தேர்தல் நேரம்! காமெடி டைம்! இன்று

வானிலை அறிக்கை மாறுவதைப்போல, தேர்தல் காமெடிகளும் மாறிக்கொண்டிருப்பவை என்பது தெரிந்த விஷயம் தானே?

தொடரும் இழுபறி! இது திமுக அணியில் தானுங்கோ!
breaking என்பதற்கு இழுபறி, முறிவு என்றெல்லாம் புதுப்புது அர்த்தங்கள் சேர்ந்து கொள்கின்றனவோ?  
நடந்தாலே மூச்சு வாங்குதுன்ற ஒத்தை டயலாகுக்காக இந்தப்பாட்டு! அவ்வளவுதான்!
எழவு வீட்டிலும் அரசியல் செய்வது திராவிடங்களின் வாடிக்கை என்ற தெரிந்தவிஷயத்துக்காக இல்லை இந்த வீடியோ! BSNL பற்றி பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என்ற செய்தியோடு ஆரம்பமாகிறது பாருங்கள், அதற்காக!மூடுவிழா இல்லை! பங்குகளை ஓரளவு விற்று மூலதனம் திரட்டப்போகிறார்களாம்!

வினவு சாயம் வெளுத்துப்போச்சு என்பதா? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் அப்படியே நம்பி விடுவீர்களா ? அதுவும் உள்நோக்கத்தோடு செய்தி பரப்புகிற நக்சல் குறுங்குழுக்கள் சொல்வதை அப்படி நம்பிவிடலாமா?

     
புது வன்னியர் சங்கம் தொடக்கம்! அப்படியானால் பழைய வன்னியர் சங்கம் என்னானதாம்? இருக்கிறது! அதுபாட்டுக்கு ஒரு ஓரத்தில்! பழைய வீரியத்துடன் இருக்கிறதா என்ற கேள்விக்கு மருத்துவர் ராமதாசு பதில் சொல்வாரா என்ன?  

    
வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்கிற வசனம் கொஞ்சம் பூமராங் மாதிரி வன்னியர் ஓட்டு அன்புமணிக்கு இல்லை என்று திரும்பியிருக்கிறது!
இன்றைக்கு இது செகன்ட் டோஸ்! எப்படியிருக்கிறது?  
    

10 comments:

 1. BSNL yet non-listed company in Stock Market and still it is under the control of Telecom Ministry. In the beginning itself it was in the Posts and Telegraph Department. When bifurcated to BSNL an assurance was given to the existing Telecom Employees that it will not be made into a company status and there is no question listing its shares in the Stock Market. On the basis of assurance given by the then Government only the existing Telcom Department was made to BSNL.

  ReplyDelete
  Replies
  1. perestroika glasnost இந்த இரண்டு வார்த்தைகள் தான் சோவியத் சோஷலிசத்தைக் கலைத்தவை என்பது நினைவிருக்கிறதா ஜீவி சார்? BSNL நிர்வாகத்திடம் அரசு கேட்டிருப்பது restructure, disinvestment, ஓர் closure இப்படி தெளிவானவிவரங்களோடு ஆப்ஷன்களை! 31000 கோடிக்குமேல், acumlated losses உள்ள வெள்ளையானையைக் கட்டித் தீனி போட்டே ஆக வேண்டுமா? ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய எனக்கே கேள்விப்படுகிற விஷயங்கள் தலைசுற்ற வைக்கிறது.

   https://swarajyamag.com/insta/bsnls-future-hangs-in-the-balance-government-asks-telecom-psu-to-consider-revival-scheme-disinvestment-or-closure

   Delete
 2. அரசு, அரசு அதிகாரத்திற்குட்போட்டே இருக்கும் அமைப்பிடம் கேட்கிறதா? ரொம்ப சரி.

  சொந்த மகனுக்கு சோறு போடாமல், இருக்கறதை ஊரார் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தாளாம், தாய். அந்தக் கதையாக அல்லவோ இருக்கிறது?

  ஓட்டப் போட்டியில் ஒருவனின் காலை மட்டும் கட்டிப் போட்டு ஓட்டப் பந்தயம் போ, என்று சொன்னார்களாம் அந்தக் கதையாக அல்லவோ இருக்கிறது?  ReplyDelete
  Replies
  1. அரசுத்துறையிடம் அரசுகேட்பது எப்படித்தவறாகும் ஜீவி சார்?
   பொதுத்துறை bsnl லை நாசமாக்கியது தயாநிதி காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது என்பதையும் சேர்த்துப் பாருங்கள். இப்போது தீர்வு என்ன என்று ஆராய்வது கூடத் தப்பாகத் தெரிகிறதா?

   Delete
 3. இந்த நிலைக்குக் காரணம் ஊழியர்கள் அல்ல. நாள் தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த இலாகா இது. அந்த தொழில் நுட்ப வளர்ச்சியை சவாலாய் ஏற்றுக் கொண்டு, தனியார்களில் கவர்ச்சிகர திட்ட்டங்களை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இலாகா.
  ஒரு காலத்தில் சாதாரண மக்களின் தேவைகளுக்கான இலாகாவாக இருந்த தபால் துறையின் நஷ்டங்கள் தொலைத்தொடர்புத் துறையின் லாபத்தால் ஈடுகட்டப் பட்டன.

