தமிழக அரசியல்! திரைப்பட அரசியல்! பதவிக்காக! #சுஜாதா

தமிழக அரசியலின் ஆஸ்தான திராவிட நிரந்தரக் கோமாளிகள்  கி வீரமணி. சுபவீ இருவரையும் சில நாட்களாகக் காணோமே என்று பார்த்ததில் விகடன் வெப் டிவி நேற்றைக்கே கி வீரமணியை கூட்டி வந்திருப்பதை இன்றைக்குத்தான் பார்த்தேன். Enjoy 23 minutes nonstop comedy! இதையும் கூடப் பார்க்க வைத்தது வீடியோவுக்கு கொடுத்திருந்த "ரஜனிக்கு விளம்பரம் தர விரும்பவில்லை" என்கிற தலைப்புதான்! ஜனவரி 14 துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜனிகாந்த் திராவிடர் கழகத்துக்குக் கொடுத்த மிக அற்புதமான விளம்பரம் இப்படி முன்னெச்சரிக்கையாகச் சொல்ல வைத்ததோ?

     
திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் உத்திவகுக்க ஒப்பந்தம் போட்டிருப்பது பற்றிக்  கேட்க உரிமையில்லையாம்! கி.வீரமணி நிலைமை இந்த அளவுக்கு ஆகிப்போகும் என்பது கூட  மு.க.அழகிரி மகன் தயாநிதி  ஓசிச்சோறு வீரமணி என்று சொன்ன நாளிலிருந்தே தெரிந்தது தான்! சேய்க்கழகம் தாய்க்கழகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரமும் வந்து விட்டது. சென்னையில் புதன்கிழமையன்று தமிழர் ஒற்றுமை மேடை என்ற போர்வையில் நடந்த கூட்டத்தில்  தமிழர் தலைவர் என்று சொல்லிக் கொள்கிற கி.வீரமணியோ விசிகவின் திருமாவளவனோ தென்படவில்லை என்பதில் ஏதாவது புலப்படுகிறதா?  நிகழ்ச்சியின் முழு வீடியோவும் கிடைக்கவில்லை என்பதால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை! மாநாட்டு விளம்பர போஸ்டர் பார்த்த சென்னைவாசிகள் யாராவது தகவல் சொன்னால் இங்கேயும் மாற்றிக் கொள்ளலாம்!


முதல் டீசரிலேயே 45 லட்சம் பார்வையாளர்கள் கவனத்தை மிகவும் ஈர்த்த திரௌபதி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி விட்டது. கூடவே கலவையான எதிர்வினைகளும் விமரிசனங்களும் வெளியாக ஆரம்பித்து விட்டன. Crowd Funding வழியாக தயாரிப்புச் செலவுக்கான மூலதனத்தைப் பெற்று வெளியாகும் திரைப்படம் இது என்பது கூடுதல் விசேஷம். பலநூறு கோடிகள் செலவழித்து, ஊரில் உள்ள தியேட்டர்களில் பாதிக்கும் மேற்பட்டவையில் ரிலீசாகி அப்புறமும் தயாரிப்பாளரின் கையைக் கடிக்கும் படங்களுக்கு மாற்றாக இதுமாதிரி முயற்சி வளரவேண்டும் என்பது திரைப்படங்களை நேசிக்கும் அனைவருடைய ஆசையாகவும் இருக்கிறது. நண்பர் உண்மைத்தமிழன் இதே மாதிரிக் களத்தில் வேறு மாதிரியான டிராக்கில்  நடிகர் போஸ் வெங்கட் முதன் முறையாக இயக்குனர் அவதாரமெடுத்து இயக்கியிருக்கிற கன்னிமாடம் படத்துக்குப் பாராட்டு மழைபொழிகிற சாக்கில் திரௌபதி படத்துக்கு கண்டனம் தெரிவிக்கின்ற மாதிரி முகநூலில் எழுதி இருக்கிறார். ஒவ்வொருவர் ரசனையும் பார்வையும் ஒரு விதம், அவ்வளவுதான்!


சுஜாதா எழுதிய 24 ரூபாய் தீவு நாவலை முடித்துவிட்டு இன்று மீள்வாசிப்புக்காக எடுத்துக் கொண்ட இன்னொரு நாவல் பதவிக்காக. இந்த அட்டைப்படம் வெறும் represetational ஆக மட்டுமே. (உயிர்மை புத்தகம் எதையும் நான் இதுவரை வாங்கியது இல்லை) 

மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!