துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜனிகாந்த் ஆரம்பித்து வைத்த சர்ச்சையை அப்படியே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்னும் கொஞ்சம் பரபரப்பாக்கினார். அதை மறக்கடிக்க பிரசாந்த் கிஷோருடன் திமுக என்று பரபரப்பு ஓய்வதற்கு முன்னால், மறுபடியும் ரஜனிகாந்த் கிட்டத்தட்ட தன்னுடைய அரசியல் நிலைபாடு என்ன என்பதை வெறும் மூன்றே நிமிடம் பேசியிருப்பது அரசியல் களத்தை இன்னும் கொஞ்சம் சூடேற்றியிருக்கிறது.
மூன்றுநிமிடத்துக்குள் 14 தகவல்களைச் சொல்லிவிட முடியுமா? புதியதலைமுறை count எண்ணிச் சொல்லி இருப்பது கொஞ்சம் சுவாரசியம்! கொஞ்சம் முழுதாகப் பார்க்க இன்னொரு சுட்டி. லயோலா கல்லூரி வாசலில் CAAவுக்கு எதிராகக் கையெழுத்து வாங்கும் உதயநிதி கூட உடனடியாகக் கருத்து சொல்லிவிட்டார்! அது கூட ஒரு நிமிடத்துக்குள்ளாகத் தான்!
ரஜனிகாந்த் இன்னமும் நடிகராகத்தான் இருக்கிறார். அவருக்கு அரசியல் இன்னமும் புரியவில்லை.கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரட்டும் அப்புறம் பதில் சொல்லலாம் என்று அதே கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி ஒரு இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருப்பதான பேச்சு எதற்காக?
கமல் காசர் நடத்தும் மக்கள் நீதி மய்யம் கடை இன்னும் இருக்கிறது என்பதை மறந்துவிட்டோமா? ஆமாம் ஐயா நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்கிற கவிஞர் சினேகன் பேச்சு. சும்மா 24 நிமிடம் தான்! என்ன சொல்கிறார் என்று கேட்டுத்தான் பாருங்களேன்!
அதென்னவோ கோலாகல ஸ்ரீனிவாஸ், ரவீந்திரன் துரைசாமி உட்படப் பல அரசியல் விமரிசகர்களும், ரஜனிகாந்தை எதிர்கொள்வதற்காகத்தான் திமுக தலீவர் இசுடாலின் பிரசாந்த் கிஷோருடைய IPAC நிறுவனத்தோடு கைகோர்த்திருக்கிறார் என்ற ஒரு புள்ளியில் ஒன்றுசேர்கிறார்கள். வீடியோ 32 நிமிடம்.
காங்கிரசின் கே எஸ் அழகிரியும் கார்த்தி சிதம்பரமும் வெறுத்துப்போயிருப்பது நன்றாகவே தெரிகிறது.
பழ. கருப்பையா அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டு இருந்த நிலையில் கூட காங்கிரஸ், கழகங்களுடைய கொள்கை,யோக்கியதை இன்னதுதான் என்று சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டார்.
அப்புறமென்ன? 😂😂
மீண்டும் சந்திப்போம்.
ரஜினிக்கு அரசியல் புரியவில்லை என்று சொல்வது யார்? நேரம்தான். ரஜினிக்கு அரசியல் அத்துப்படி என்று சொல்ல வரவில்லை. ஆனால் சொல்பவர்? அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறதோ!
ReplyDeleteஸ்ரீராம்! இசுடாலின் சொன்னதையே திருப்பிச்சொல்லும் உநிதி திரும்பத்திரும்ப சொல்லவருவது இதுதான்: இப்போது நீ வெறும் நடிகன்மட்டும்தான்! அதனால் அரசியல் பேசக்கூடாது. அரசியல்கட்சி ஆரம்பித்து அப்புறம் அரசியல்பேசு அப்போது தான் உனக்கு நான் பதில் சொல்லுவேன்.
Deleteகூத்தாடிக் கூத்தாடி ஆட்சியைப்பிடித்த திமுக இப்போது ரஜனிகாந்த் என்ற கூத்தாடியைப்பார்த்து மிரள்கிறது, எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அடடே... மக்கள் நீதி மய்யம் என்ற ஒன்று இருந்தது இல்லை? அல்லது இருக்கிறது இல்லை?
ReplyDeleteஅதை அவர்களுக்கே ஞாபகப்படுத்திக் கொள்வதற்காகத்தான் இப்படி இடைவெளிவிட்டாவது பேசிக் கொள்கிறார்களோ? :-))(
Delete