  சுருக்கமாகச் சொன்னால் தொலைப்பேசித் துறை என்பது வருமானம் கொழிக்க வைக்கும் கொழுத்த இலாகா. இதன் மேல் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு கண் என்ன இரண்டு கண்ணுமே இருப்பது இயல்பு.
  அரசியல்வாதிகளின் நாசப்படுத்தலுக்காகப் போராடி ஊழியர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
  செல்லக் குழந்தைகளாய் இருக்கும் தனியார் தொலைத் தொடர்பு
  கம்பெனிகளுக்கு தரப்பட்டிருக்கும் 4G அலைக்கற்றை உபயோகத்தைக் கூட இன்னும் அரசு சார்ந்த இலாகாவுக்கு வழங்கப்படவில்லை.

  நாட்டின் பிரச்னைக்குரிய இடங்களில் BSNL மற்ற கொழுத்த வருமானம் உள்ள இடங்களில் தனியார்களின் செயல்பாடு என்ற ஏற்பாடு வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 4. தொலைபேசி இலாகா தேசம் பூராவும் நிறைந்திருக்கும் அதன் சொந்த கட்டிடங்களுக்குப் பெயர் பெற்றது. வானளாவிய டவர்கள், செயற்கோள் விண்ணில் நிலைநிறுத்திய செலவுகள், தேசம் பூராவுக்குமான நெட் ஒர்க் இதெற்கெல்லாம் அரசின் பணம் எவ்வளவு செலவாகியிருக்கும்?.. அரசின் பணம் என்றால் மக்களின் பணம்.

  இதை வெகு சுளுவாக தனியார் வசம் இந்தக் கையிலிருந்து அந்தக் கைக்கு மாற்றி விடுவது போல ஒப்படைத்து விடுவதற்கான ஏற்பாடு என்றால் நெஞ்சம் பதறுகிறது, சார்!

  ReplyDelete
 5. சரி, தீர்வு தான் என்ன?..

  உங்களுக்கு சரித்திரம் தெரியும். இந்தியன் வங்கியை மீட்டெடுத்தது எப்படி என்ற சரித்திரம் உங்களுக்குத் தெரியும். ஆவதும் அரசியலவாதியாலே, அழிவதும் அரசியல்வாதியாலே என்ற விநோதமான சூத்திரம் இது.

  குறைந்தபட்சம் அரசியல்வாதிகளினால் நாசமாக்கப்பட்டவை களையாவது அரசு முன்வந்து சீர்படுத்தக் கூடாதா? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற மாதிரி டிஸ் இன்வெஸ்ட்மெண்ட்டா, மூடிவிடுவதா என்றால் என்ன சொலவது, ஐயா?..
  டிஸ் இன்வெஸ்ட்மெண்ட் என்பது மெல்ல மெல்ல கொல்லப்போகும் நஞ்சு. மூடிவிடுவது என்பது ஒரேடியாக சாகடிக்கும் நஞ்சு. அவ்வளவு தான் வித்தியாசம்.

  பொன் முட்டையிடும் வாத்தை கீறிப்பார்க்க யார் தான் ஒப்புக்கொள்வார்கள்?.. ஒப்புக்கொள்ளும் நிகழ்வு கண்முன்னால் நடைபெறும் பொழுது சகித்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு தான்.

  ReplyDelete
 6. BSNL-ஏன் 4G அலைக்கற்றை செயல்பாட்டில் ஈடுபடவே இல்லை என்பது எனக்கு எப்பொழுதும் விளங்கவில்லை. மேலும் ஜியோ-விற்கு கொடுக்கப்பட்ட சலுகைகளும் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. ஜியோ பங்கு சந்தையில் விளையாடி லாப நட்டங்களில் புரட்டு வேலை செய்து மக்களையும்-ஏன் அரசையும் கூட-ஏமாற்றலாம். ஆனால் அரசு நிறுவனம் அப்படிப்பட்ட செயல்களில் இறங்க முடியாது என்பது மட்டுமல்ல அவர்களுக்கு ஈடு கொடுக்கக் கூட முடியாது. TRAI அமைப்பின் நிர்வாக முடிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies

  1. வாருங்கள் கபீரன்பன் சார்!

   https://www.thehindubusinessline.com/info-tech/bsnl-to-get-4g-spectrum-next-month-official/article24926541.ece
   இது போன வருட செப்டம்பர் மாதச் செய்தி. 4G அலைக்கற்றை ஏலத்தில் நிதிநிலைமை இல்லை. அனில் அம்பானியோடு கூட்டு சேர்ந்தார்கள். அனில் அம்பானி நிலைமையே இப்போது திவால் அறிவிப்பில்.

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!