Showing posts sorted by relevance for query red saree. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query red saree. Sort by date Show all posts

சண்டேன்னா மூணு! சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்!அப்புறம்....!




ஐ மு கூட்டணிக் கூட்டணிக் குழப்பங்களில், சாதனையாக எது இருந்ததோ இல்லையோ, கூட்டணிக் குழப்பத்தின் மெஜாரிட்டி பார்ட்னர் காங்கிரஸ் கட்சியை எவர் விரட்டுகிறார்கள், எப்படி மிரட்டுகிறார்கள் என்பதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதை நிச்சயமாகத் தொட்டுச் சொல்லலாம்! டம்மிப் பீஸ் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய ஆட்சியின் சாதனைப் பட்டியலில் இதையும் சேர்த்துச் சொல்லாவிட்டாலும், அத்தனை பேருக்கும் தெரிந்த ரகசியமாகத் தான் இது இருக்கிறது!

காங்கிரசை இப்போது ஒரு சிவப்புச் சேலையும் சேர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது!

சிவப்புச் சேலை என்றதும் மம்தா, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் வீரம் மிகுந்த பெண் என்று தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்! 


இந்த சிவப்புச் சேலை ஒரு புத்தகம்! சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை ( The Red Saree: When Life is The Price of Power)!

ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது.  ஏற்கெனெவே இந்தப் புத்தகம்  பிஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 


புத்தகத்தின் முகப்பிலேயே,  " dialogues, conversations and situations found therein are the product of the author's own interpretation and do not necessarily reflect authenticity." உரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. சோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.

நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல  யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட!  யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப்  புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி
இருக்கிறாராம்?

1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா,ராஜீவ் மற்றும் தன்  குழந்தைகளை  அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு  இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.

நேருவின் வீரப்பரம்பரை  வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத்  திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?

அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!

ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன்வைக்கும் கேள்வி இது தான்!

"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லியிருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லி
இருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி இருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"

சாதாரண  சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான்..கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?

காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்துக் காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!


இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லி இருக்கிறார், அதில்  மூன்று பொய்கள் என்ற பகுதியை  இங்கே பார்க்கலாம்!

******
  
கிட்டத் தட்ட இரண்டு மாதங்களாக, மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனியின் எண்ணெய்க் கிணறில் இருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச் சூழலை  நாசப் படுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை பதினொருபேர் இறந்திருப்பதாக, கடல் வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரம்பச் சேதமாகியிருப்பதாகவும் அதை பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி ஈடு செய்தே ஆகவேண்டும் என்று ஒரு வழியாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரக்கக் குரல் கொடுத்து விட்டார்! நாற்பத்தெட்டு மணி நேரக் கெடு வேறு விதித்தாயிற்று!

அமெரிக்க அதிபர் உரக்கக் குரல் கொடுக்கவில்லை என்று முந்தின வாரம் தான் அமெரிக்காவில் மனக்குறை பெரிதாக எழுந்தது. உரக்கக் கூவுவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்து விடுமா என்று அதிபரும் கேட்டுப் பார்த்தார். எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் குரல் எழுப்பியுமாயிற்று!


சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும் நிகழ்வுகளுக்குப் பிறகாவது இப்போதிருக்கும் சட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்று ஒபாமா பேசியிருக்கிறார். அங்கே அமெரிக்காவுக்கு  ஒன்று என்றால் எப்படிப் பேசுகிறார்கள்? இங்கே போபால் விஷவாயு விபத்து அப்புறம் அணு உலை விபத்து நட்ட ஈடு  மசோதா என்று வரும்போது எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

இந்திய அரசின் அமைச்சர்கள் நாட்டு மக்களுக்காகச் செயல்படுவதை விட இந்த மாதிரி பன்னாட்டுக் கொலைகாரர்களுக்குப் பரிந்து பேசுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்!
****** 

அமெரிக்க  ஒபாமா இருக்கட்டும், கண்டனூர்ப் பானா சீனா கிடக்கட்டும்! எவராக இருந்தால் தான் என்ன?

ஒரு சீரழிவு, தவறு என்று வருகிற பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் அதை எப்படிக் கையாள்கின்றன என்பதைக் கொஞ்சம்
அழுத்தமாக அதே நேரம் வேடிக்கையாகச் சொல்கிற இந்த வீடியோ இரண்டரை நிமிடங்கள் தான்!


