மண்டேன்னா ஒண்ணு! #வங்கித்துறைசீரழிவுகள் லட்சுமி விலாஸ் வங்கி

இன்றைக்குத் தற்செயலாக ட்வீட்டரில் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது நியூஸ் 18 சேனலில் இருந்து விரட்டப்பட்டு சன் செய்திகளுக்கு ஓடிப்போன மு.குணசேகரனுடைய மறுகீச்சொன்றைப் பார்த்தேன். குணசேகரனுடைய  சாய்ஸ் என்றாலே திரிக்கப்பட்ட அல்லது வடிகட்டின பொய்யாகத்தானிருக்கும் என்பது தமிழக ஊடகங்கள் எப்படியிருக்கின்றன என்பதற்கான ஒரு சோற்றுப்பதம்! அவர் அரண்செய் என்கிற யூட்யூப் தளம்  ட்வீட் செய்ததை ரீட்வீட் செய்திருக்கிறார். புரிந்து கொண்டு தான் செய்தாரா என்பது ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரித்தான்!  

சமீபத்தில் ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கி மீது 30 நாட்கள் மாரடோரியம் அறிவித்த கையோடு DBS Bank Indiaவுடன் இணைக்கப்படும் என்று அறிவித்ததை, வங்கிகளைப்பற்றி கொஞ்சமும் அறியாத ஒருவர், அவருக்கு சற்றும் குறையாத  முன்னாள் வங்கி மேனேஜர் ஒருவருடன் உரையாடுவதை மேலே 20 நிமிட வீடியோவில் பார்க்கலாம் ஏதேனும் புரிகிறதா?  இந்த முன்னாள் வங்கி மேனேஜர் நிறைய விஷயங்களைத் தப்பும் தவறுமாகவே, குணசேகரன்கள் சந்தோஷப் படுகிற அளவுக்கு, அள்ளித் தெளிக்கிறார். உதாரணமாக LVB கரூரில் ஆரம்பிக்கப்பட்டது 1926 இல், ஆனால் sophomore சோமசுந்தரம் 1958 இல் தொடங்கப்பட்டது என்கிறார். உண்மை என்னவென்றால் ஒரு ஷெட்யூல்டு வங்கியாக ரிசர்வ் வங்கியின் 2வது ஷெட்யூலில் LVB இடம்பெற்றது 1958 இல். இப்படி எல்லாவிஷயங்களையும் மிக மேம்போக்காகப் பார்த்துவிட்டு உளறிக் கொண்டிருக்கும் இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை, இதையும் ஒரு செய்தியாக ரீட்வீட் செய்கிற குணசேகரன்களையும் என்னவென்று சொல்வது?


இதையே வங்கித்துறையைப் பற்றித் தெரிந்தவர்கள் கூடி விவாதித்தால் எப்படியிருக்கும் என்பதைக் கேட்க வேண்டுமா? மேலே ஒரு 40 நிமிட வீடியோ. தொடர்ந்து மூன்று வருடங்களாக தலா 800 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்து வருகிற ஒரு நிறுவனம், அடுத்து 2020 செப்டெம்பர் அரையாண்டில் 397 கோடி  தொடர் நஷ்டம் அடைந்திருக்கிறது.அதே போல 4000 கோடி ரூபாய் அளவுக்கு மீட்க முடியாத வராக்கடன், மூலதனத் தேவையை எதிர் கொள்ளமுடியாத நிலையும் இருந்தால் அந்த நிறுவனம் திவாலாகிவிட்டது என்றுதான் அர்த்தம். திவாலாகிப்போன நிலையில் பங்குகளின் மதிப்பு ஜீரோவாகிவிடும் என்பது கம்பனிச் சட்டம் சொல்கிற மிக அடிப்படையான விஷயம். LVBயின் பங்குகள் எவர் எவரிடம் இருக்கின்றன?

