இட்லி வடை பொங்கல்! #71 அமித் ஷா வருகையும் அலறும் கழகங்களும்! தமிழக அரசியல்!

ஒருவாரமாகவே அமித் ஷாவின் தமிழக வருகைக்கு தமிழக ஊடகங்கள் கொடுத்த நெகட்டிவ் பில்டப், எவ்வளவு பயத்துடன் இங்கே கழகங்களும் உதிரிகளும் அவருடைய வருகையைப் பார்க்கிறார்கள் என்பதற்கு அடையாளமாகவே இருந்ததென்றே சொல்ல வேண்டும். வழக்கம்போல #GoBackAmitSha முழக்கங்கள் டிவிட்டரில் உலாவரத்தொடங்கின. பிஜேபி ஆதரவாளர்கள் பதிலுக்கு #TNWelcomesAmitSha என்று அதிக எண்ணிக்கையில் ட்வீட்டியது, கழகங்களுக்கு இணையாக அவர்களும் காமெடி செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம்!


பிஜேபியுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள்  ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் அறிவித்திருப்பதில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பட வசனம் படுத்தேவிட்டானய்யா நினைவுக்கு வருகிறதா? 


கழகங்களுக்கு மட்டும்தான் காமெடி செய்ய வருமா? நாங்களும் செய்வோமே என்று தமிழக அரசியல் உதிரிகளில் ஒன்றான பாமக சூசகமாக அதிக சீட் தரும் கூட்டணிக்கே முன்னுரிமை என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் உதிரிக்கட்சிகள், திமுக கூட்டணியில் நீடிப்போமா அல்லது கழற்றிவிடப்படுவோமா என்பதே புரியாமல் அமைதி காத்து வருவது, இன்னொரு பக்கத்து தமாஷா! மதிமுக, விசிக, இடதுசாரிகளின் நிலைமையைத்தான் சொல்கிறேன்.   

பீஹார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு,இன்னொரு உதிரிக்கட்சியான   காங்கிரஸ்,  திமுகவாகப்பார்த்து எத்தனை சீட் கொடுத்தாலும் வாயை மூடிக்கொண்டு வாங்கத் தயாராகிக் கொண்டிருக்கிற மாதிரித்தான்  தெரிகிறது.. 

அமித் ஷா மீது பதாகை வீசியது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது.. துரைமுருகன் கண்டனம் !

 | 

காமெடி கிங் துரைமுருகன் முந்திக்கொண்டு இப்படி ஒரு பேட்டியை காட்பாடியில் இருந்து கொடுத்திருக்கிறார் அமித் ஷா மீது placard ஒன்றை வீசிய துரைராஜ் என்கிற நங்கநல்லூர் ஆசாமியைக் கைது செய்த காவல்துறை அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வழக்கமான சமாளிப்பைச் சொல்லியிருக்கிறது.

ஆக எல்லோருமாகச் சேர்ந்து தமிழக மக்களை வெறும் காமெடிப்பீசாக்குவதில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத்தெரிகிறதா இல்லையா?

நீங்கள்தான் சொல்லவேண்டும்!

மீண்டும் சந்திப்போம்.    

       

   

4 comments:

 1. பொழுதுக்கும் நகைச்சுவை தான்...

  ReplyDelete
  Replies
  1. ஒருவிதத்தில் உண்மைதான் துரை செல்வராஜூ சார்! ஆனால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாத குரூரமான அரசியல் அவலச்சுவையும் கூட!

   Delete
  2. அது தான்.. அந்த அவலத்தை நினைத்துத் தான் நகைச்சுவை.. அதுவும் வறட்டு நகைச்சுவை..

   Delete
  3. :-)))) நம்மை வறட்டி அவர்கள் செழிக்கிறார்கள்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!