கரோனா வைரஸ் தொற்றைக் குறித்து தேவையில்லாத வீண் வதந்திகள், செய்திகளைப் புறக்கணிக்கும்படி நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன். சுகாதாரத்துறை சொல்லும் யோசனைகளைக் கடைப் பிடித்தாலே நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிடலாம். ஹேண்ட் சானிடைசர் அல்லது லைஃபாய் சோப்பை வைத்துக் கைகளைப் பலமுறை சுத்தம் செய்துகொள்ள வேண்டியது முக்கியம். மத்திய பிரதேச காங்கிரசில் நடக்கும் கூத்து என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாமா?
மத்தியப்பிரதேசத்தில் இன்னொரு கருநாடகமா என்று இரண்டு நாட்களாகக் குழம்பிக் கிடந்த காங்கிரஸ் ஊசலாட்டம் ஒரு பரிதாபமான கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மத்தியப்பிரதேச காங்கிரசுக்குப் பொறுப்பாகவும் திறமையாகவும் செயல்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட எல்லாவற்றிலுமிருந்து விலகிக் கொள்வதாக சோனியாவுக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.
அவருடைய ஆதரவாளர்களான 20 சமஉ க்களும் தங்களுடைய ராஜினாமாவைத் தயாராக வைத்துக் கொண்டிருப்பதாக NDTV பரிதாபமாக நேரலையில் சொல்லிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் நடந்த மாதிரியே நேற்றிரவு முதலமைச்சர் கமல்நாத் நடத்திய கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களுடைய ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டு, அதிருப்தியாளர்களுக்கு இடம் கொடுக்கிற மாதிரி, ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாகவும் பேசப்பட்ட பேரம், சமாதானம் எடுபடவில்லை என்று தெரிகிறது. NDTV ஒரு படி முந்திப்போய் ஜோதிராதித்ய சிந்தியா இன்றைக்கு பிஜேபியில் சேருகிறார், ராஜ்யசபா சீட்டும் பெறுகிறார் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்ல ஆரம்பித்து விட்டது. ஆக, 15 மாதகால கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதில் பிஜேபியைக் குறைசொல்லிப் பயனில்லை.
மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்கு முன்புவரை அடக்கியே வாசித்துக் கொண்டிருந்த பழம்பெருச்சாளி கமல்நாத், வெற்றிக்கு உழைத்த ஜோதிராதித்ய சிந்தியாவை ஓரம் கட்டினார். அவர்வசமிருந்த மாநில காங்கிரஸ் தலைமைப் பொறுப்பையும் தன்வசமாக்கிக் கொண்டார் என்பதில் ஆரம்பித்த பிரச்சினை வளர்ந்து "…this is a path that has been drawing itself out over the last year". "While my aim and purpose remain the same as it has always been from the very beginning, to serve the people of my state and country, I believe am unable to do this anymore within this party," என்று கசப்புடன் தனது ராஜினாமா கடிதத்தில் சொல்கிற அளவுக்குப் போனதில் பிஜேபியின் பங்கென்ன? அதை விட மிகக்கேவலம், தனது ராஜினாமா கடிதத்தை ட்வீட்டரில் வெளிப்படுத்தியதற்காக, காங்கிரஸ் கட்சி அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியிருப்பது தான்!
காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலவீனமே அதற்குத் தானாகவும் தெரியாது! உண்மை விசுவாசிகள் சொன்னாலும் ஏறாது! இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? சோனியா காங்கிரஸ் தலைவராக வந்த நாட்களிலிருந்தே அவருடைய நோக்கம் முழுக்க முழுக்கப் பணம் பணம் பணம் என்பதாகத்தான் இருந்து வருகிறது என்பது 2004 - 2014 இந்தப் பத்தாண்டுகளில் வெடித்த ஊழல் புகார்களிலேயே தெளிவாகத் தெரிந்தது. கமல்நாத் இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்பது மாநில முதல்வரான கொஞ்சநாட்களிலேயே எழுந்த ஊழல் புகார்களில் வெளிப்பட்டதே, நினைவுக்கு வருகிறதா?
கட்சித்தலைமையின் பணத்தாசை இப்போது யெஸ் பேங்க் விவகாரத்திலும் வெளிப்பட்டிருக்கிறதே, அதை கவனிக்கிறீர்களா? காங்கிரசை முற்றிலும் ஒழித்துத் தலைமுழுக வேண்டியதன் அவசியத்தை இங்கே இந்தப் பக்கங்களிலேயே பலமுறை சொல்லிவருகிறேன்! இன்னும் ஒருமுறை உரக்கச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை, பழம்பெருச்சாளி கமல்நாத் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். 1984 டில்லியில் சீக்கியர்களைக் கொன்று குவித்த ரத்தக்கறை இன்னும் கமல்நாத் மீது இருப்பதை மறந்துவிட முடியுமா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!