பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்! திமுக எதற்காகப் போடுகிறது?

பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்! திமுக எதற்காகப் போடுகிறது?  The Great Hawk திரை!ப்படத்தை எனக்கு சிபாரிசு செய்த நண்பர் பந்துவுக்கு இந்தப்பதிவு கொஞ்சம் உதவியாக இருக்கும்!தலைப்புக்கும் இந்த முதல்வரிக்கும் என்ன சம்பந்தம் என்று திகைப்பவர்கள், அந்தவரியில் இருக்கும் சுட்டியில் தொடர்பு என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ரங்கராஜ் பாண்டே இந்த 24 நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்!

   
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அபாரமான வெற்றி பெற்ற ஒரு கட்சி, சின்னச்சின்ன உதிரிகளைக் கூட விடாமல், சேர்த்துக்கொண்டு ஒரு பலமான பெரிய கூட்டணி அமைத்திருக்கிற ஒரு கட்சி, நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கூட, அதிமுகவை விட அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி, இப்படித் திமுகவின் பலத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது உண்மைதானா?  அமைப்பு ரீதியான பலம், கூட்டணி ரீதியான பலம் என்று இருக்கும் ஒரு கட்சி திடீரென்று பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் உத்திகளுக்காக ஒரு ஒப்பந்தத்தைப் போடுவானேன்? இந்தக் கேள்விதான் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்படுத்தி இருக்கும் அதிர்வலைகளைத் தாண்டியும்  பரபரப்பான செய்தியாக! அப்படியென்னதிமுகவினருக்குத் தெரியாத தேர்தல்நேர அகட விகடங்களை,  பிரசாந்த் கிஷோர் வந்து சொல்லிக் கொடுத்து விடப்போகிறார்? ரங்கராஜ் பாண்டே இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு விடை சொல்கிறார். அதையும் தாண்டி வேறு பின்னணி எதுவும் இருக்கிறதா? கொஞ்சம் பார்த்துவிடலாமா?

  இது IPac அடித்துக் கொள்கிற சுயதம்பட்டம்  

இசுடாலினுக்கு பிரசாந்த் கிஷோருடைய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சிபாரிசு செய்ததே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் என்பதாக ஒரு செய்தி நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே இங்கு உலாவிக்கொண்டுதான் இருந்தது. நடுவில் பிரசாந்த் கிஷோருடன், அதிமுக, கமல் காசர், ரஜனிகாந்த் இவர்களுமே கூடப் பேசிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்ததில் ஒரே ஒரு விஷயம் நன்றாகப் புலப்பட்டது. ஆந்திராவில் கால் பதித்த பிரசாந்த் கிஷோர் தன்னுடைய கடையை அடுத்து தமிழ்நாட்டிலும் போட முடிவெடுத்து விட்டார் என்பதுதான் அது. கடைசியாக திமுகவுடன் பேரம் படிந்து இசுடாலின் அதைப்  பகிரங்கமாகவும் அறிவித்து விட்டார்! பிரசாந்த் கிஷோர் எப்படிச் செயல்படுகிறார் என்பதை காங்கிரஸ் ஆதரவு ஊடகம் காரவன் செய்திக்கட்டுரை ஒன்றில் பார்க்கலாம்!

