போட்டிருப்பேன்! அதனால் என்ன? படத்தைத் திறந்த மனதோடு பார்க்கத்தான் போகிறேன்!
மீண்டும் சந்திப்போம்.
அருமையான பேட்டி. மிக நிதானமாக பேசியுள்ளார். புரியவைத்துள்ளார். மிக்க நன்றி.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteசென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தபோது திரு ராகவாச்சாரி தேடல் Amicus curiae (நீதிமன்றத்தின் நண்பர்) ஆக நியமிக்கப்பட்டு, நடந்த முறைகேடுகளை நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்தவர். ஒரு நாள் பரபரப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வந்து, உரிய கவனம் தொடர்நடவடிக்கை எதுவுமில்லாமல் அமுங்கிப் போனது.. இப்போது மறைக்கப்பட்ட பலவிஷயங்களை திரௌபதி திரைப்படம் வெளியே கொண்டு வந்திருக்கிறது.
ஏன் பொங்க வேண்டும்?..
ReplyDeleteதக்காளிச் சட்னியோ!..
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteஏன் பொங்கவேண்டுமா? பொங்காமல் எப்படிப் போராளிகள், புலிகள், சிறுத்தைகள் என்றாவதாம்? :-)))
நத்தம், தக்காளிச் சட்னியாக ட்ரெய்லரில் இருந்தது. படத்தில் அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டதாக அறிகிறேன்