டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகை Khangress கட்சியில் ஏகத்துக்கும் காண்டு கிளப்பியிருக்கிறது. அதே போல டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் இந்த வருகையால் இந்தியாவுக்கு ஒரு பயனுமில்லை என்று சொல்லி விட்டார். ஆனால் டொனால்ட் ட்ரம்ப்பையும் அவரது பரிவாரத்தையும் வரவேற்பதற்கு ஏற்பாடுகள் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன என்பதில் ஒரு சராசரி இந்தியன் கண்ணுக்குப் படுகிற விஷயங்களையும் தாண்டி வேறுவிஷயங்களும் இருக்கின்றன.
வீடியோ 26 நிமிடம்
இந்த வருகையின் போது எந்த வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்பதில் இந்தியத்தரப்பின் மீது குறை சொல்ல முடியாது. அமெரிக்கத்தரப்பு விரும்புகிறபடி உடன்பாடு எட்டப்படாததால் அவர்களே வெளியேறிவிட்டார்கள். பாதுகாப்புத்துறைக்காக கொஞ்சம் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். அதுபோக ஒருசில அணு உலைகள் வாங்க அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்பதெல்லாம் ஊகங்களே! அப்படியானால் டொனால்ட் ட்ரம்ப் இத்தனை ஆர்வத்தோடு இந்திய சினிமாக்களைத் தொட்டு ட்வீட் செய்து, ஒரு 36 மணிநேர வருகைக்குத் தயாராவானேன்? இங்கே இந்தியர்கள் அமெரிக்காவை அமெரிக்க அதிபரை அண்ணாந்து பார்க்கிற மாதிரி. டொனால்ட் ட்ரம்பும் அமெரிக்க இந்தியர்களுடைய வாக்குகளை மனதில் வைத்துக்கொண்டே வருகிறார்! இத்தனைக்கும் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்புக்கான அப்ரூவல் ரேட்டிங் நாலில் ஒரு பங்கு மட்டுமே இருப்பதாக செய்தி. ட்ரம்ப் தலைமுடியும் சும்மா ஆடாது என்றிருக்க Khangress ஓவராகப் பொருமுவானேன்? இதுதானய்யா காங்கிரசு!
டில்லி ஷாஹீன் பாக் போராட்டத்தின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் நாடகமான Merchant of Venice இல் வருகிற ஷைலக் தனக்குச் சேரவேண்டிய pound of flesh நெஞ்சுக்கறிக்காக கெடுபிடி செய்கிற மாதிரியே! AAPக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தோம் இல்லையா? CAA /NRC /NPR இவைகளுக்கு எதிராக டில்லி சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாம்! வெறும் 500 இஸ்லாமியப்பெண்கள் கும்பலாகக் கூடி டில்லி ஜாபராபாத் மெட்ரோ ரயில் நிலையத்துக்குப் போகவிடாமல் ரகளை செய்ததில் மெட்ரோ ஸ்டேஷன் மூடப்பட்டதும் பயணிகள் அவதிக்கு உள்ளானதும்தான் மிச்சம்!
தா பாண்டியன்! வலது கம்யூனிஸ்ட் கட்சி எப்படி எல்லாம் சீரழிந்தது சீரழித்தது என்பதற்கு வாழும் உதாரணமாக இருப்பவர் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வது மிகவும் உத்தமம்! வீடியோ 38 நிமிடம்.
டிஸ்கி 1: இட்லி வடை பொங்கல்! #63 நேற்றே வெளியாகியிருக்க வேண்டியது! எழுதியதை பாதியில் மூடி விட்டேன். இன்று காலை, தலைப்பை மட்டும் அப்படியே வைத்து, இன்றைய செய்திகளை வைத்தே புதிதாக எழுதி வெளியிட்டாயிற்று.
இது இந்தப்பக்கங்களில் 1200வது பதிவு.
அம்மாடியோவ். 1200 ஆவது பதிவா. சபாஷ். வாழ்த்துகள். 1000 வருவதற்கு நாக்கு தள்ளி விட்டது. இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து எழுதினால் மட்டுமே 1000. வாழ்த்துகள். வாழ்த்துகள்.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Delete1200 என்பது வெறும் எண்ணிக்கை மட்டும்தான்! எத்தனை பதிவுகள் என் மனதுக்கு நெருக்கமாக இருந்தன, வாசித்தவருக்கு பிடித்தமானதாக இருந்தது எத்தனை முக்கியமாக யாருக்கேனும் உபயோகமாக இருந்ததா என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இந்தப்பதிவில் சொன்ன விஷயங்களின் மீது கருத்து சொல்லியிருந்தால் உண்மையிலேயே மகிழ்வேன்