சண்டேன்னா மூணு! இன்னும் சொல்ல வேண்டுமா......!


சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி கதையாக, சோனி(யா) காங்கிரஸ் தொட்டதெல்லாம் கெட்டுக் குட்டிச்சுவரான கதையாக ஆகிக் கொண்டிருக்கிறது! 2009 இல் தியாக சிகரம் அந்தோனியோ மைனோவின் பிறந்த நாள் பரிசாக தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்படும் என்று கண்டனூர் பானா சீனா அறிவித்தாலும் அறிவித்தார்! அதுவரை வெறும் தேர்தல் முழக்கமாகவும், தெலங்கானா ராஷ்டிரா சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் அரசியல் சந்தர்ப்பவாதமாகவும் இருந்த ஒன்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

ந்திராவின் இதரபகுதிகளில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், பானா சீனா தான் வாந்தி எடுத்ததைத் திரும்ப விழுங்க வேண்டியதாயிற்று! அதுவரை தேசீய பாதுகாப்பு ஆலோசகராகத் தனிக் கோலோச்சி வந்த எம்கே நாராயணன் தலையில் பழியைத் தூக்கிப் போட்டு விட்டு, பானா சீனா தப்பித்துக் கொண்டார். எம்கே நாராயணன், சர்வ வல்லமை இருந்த ஆலோசகர் பதவியில் இருந்து கழற்றிவிடப் பட்டதோடு, ரிடையர் ஆனா கிழடு கட்டைகளுக்கு ஒதுக்கப்படுகிற கவர்னர் பதவிக்குக் கீழிறக்கப்பட்டு மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டார்!

ரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தெலங்கானா பிரச்சினை ஒரு மாதிரியாக தள்ளிப்போடப்பார்த்தும், ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் என்று ஒரு கமிஷன் அமைத்து ஊற்றி மூடிவிட முயற்சி செய்தும், அடங்க மாட்டேன் என்று இப்போது பற்றி எரிகிறது. ஒருமாதமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கிறது., 


சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது தடைப்பட்டதில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மின்சார உற்பத்தி செய்வது குறைந்திருக்கிறது.சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

டந்த வாரம் வெள்ளிக் கிழமை முதல் ஆந்திர கவர்னர், முதல்வர்,
சிரஞ்சீவி மாதிரி கற்றுக் குட்டி அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரையும் காங்கிரஸ் கட்சியின் கோர் க்ரூப்பும், பிரதமர், அமைச்சர்கள், என்று வரிசையாகப் பேசிப்பார்த்தும் இன்னும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை!

முடிவு என்றால், காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் நிலை என்ற அர்த்தத்தில் மட்டுமே!முடிவெடுக்கத் தெரியாத துப்புக் கெட்டவர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, இந்த தேசம் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் கொடுமையை ஹிந்து நாளிதழில் திரு சுரேந்தர் வரைந்திருக்கும் இந்த கார்டூன் கொஞ்சம் நாசூக்காகவே சொல்கிறது!


****** 
பூனைக்கு ஒன்பது ஆயுசு என்று சொல்வார்களே! அது மாதிரி, நம்மூர் சால்வை அழகர் கண்டனூர்ப் பானா சீனாவும், இதுவரை சொதப்பிய போதெல்லாம் தப்பித்துக் கொண்டே வந்தார்!

ம்மிப் பீஸ் எத்தனை நாளைக்குத்தான் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்?


தற்கும் ஒரு முடிவு காலம் என்று உண்டல்லவா? வாய்க் கொழுப்பிற்கும் ஒரு முடிவு காலம் நெருங்கி வந்து விட்டதாகவே தோன்றுகிறது! துக்ளக் இதழின் இந்த அட்டைப்படக் கார்ட்டூன் சொல்கிற சேதி அதுவே!

******
 இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா என்ன!!

2 comments:

 1. திரு.கிருஷ்ணமூர்த்தி,

  இந்த வாரம் அரசியல் நிகழ்வுகளில் பரபரப்பான வாரமாயிருக்கலாம்.உங்கள் பதிவுகளை எதிர்பார்த்திருந்தேன்.வந்துவிட்டீர்கள். மிக்க நன்றி. இணைய இணைப்பு சரியாகிவிட்டதா?

  ReplyDelete
 2. திரு.பிரேம்ஜி!

  பி எஸ் என் எல் இணைய இணைப்பு அதன் எஜமானர்களைப் போலவே படு கேவலமாக இருக்கிறது. இன்னும் சரியாகவில்லை. ஊழியர்கள் அணுகுமுறையில் முன்பிருந்த கடுமை, முறுக்கு இப்போது காணாமல் போனாலும் கூட, சரியான தொழில்நுட்ப அறிவோ, பயிற்சியோ இல்லாமல் இருப்பது பெரும் குறை.

  இந்திய அரசியலில் மிகவும் செயற்கையான பரபரப்புக்களுக்குப் பஞ்சமே இல்லை.இந்த வாரமோ, அல்லது இந்த மாத இறுதிக்குள்ளாகவோ மிகப் பெரிய பரபரப்பு என்று எதுவும் நிகழ்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே தெரிகிறது.ஊடகங்கள் எதையாவது எடுத்துக் கொண்டு ஊதி ஊதிப் பெரிதாக்குகிற விஷயங்களை மட்டுமே இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!