ஒரு புதன்கிழமை! வழக்கம்போல கேள்விகளுடன்!

நாடும்  நாமும் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதான கேள்விகளே ஒருபுதன்கிழமை என்று தலைப்பிட்டு எழுதுவதில் இடம்பெறுவதைக் கவனித்திருப்பீர்கள். இன்றைய ஊடகச் செய்திகள். சேனல் விவாதங்களில் டில்லி முழுதுமே பற்றி எரிகிற மாதிரி ஒரே கூக்குரல்! வன்முறைக்குப் பொறுப்பேற்று அமித் ஷா பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதுதான் சோனியா காங்கிரசுடைய  டக்கு! ஞாயிறு முதல் அமித் ஷா எங்கேபோனார் என்று வரிசையாக ஆறு கேள்விகளைக் கேட்டிருக்கிறார் சோனியா! பப்பு எங்கேபோனார் என்று சொல்லியிருக்கலாமே! 


"We wanted to walk till Home Minister's house and demand his resignation, but police stopped us," says Priyanka Gandhi. "Delhi is your city and it is being destroyed. The government has failed to maintain peace,"  இது ப்ரியங்கா வாத்ராவின் டக்கு! பப்பு எங்கே காணோமே என்று பார்த்தால், வழக்கம்போல வெளிநாட்டுக்கு உல்லாசப்பயணம் போய்விட்டாராம்!

டில்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் வன்முறையில் ஆம் ஆத்மி எவரும் இறங்கவில்லை. வெளியிலிருந்து வந்த விஷமக்காரர்கள் வேலை என்று  சொல்லியிருக்கிறார். AAPயின் கோபால் ராயும் டில்லி உயர்நீதிமன்றமும் ஒரேமாதிரியாக பிஜேபியின் கபில் மிஸ்ரா வெறுப்பைவளர்க்கும் விதத்தில் பேசியதுதான் காரணம் என்று சொல்வது மிகவும் விசித்திரம்.

     
சதீஷ் ஆசார்யாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் வந்துவிட்டுப் போனதில் பித்தம் நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது என்பது வரைந்துதள்ளும் கார்டூன்களில் வெளிப்படுகிறது!  

இப்ப என்ன செய்வீங்க? இதுக்கு பதில் சொல்லுங்க!


ராஜ கண்ணப்பன்! அதிமுக அமைச்சராக இருந்தவர். சிவகங்கையில் பானாசீனாவை எதிர்த்துப் போட்டியிட்டு தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு நடந்ததாக வழக்கும் தொடுத்தவர். யாதவர் சமூகத்தின் பிரதிநிதியாக அறியப்படுபவர். #சாதிஒழிப்புகட்சி திமுகவில் கடந்த ஞாயிறன்று மதுரை யானைமலை ஒத்தக்கடையில் பெரும் செலவில் கூட்டம் கூட்டி இசுடாலினுக்கு வெள்ளிச்செங்கோல் எல்லாம் கொடுத்து இணைந்திருக்கிறார். கோனார் வாக்குகள் அப்படியே திமுகவுக்கு விழுந்துவிடுமோ என்ற கிலியை அதிமுகவுக்கு ஏற்படுத்தியிருக்கிறார் என்கிற முக்கியமான செய்தியை சொல்லாமல் விடலாமா?

  
டில்லியில் ஷாஹீன் பாக் சாலையை மறித்துப் போராட அனுமதித்தது இப்படி வளர்ந்து மூன்று நான்கு நாட்களாக டில்லி பற்றி எரிகிறது. இங்கே சென்னை வண்ணாரப்பேட்டை  கலவரமும் பரவுகிற அபாயம் இருக்கத்தான் செய்கிறது. அதிசயம் என்னவென்றால் பிரதமர் நரேந்திர மோடி இவைமீது ஒரு உறுதியான நடவடிக்கையை எடுப்பார் என்கிற நம்பிக்கை  இன்னமும்  இருக்கிறது பாருங்கள், அதுதான்!   

மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!