மண்டேன்னா ஒண்ணு! #காமெடி அரசியல்ல தான்!

தயாநிதி மாறன் பேசக்கூட வேண்டாம்! மனிதர் சும்மா வந்தாலே போதும், சிரிக்கத் தயாராகிவிடலாம்! அப்படி ஒரு ராசியான உடல்மொழி! பேசவும் ஆரம்பித்தார் என்றால் கேட்கவும் வேண்டுமா? கருணாநிதி ஈறு பேன் தோசை ரஜனி விஜய் LIC  என்று வரிசையாக கலந்து கட்டி காமெடி செய்வதற்காகவே மக்களவைக்குப் போயிருக்கிறார் போல!


அந்தநாட்களில் தெருக்கூத்து நாடகங்களில் கோமாளி வேடம் போடுகிறவர் அடிக்கிற கூத்து பிரதான கவனம் பெறும்! ஆனால் தயாநிதி மாறன் அடிக்கிற கூத்து எவரையும் இம்ப்ரெஸ் செய்த மாதிரித் தெரியவில்லை!


சலீம்! ரங்கராஜ் பாண்டே வெளியேற்றப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு வந்தவர், அந்தநாளைய  தினத்தந்தி பாணியிலேயே செய்திகளைச் சொல்வது, வாசிப்பது  #ஊடகக்காமெடி என்றே சொல்லிவிடலாம்! 


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், எக்சிட் கணிப்புகள் எல்லாமே மறுபடி ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொன்னாலும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உள்ளூர ஒரு உதறல் இருந்து கொண்டே  தான் இருக்கும் போல! PGurus தளத்தில் ரிசல்ட் வேறுமாதிரிவந்துவிட்டால் அரவிந்த் கேஜ்ரிவால் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது பழியைப்போடத் தயாராக இருப்பதைக் கேலியாகப் படம் வரைந்து விளக்குகிறார்கள். #என்னத்தசொல்ல 


ரங்கராஜ் பாண்டே! கடந்த ஓராண்டில் சமூகவலைதளங்களில் தன்னுடைய இருப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே போகிறார். இதர யூட்யூப் சேனல்களுமே அவரைத் தேடிப்போய் நேர்காணல் செய்து வெளியிடுவதும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கே நடிகர் விஜய் உள்ளிட்டு பல இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது இங்கே தமிழக ஊடகங்களால் மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. அதைக்குறித்து ரங்கராஜ் பாண்டே ஒரு தெளிவான பார்வையை முன்வைக்கிறார். எல்லா விஷயங்களுக்கும் சாயம்பூசுகிற வேலையை ஊடகங்கள் செய்துவருவதை ஒரு ஊடகக்காரராக இருந்து கொண்டே சொல்வது அவருடைய பலம்! அந்த பலத்தை தருவது எது? எதையும் சொல்கிற விதத்தில் சொல்வதுதான் என்பது தெரிகிறதா?  

மீண்டும் சந்திப்போம்.  

3 comments:

  1. ரங்கராஜ் பாண்டே கவர்ந்தார்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! ஒவ்வொருவரும் அவரவர் நிலைபாட்டில் தெளிவாகாத்தான் இருக்கிறார்கள். behindwoods தளம் விஜய்யை சீண்டுறது நல்லதுக்கில்ல என்று இந்தவீடியோவுக்குத் தலைப்பு கொடுத்திருக்கிறது. ரங்கராஜ் பாண்டே அப்படியா சொன்னார்?

      ஊடகங்களை on face value நம்பக்கூடாது என்ற பாடத்தை ஜனங்கள் கற்றுக்கொள்ளும்போதுதான் இவர்களுடைய கொட்டமும் ஒடுங்கும்! இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன்.

      Delete
    2. ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்திலும் அதே தலைப்பு இருப்பதை இப்போது கவனித்தேன் ஆனால் வருமானவரி சோதனை கோபுரம் பிலிம்ஸ் மதுரை அன்புச்செழியனை முன்வைத்து நடத்தப்பட்டதுதானே தவிர விஜய் அல்ல என்பதை வருமானவரித்துறை தெளிவுபடுத்தியபிறகும் கூட, இதை ஒரு விவாதமாக நடத்துவதன் நோக்கம் என்ன?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!