Data Science! கிடைக்கிற தகவல்களை வைத்து ஒரு மனிதனுடைய உளவியலை அனுமானிக்க முடியும் என்பது தெரிந்தது தான்! Mindhunter என்று கிரிமினல்களை ஆராய்ந்து ஒரு proile உருவாக்குகிற அமெரிக்க FBI விஞ்ஞானியை மையமாக வைத்து 2 சீசன்கள் வெப் சீரீசாகப் பார்த்ததுமுண்டு!   ஆனால் கிடைக்கிற தகவல்களை வைத்துக் கொஞ்சம்  manipulate செய்து மனிதர்களை ஒரு குறிப்பிட்ட முடிவெடுக்கத் தூண்டவும் செய்யலாம் என்ற மாதிரியான data science கொஞ்சம் விபரீதமாகத்தான் தெரிகிறது. சுஜாதா இதையே தனது சொர்கத்தீவு நாவலில் வேறொரு விதமாகச் சொல்லி இருந்ததும் நினைவுக்கு வருகிறது.இந்திய ஜனங்களையோ இந்திய ஜனநாயகத்தையோ இந்த டேட்டா சயன்டிஸ்டுகளால் புரிந்து கொள்ள முடியுமா manipulate செய்ய முடியுமா என்பது என்னைப்பொறுத்தவரை இன்னமும் ஒரு கேள்விக் குறியாக மட்டுமே இருக்கிறது.இப்படி முந்தைய பதிவில் சொல்லியிருந்ததைக் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டு ....பிரசாந்த் கிஷோர் Cambridge Analytica மாதிரித்தான் செயல்படுகிறாரா?


மதன் ரவிச்சந்திரன் வழக்கம்போல இந்த விஷயத்திலும் சுறுசுறுப்பாக ஒரு விவாதத்தை நடத்தியிருக்கிறார். இதில் 8ஷோர் கே சுவாமி ஒருவர் மட்டும்தான் பிரசாந்த் கிஷோருடைய வேலையென்ன என்பதைக் கொஞ்சம் புரிந்துகொண்டு பேசுகிறார். விவாதம் 58 நிமிடம்  எதுமாதிரியான கேள்விகளை முன்வைத்த்தால் தான் தெளிவான விவாதம் விடைகள் கிடைக்கும் என்பதில் கவனம் வேண்டியிருப்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதற்கு மேல் இந்த வீடியோவில் எதுவும் இல்லை.

இந்தப்பக்கங்களில் மம்தா பானெர்ஜி பற்றி எழுதிய பதிவிகளில் பிரசாந்த் கிஷோர் மம்தாவுக்காக என்ன உத்திகள் வகுத்துக் கொடுத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். சுருக்கமாக சில விஷயங்களைப் பார்த்துவிடலாம். முதலில்  Image makeover, அடுத்து IPAC கட்சிக்காரர்களோடு சேர்ந்து வேலை செய்வதில்லை. தன்னுடைய டீமுடன் களத்தில் இறங்கி கட்சிக்காரர்கள் வேலைசெய்வதைக் கண்காணித்து வேலைசெய்கிற கட்சித்தலைவர் ஒருவருக்கு  மட்டுமே ரிபோர்ட் செய்வது. ஜனங்கள் மத்தியில் என்ன மாதிரி விஷயங்கள் எடுபடும், என்ன சொன்னால் ஆதரவு பெருகும் என்பதைக் கண்டறிந்து சொல்வது இத்தியாதி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் இதுவிஷயமாக வந்திருக்கும் செய்திக்கட்டுரையில் தினமலர் R வெங்கடேஷ் கொஞ்சம் கூடுதல் காரணிகளாக, கொஞ்சம் யோசிக்க வேண்டிய தகவலைச் சொல்லி இருக்கிறார்.

Venkatesh further added that the aspirations of today’s voters differ from one place to another even within the state. “The urban and the rural voters have different aspirations, it’s not one-dimensional anymore. Earlier there used to be one leader and the public followed whatever he said, and the leader took the opinion of the public if something is not working. But today, with the advent rise of social media and wide-spread debate throughout the state and the emergence of new stakeholders, it has become multi-dimensional. So to save the existing vote bank, and to reach the new generation of voters, the parties think they need external support and hence they hire them,” he added.   

மீண்டும் சந்திப்போம்.       
   

5 comments:

  1. சிறந்த தொகுப்பு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      பதிவில் என்ன தோன்றியது என்பதையும் சொல்லியிருக்கலாமே! எனக்கு ஒரு சிறு உதவி வேண்டும். இளந்தலைமுறை இந்தப் பதிவைப் படித்தால் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை! உங்கள் மகள்களிடம் இந்தப்பதிவு என்ன மாதிரிக் கருத்தைத் தூண்டுகிறது என்று கேட்டுச் சொல்லுங்களேன்!

