சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் #அரசியல் #செய்தி விமரிசனம்!

தமிழக அரசியல்களம் ஒரு தெளிவுக்கு வரட்டும், பிறகு அதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகவே எழுதலாம் என்று நினைத்தால், இங்கே ஆளுக்காள் மாற்றிமாற்றிக் குட்டையைக் குழப்பிக்கொண்டே இருக்கிறார்களே! அப்படியே மக்களவை பக்கம் போய் அங்கே நம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் அங்கேயும்  வெறும் அக்கப்போர் மட்டும் தான் என்பதில் காங்கிரசின் பங்கு மகத்தானது. நேற்று டில்லியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காண்டி பேசியவிதம் என்னமாதிரியானது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்!  "பொறுத்திருந்து பாருங்கள்! இப்போது பேசும் நரேந்திர மோடி இன்னும் ஆறேழு மாதங்களில் தன்னுடைய வீட்டை விட்டே வெளியே வரமுடியாது.இந்திய இளைஞர்கள் அவரைக் கம்பாலேயே அடிப்பார்கள். நம்முடைய இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லையென்றால் இந்தியா முன்னேற முடியாது என்பதை அவருக்குப் புரிய வைப்பார்கள்"  ராகுல் காண்டி இன்னமும் அரசியலைப் புரிந்துகொள்ள முடியாதவராகத் தான் இருக்கிறார் என்பதால் பப்பு என்று அழைப்பதில் தவறு எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை! இன்று லோக்சபா விவாதத்தில் பிரதமர் கொஞ்சம் கிண்டலாகப் பதில் சொல்லி ராகுலை உள்ளுக்குள் நிறைய அழவைத்து விட்டார் போல!


"In 70 years, no Congress leader has ever been self-sufficient. I heard one leader's manifesto - he said, we will beat Modi with a stick in six months. I can imagine that it is a difficult prospect (laughter in the house), so it will take six months to prepare. But even I will prepare in these six months and do more surya namaskar so that I am ready...the kind of abuses I have been subjected to in the past 20 years, I will make myself gaali-proof (abuse-proof) and also danda-proof (stick-proof)," the Prime Minister said என்கிறது NDTV செய்தி. ராகுல் காண்டி நெளிந்து கொண்டே எழுந்து குறுக்கிட்டுப்பேச முயற்சித்தபோது பிரதமர் நரேந்திர மோடி, "நான் 30-40 நிமிடங்களாகப் பேசிக்கோஜிடிருக்கிறேன். கரண்ட் அங்கு போய்ச்சேர இவ்வளவு நேரமாகியிருக்கிறது. இந்தமாதிரி ஏகப்பட்ட ட்யூப்லைட்டுகள் இருக்கின்றன" என்று சொன்னதில் ஏகப்பட்ட சிரிப்பலைகள் என்று செய்திகள் சொல்கின்றன. பப்புவிடம் நிருபர்கள் ட்யூப்லைட்டு கமென்ட் பற்றிக் கேட்டபோது, பதில் சொல்ல மறுத்து விட்டாராம்! என்னவென்று சொல்லுவாராம்?😂😉😋  

       
இது என்னுடைய ட்வீட் தான்!  https://twitter.com/consenttobe  ட்வீட்டர் பக்கத்தைக் குறித்து வைத்துக் கொள்வதற்காக! இதுவும் கூட ஒரு #வெளம்பரம் அரசியல் தான்!


இந்த மாதிரி செலக்டிவ் ஆடியன்ஸ் மட்டுமே இருக்கிற சேனல்கள் வெளியிடுகிற கருத்துக்கணிப்பு எதையுமே நான் நம்புவதில்லை. இதே கேள்வியை வைத்து நியூஸ் 7 சேனல் கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தால், ரிசல்ட் எப்படி வரும் என்பதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? தவிர நம்மூரில் கருத்தும் கணிப்பும் மாறிக் கொண்டே இருக்கும் என்பதும் நினைவுக்கு வந்தால்  இங்குள்ள         ஊடகங்கள் எல்லாம் ஒரேநேரத்தில் ஒரே விஷயத்தைப் பற்றியே ஊளையிடுவது ஏன் என்ற கேள்விக்கான விடையும் தெரிய வரும் என்பதைக்கூட மறுபடி மறுபடி சொல்ல வேண்டியிருக்காது!


Speaking at Adab Festival at the Karachi Arts Council, Pakistani nuclear scientist and academic Pervez Hoodbhoy was critical of Pakistan's founder Mohammed Ali Jinnah. He added that the 2 nation theory made no sense and that Pakistan was not made for the Armed Forces of Pakistan but for its people. பாகிஸ்தான் அணுவிஞ்ஞானிக்கு வந்த ஞானம் கூட நம்மூர் செகுலர்வியாதிகளுக்கு வரமாட்டேன் என்கிறதே! ராகுல் காண்டி பேசிய மாதிரி தடியால் அடித்தால் தான் ஞானம் பழுக்குமோ? #டவுட்டு

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!