இன்று நவம்பர் 17. ஸ்ரீ அரவிந்த அன்னை மானுட வடிவில் 95 ஆண்டுகள் இருந்து, மஹாசமாதிக்கு ஏகிய நாள். இன்று ஸ்ரீஅரவிந்தாசிரமத்தில் தரிசன நாளாகவும், அடியவர்கள் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை இருவரும் சூட்சும வடிவில் அருள் பாலிக்கும் சமாதி அருகே அமர்ந்து கூட்டுத் தியானம் செய்யவும், ஸ்ரீ அரவிந்த அன்னையின் அறைக்குச் சென்று வணங்கவும் அனுமதிக்கப் படுகிற நாளாகவும் இருக்கிறது.
இன்றைய தரிசன நாள் செய்தியாக
முன்பே இந்தப்பக்கங்களில் பலமுறை எழுதியதைப் போல தெய்வத்தின் கடைக்கணருள் நான்தேடாமலேயே பலமுறை என்னைத் தேடி வந்து அருள்பாலித்திருக்கிறது அன்னை படத்தை முதன்முதலாய்ப்பார்த்த தருணத்தில் இவள் என்னுடைய அம்மா மாதிரியே இருக்கிறாளே என்றுதான் நினைத்தேன். அசடன்! என்னைப் பெற்றவள் வடிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையே காட்சி அளித்தாள் என்பதை உணராத அசட்டுத்தனம் அது. நான் அவளை நினைக்க மறந்தாலும், அவள் எனக்குத் தோன்றும் துணையாகவும் தோன்றாத துணையாகவும் கூடவே இருந்து அருள்பாலித்து வருகிறாள் என்பதை ஒருவாறு புரிந்து கொண்டபின் எனக்கென்ன மனக்கவலை என் தாய்க்கன்றோ தினம்தினம் என்கவலை என்கிற பழைய பாடலின் பொருளை அனுபவத்தில் உணர்ந்த்தும் அதுவாகவே நிகழ்ந்தது. அவளே எல்லாம் என்று இருந்தநாட்களும் உண்டு. சமீப காலங்களில் அன்னையை நினைக்காமலேயே இருந்ததுமுண்டு. ஆனாலும் அவள் எனக்கும் தாயல்லவா!
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளை சரண் அடைகிறேன்! எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஒரு பெண்குழந்தையை எங்கள் குடும்பத்திற்கு உனது அருட்கொடையாக அளித்திருக்கிறாய். அந்தக்குழந்தை என்றென்றும் உனது கடைக்கண் அருளிலேயே, உனது பாதுகாப்பிலேயே வளரட்டும்.
பழம்பெரும் பாரத தேசத்தை, அகப்பகை, புறப்பகை இரண்டிலிருந்தும் காப்பாய்! உலகத்தில் பாரததேசம் நீ அறிவித்தபடி அதன் ஆன்மீக குருபீடத்தை அடைய உனதருள் விரைந்துசெயல்பட திருவுள்ளம் இசைவாய்!
மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன். திருவடிகளைச் சரணடைகிறேன்.
ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!
Mother bless.Mother guide, Mother save, Mother protect
ReplyDeleteவாருங்கள் அம்மா!
Deleteஅன்னையை ஏற்றுக்கொண்டவர்களுடைய வாழ்க்கைக்கு அவளே எல்லாமாகி வழிநடத்துகிறாள் என்பது அனுபவ சத்தியம்.
--எனக்கென்ன மனக்கவலை என் தாய்க்கன்றோ தினம்தினம் என்கவலை
ReplyDeleteஎப்போது நீங்கள் அன்னையை பற்றி எழுதினாலும் ஒரு சிந்தனை முத்தை விதைத்து விடுகிறீர்கள்! இன்று இது!
எல்லாம் அன்னையின் அருள்!
வாருங்கள் பந்து!
Deleteயாரையேனும் ஒருகணம் பார்த்திருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கைக்கு நான் முழுப்பொறுப்பேற்றுக் கொள்கிறேன் :என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லியிருக்கிறார். நிறையப்பேறுடைய அனுபவமும் அதுவாகத்தான் இருந்து வருகிறது.
எனக்கென்ன மனக்கவலை என் தாய்க்கன்றோ தினம்தினம் என்கவலை என்பது ஒரு பழைய பாடல். உங்களுக்காக சுவாசிக்கப்போறேங்க தளத்தில் 2009 இல் எழுதிய பதிவொன்றை இன்று மீள்பதிவாகப் போட்டு அந்தப்பாடலையும் இணைத்திருக்கிறேன்.