      Delete
  2. நான் புரிந்தவரையில் தமிழகத்தில் தேர்தல் நடப்பதற்கு முன்பு 72 மணி நேரம் தான் மிக முக்கியம். அதிலும் கடைசி 24 மணி நேரம் மிக மிக முக்கியம். இங்கு எவரும் நல்லவர், கொள்கை கொண்டவர், நமக்காக உழைப்பார் என்ற எண்ணத்தில் இதுவரையிலும் ஓட்டளித்தது இல்லை. இனிமேலும் அப்படித்தான். ஐபிகே என்ன தாக்கத்தை இங்கே உருவாக்க முடியும் என்பதே எனக்குப் புரியவில்லை. திமுக எப்படியும் ஆட்சியில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. ஒருவர் எழுதியிருந்தார் மாதம் 2 லட்சம் சம்பளம் உள்ள முதலமைச்சர் பதவிக்கு ஏனிந்த பதட்டம்? அப்படியென்றால் என்ன? என்று சொன்ன போது எனக்குத் தெரிகின்றது. மற்றபடி உங்கள் இணைப்புகள் அனைத்தையும் படித்து முடித்தேன். மகளிடம் நாளைக்குப் படிக்கச் சொல்லி உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      மம்தா பானெர்ஜி பற்றி இந்தப்பக்கங்களில் எழுதுவதில் அவரிடம் பிரசாந்த் கிஷோர் செய்திருக்கிற இமேஜைப் புதுப்பித்தல் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறேன். கட்சிக்காரர்களுடைய செயலாடுகளைத் தனியே கண்காணித்து மம்தாவுக்கு மட்டும் நேரடியாக ரிப்போர்ட் செய்வது, எதிரிகளுடைய பிரசாரத்தை முறியடிக்க என்ன செய்தால் சரியாக வரும் என்ற ஆலோசனை இப்படி ஒரு முழுமையான கட்டண சேவை என்பதை இந்த பதிவிலேயே சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.

      Cambridge Analytica அளவுக்கு இவரால் மூளைச்சலவை செய்யமுடியுமா என்பது கேள்விக்குறி தான்! இந்தியச் சூழ்நிலையில் அது சாத்திய படாதுதான்! ஆனால் தொழில்நுட்பத்தை வைத்து ஒரு வலிமையான இமேஜை உருவாக்க முடியும், விமரிசனங்களுக்குச் சரியான பதில் சொல்ல முடியும், சுருக்கமாக பலவீனங்கள் குறைவான ஒரு பிரசாரத்தை நடத்த முடியும். Netlix இல் The Great Hawk ஸ்ட்ரீமிங் வீடியோ டாகுமென்டரியாகக் கிடக்கிறது .Data Science எப்படித் தகவலை வெற்றிகரமாக manipulate செய்யமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். மகள் வயதை ஒட்டிய இளந்தலைமுறை இந்த விஷயங்களை எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்கு இந்த விஷயங்களையும் சொல்லுங்கள்.

      Delete
    2. திமுகவின் பதட்டம் வெறும் 2 லட்சம் சம்பளம் வருகிற பதவிக்காக மட்டும்தானா? திமுக தலைவர் குடும்பத்தின் சொத்து மதிப்பு என்னவென்று ஊகிக்கவாவது முடியுமா? கட்சிப்பிரமுகர்கள் சொத்து எப்படி சேர்க்கிறார்கள் என்பது கூடத்தெரியாத அப்பாவியா அந்த நண்பர்? !!

      மூன்றாவதுமுறையும் தோல்வியைச் சந்திக்கவேண்டிவந்தால் திமுகவின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும் என்பது அவருக்குப் புரியவில்லையாமா? பரவாயில்லை! ஆனால் திமுக தலைவர்களுக்கு அது நன்றாகப் புரிந்திருக்கிறதே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!