As of September-end, 93.2% of Lakshmi Vilas Bank’s shares were held by public shareholders. The promoters own only 6.8% stake. Among public shareholders, foreign portfolio investors own 8.65%, insurance companies own 6.40% (LIC: 1.62%), retail shareholders own 23.98% and HNI shareholding is at 22.75%. Other entities hold 30.82%, including Indiabulls Housing Finance Ltd (4.99%), Srei Infrastructure Finance Ltd. (3.34%) and Prolific Finvest Pvt. Ltd. (3.36%) இப்படியிருக்க, எந்தத் தரவுகளின் மீது சோமசுந்தரம் பொதுஜனங்களுடைய பணமெல்லாம் போச்சு என்கிறார்? சம்பந்தமே இல்லாமல் 1.7 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப சொல்கிறாரே,  அது என்ன? அதை ஆ.ராசாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? கொஞ்சம் உறைக்கிற மாதிரி, விஷயத்தைப் புரிந்து கொள்ள இங்கே  

What had gone wrong?

This is perhaps a story that will be written after its demise. For example, there were loans given to the ex-promoters of Ranbaxy, which they thought were secured by deposits but those deposits were not legally collateralized. And employees were arrested for this issue. There were many other allegations, soaring NPAs and the bank lost nearly all its core capital. Luckily, no depositor has lost money in it. இது அதிலிருந்து ஒரு சிறு பகுதி. 

லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட்டர்கள் முழுதாய்க் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். டெபாசிட் பணம் 20300 கோடி ரூபாய்களில்  ஒரு சல்லிக்காசு சேதாரமில்லாமல் ரிசர்வ் வங்கி காப்பாற்றித் தந்திருக்கிறது. அதை மறந்து விட்டுப் பேசுவது குணசேகரன்கள் மாதிரித் தமிழக ஊடகங்களின், திராவிடங்களின் அபத்தம் மட்டுமல்ல, வடிகட்டின அயோக்கியத்தனமும் கூட.   

வங்கிச் சீர்திருத்தங்கள் இப்போது இந்தத் திசையில் போய்க் கொண்டிருக்கின்றன? இங்கே செய்தியாக 

4 comments:

  1. குணசேகரன்களெல்லாம், கட்சிக்காரர். அவருக்கும் ஊடகத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? (சும்மா ஊடகத்தில் வந்து எஜமானர்கள் சொல்லுவதை வெளிப்படுத்தினால் ஊடகக்காரராக ஆகிவிட முடியுமா?) கட்சி சொல்வதை அப்படியே பேசுகிறவருக்கு சன் தொலைக்காட்சி வேலை கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. அவர் கட்சிக்காரராகவோ அல்லது கழுதையாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்! ஆனால் பொதுவெளியில் ஒரு செய்தியைப் பகிரும்போது அதை முழுதாய்ப்பார்த்துவிட்டுத்தான் பகிர்ந்தாரா என்பது மட்டுமே இந்தப்பதிவில் குணசேகரனைப் பற்றிய பிரஸ்தாபம்.

      ஒரு முன்னாள் வாங்கி ஊழியனாக, ரிசர்வ் வங்கி முடிவு சரியாகத்தான் இருக்கிறது கட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் பாவம்தான்! அதுவும் retail sharholders வெறும் 24% என்பதில் பாதிப்பு அதிகமில்லை என்பது கூட முதல் வீடியோவில் அந்த வாங்கி மேனேஜருக்குத் தெரியாமல் என்னென்னமோ கோவிக் கொண்டிருக்கிறார்..

      Delete
  2. உண்மையை தெளிய வைத்ததற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      உணமையைப் புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் பிரயாசைப்படவேண்டும்! இங்கே பல ஊடகங்கள் செய்தியைத் திரித்து வெளியிடுவதையே பிழைப்பாக வைத்துக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டு, உண்மையை எங்கு தேடுவது என்பதில் கொஞ்சம் தெளிவுடன் செயல்படவேண்டும்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!