மண்டேன்னா ஒண்ணு! #தேர்தல்அரசியல் ஓ அமெரிக்கா! ஓ இந்தியா!

ஒருவழியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் அழுகாச்சிகள் ஓய்ந்து,ஜோ பைடன் (ஜனநாயகக் கட்சி) தன்னுடைய ,  தேர்தல் வெற்றியை அறிவித்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் சீனா, ரஷ்யா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து ஜோ பைடனுக்கு சம்பிரதாயமான வாழ்த்துக்கள் எதுவும் சொல்லப் படவில்லை என்று அண்மைச் செய்திகள் சொல்கின்றன. 2016 இலும் சரி இப்போது 2020 இலும் சரி, ஒரு நல்ல வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாமல் குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் மிக மோசமான வேட்பளர்களையே நிறுத்தியதில், இந்தத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்  தன்னைவிட மிக மோசமான வேட்பாளரான ஜோ பைடனிடம் தோல்வியடைந்திருக்கிறார்  என்றே எனக்குப் படுகிறது. 


டிரம்புக்கு எதிரான அமெரிக்க ஊடகங்களுடைய வன்மம் கலந்த தொடர் தம்பட்டம் புதிதல்லதான்! அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளும், சீனா, ரஷ்யா முதலான டொனால்ட் ட்ரம்ப் தோற்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் என்பதும் கூட ஊரறிந்த ரகசியம் தான்! ஜோ பைடனுடைய வெற்றியைக் கொண்டாடிய ஒரே வெளிநாடு பாகிஸ்தான் தான்! டொனால்ட்  ட்ரம்ப் தோற்றிருக்கிறார் ஆனாலும் அவருடைய தாக்கம் அமெரிக்காவை இருகூறாகப் பிரித்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால் தேர்தல் முறையிலான ஜனநாயக நாடுகளில் இதுமாதிரி நடப்பது ஒன்றும் புதிதல்ல கடந்த சிலநாட்களாகவே ஜனநாயகத்துக்கு ஆதரவாகப் பொங்கிக் கொண்டிருந்த அயல்நாட்டு ஊடகங்களைக் கவனித்துக் கொண்டிருந்ததில் சிரிப்பு மட்டுமே வந்தது. போதாக குறைக்கு உள்ளூர் ஊடகமான News 18, ராகுல் காண்டி ஜோ பைடன், தேஜஸ்வி யாதவ் இருவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் ஒரு அபத்தமான செய்தியைப் போட்டு தமாஷ் செய்து இருக்கிறது! 

பப்பு காண்டி கற்றுக் கொள்கிற ஆசாமி மாதிரித் தெரிகிறதா என்ன? அடக் கொடுமையே! 

நாளை பீஹார் தேர்தல் முடிவுகள் வரட்டும்! இந்தச் செய்திக்காகவே ஒரு தனிக்கச்சேரி வைத்துக் கொள்ளலாம்!  

மீண்டும் சந்திப்போம்    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!