மண்டேன்னா ஒண்ணு! #ஸ்பெக்ட்ரம் #அரசியல் #வண்ணாரப்பேட்டை

வினை விதைத்துவிட்டுப் போனவன் ஒருத்தன்! அதை அறுவடை செய்து அனுபவிப்பவன் வேறொருவனா? என்னய்யா லாஜிக் இது? கேள்விப்பட்ட பழமொழி வேறு மாதிரி இருந்ததே என்று திகைக்கிறீர்களா? இப்படி நடப்பது நம்மூர் அரசியலில் தான் என்றால் கொஞ்சம் புரியாவிட்டால் கூட தலையை ஆட்டிவிட்டுப் போய் விடுவீர்களா? The Print தளத்தில் சேகர் குப்தா அப்படித் தான் இந்த 25 நிமிட வீடியோவில் நம்முடைய கையைப் பிடித்து இழுக்கிறார்!


ஆதிப்பாவம் என்று கிறித்தவர்கள் சொல்வார்களே அது போல 2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசா செய்ததைத் தொட்டு, இன்றைக்கு ஏர்டெல், வோடபோன்- ஐடியா கம்பெனிகள் திவாலாகிற நிலைமைக்குப் போய்விடுமோ என்ற கவலையில் வேறு சில விஷயங்களையும் சேர்த்துச் சொல்கிறார். 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியதில்  ஆ.ராசா, கனிமொழி இருவரை மட்டும் திஹார் சிறையில் வைத்த மன்மோகன் சிங் அரசு, 2011 இல் டெலிகாம் துறையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்துச் செய்த கோளாறால், இன்றைக்கு ஏர்டெல், வோடபோன்- ஐடியா இரு நிறுவனங்களும் தலா 50000 கோடி ரூபாய்களை அரசுக்குச் செலுத்தியே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாகச் சொன்னதுதான் சேகர் குப்தாவின் இந்த புலம்பலுக்குக் காரணம். நரேந்திர மோடி அரசு இந்தவிஷயத்தில் இன்னமும் தலையிடாமல், அந்த இரு நிறுவனங்களைக் காப்பாற்றாமல் இருக்கிறதே என்கிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அந்த 1, 76000 கோடி ரூபாய்களையே திரும்பத்திரும்பச் சொல்வதில் உள்குத்து ஏதாவது இருக்குமோ? அதை யோசித்துக் கொண்டே, பதிவின் ஆரம்ப வரிகள் பொருத்தமானதுதானா என்றும் சொல்லுங்கள்!

கொஞ்சம் காமெடி இடைவேளையாக இந்தப் படம் கண்ணில் பட்டது. ஒருகாலத்தில் கலிங்கப்பட்டி இருந்த இருப்பென்ன கிரேக்க வரலாறு பேசியதென்ன? #விதிவலியது

.  
இப்படி நையாண்டி நைனாவாக்கி விட்டார்களே! 


தலைப்பு சரிதானா? கொதிநிலைக்குக் கொண்டு போகிறவர்கள் யார்? அரசியல் ஆதாயம் பெறுகிறவர் யார்? எல்லோருக்குமே தெரிந்த விடைகள்தான்! இந்த 19 நிமிட வீடியோவில் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி அவருடைய பார்வையில் சென்னை வண்ணாரப்பேட்டை களேபரங்களைப் பற்றிச் சொல்கிறார். அவருடைய பார்வை ஒருபக்கம் இருக்கட்டும்! சில சிம்பிளான கேள்விகளுக்குப் பதில் தெரிகிறதா சொல்லுங்கள்!

1. CAA வினால் தமிழ்நாட்டில் யாருக்கு என்ன பாதிப்பு? (இந்தியாவில் என்றே கேட்டிருக்கலாம்)   

2. போராட்டக்காரர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்  என்பது. கும்பலாகக் கூடிக் கலவரம் செய்தால் அதற்குப் பணிந்து தமிழ்நாடு சட்டசபையும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிவிட  வேண்டியதுதானா? அப்படியே நிறைவேற்றினாலும் சட்டசபைத் தீர்மானத்துக்கு என்ன மரியாதை என்பது தெரிந்துதான் கேட்கிறார்களாமா?

3. அரசியல் சாசனத்தை, தேசியக்கொடியை காட்டிக் கொண்டு நடத்துகிற வன்முறை, போராட்டம், சவடால் பேச்சுக்கள், இறுதியில்  கேலிக்குரியதாகவே  ஆகிப்போகும் என்பது தெரியாமல் தான் நடக்கிறதா?

மீண்டும் சந்திப்போம். 

4 comments:

  1. Replies
    1. பாரத மணித்திருநாடு வாழவேண்டும் என்பதுதான் அனைவருடைய பிரார்த்தனையாகவும் இருக்கிறது அம்மா!

      Delete
  2. எடப்பாடி சட்டசபையில் பேசிய பேச்சைக் கேட்கவும். தொடக்கத்தில் அவர்களை அழைத்து ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யும் எண்ணம் உள்ளதா என்ற கேட்ட போது அனைவரும் இல்லை என்றே சொல்லிவிட்டு திடீரென்று அத்து மீறி உள்ளனர்.அரசியல் தூண்டுதல் இல்லாமல் இது நடக்க வாய்ப்பில்லை.

    ReplyDelete
    Replies
    1. கொண்டையை மறைக்கத்தெரியாத வடிவேலு காமெடி மாதிரி, முதலமைச்சர் சட்டசபையில் பேசுவதற்கு முன்னாலேயே குட்டு வெளியாகிவிட்டதே ஜோதிஜி!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!