உனக்கும் பெப்பே....உங்கப்பனுக்கும் பெப்பே! கொடுக்கிற பெட்டியை வாங்கிக் கொண்டு பேசாமல் போய்ச் சேர் என்கிற மாதிரி இல்லை?!





சண்டேன்னா மூணு! ராஜினாமா நாடகம் இரண்டு! ஓடமுயன்ற ராபர்ட்வாத்ரா!

2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் உடனடி விளைவாக சோனியா காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய காமெடி சீன்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன! படுதோல்விக்காக ராகுல் காண்டி ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் காரியகமிட்டி ஒருமனதாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் நேற்று அரங்கேறிய நாடகத்தை சுர்ஜீவாலா பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். 2014 இலும் கூட இதே மாதிரி ராகுல் ராஜினாமா செய்ய முன்வந்ததும், நிராகரிக்கப்பட்டதுமான காட்சி அரங்கேறியதே!

  
காங்கிரசிலிருந்து பிரிந்தாலும்  திரிணாமுல் காங்கிரஸ் என்றே பெயர் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வரும் மம்தா பானெர்ஜியும் கூட காங்கிரஸ் கட்சிமாதிரியே டிராமா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார் என்பது இந்தத் தேர்தலின் புதுசு கண்ணா புதுசு ரகம்!



முதல்வர் பதவி வேண்டாமாம்! கட்சித்தலைவர் பதவியே போதுமாம்! மம்தா   பானெர்ஜி ஆங்கிலத்திலேயே சொல்கிறார். 


மம்தா பானெர்ஜியின் ராஜினாமா நாடகத்தை பிஜேபி கேலிசெய்ததில் தவறிருப்பதாகத்  தெரியவில்லை. 

ஆக காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு பிராக்டிகல் அர்த்தமாக ட்ராமா பார்ட்டி என்பது மட்டும் தானென்று  இந்தத்தேர்தலில் தெளிவாக நிரூபணம் ஆகியிருக்கிறதே! நாடகங்களைக் கவனிக்கிறீர்களா? 


தோல்விக்கு சொந்தங்கள் இல்லை! மத்திய பிரதேச முதல்வர் பதவி தனக்கே கிடைக்குமென்று ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கொண்டிருந்தபோது கிழட்டுப் பெருச்சாளி கமல்நாத் இடையில் புகுந்து தட்டிப்பறித்துக் கொண்டார்! 2019 தோல்விகள் மறுபடியும் சிந்தியா தரப்பு கலகக் குரல் எழுப்ப வாய்ப்பளித்திருக்கிறது. ஆக கமல்நாத்தும் ராஜினாமா நாடகம் ஆடுகிறாரோ?    

இது இப்படியென்றால் சோனியாவுக்கு வாய்த்த மணியான மாப்பிள்ளை ராபர்ட் வாத்ரா மட்டும் கேணத்தனத்தில் குறைந்தவரா என்ன?


எக்சிட் கணிப்புகளில் காங்கிரஸ் பலத்த அடிவாங்குமென்ற செய்தி வந்ததுமே சோனியாவின் மணியான மாப்பிள்ளை தன் அரசியல் கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓட முயன்றாராம்! அதுவும் நீதிமன்ற அனுமதியுடன்!

இதேமாதிரி இந்திரா 1977 தேர்தலில் படுதோல்வி அடைந்தவுடன் இன்று தியாகசிகரமாகச் வர்ணிக்கப் படுகிற சோனியா G  புருஷன் ராஜீவ், குழந்தைகள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு இத்தாலியிலேயே குடியேற விரும்பினார் என்ற வீர சரித்திரம் சொல்லப்பட்டதால் சிவப்புச் சேலை: வாழ்க்கையே அதிகாரத்தின் விலை ( The Red Saree: When Life is The Price of Power)  என்ற புத்தகத்தையே இந்தியாவில் தடைசெய்தார்களே!

சண்டேன்னா மூணு! சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்!அப்புறம்....!  இங்கே முழுதாய்ப் படிக்கலாம். 


மீண்டும் சந்திப்போம். 

  

ஊழலில் புரளும் புள்ளிகள்! மிரளும் காங்கிரஸ்! கூட்டணி தர்மம்!


காங்கிரசைப் பற்றிப் பதிவெழுதாமல் ஒரு மாதமாவது இருக்க முடியுமா என்ற முந்தைய பதிவில் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் கேட்டிருக்கிறார்!

காங்கிரசுக்கு நெகடிவ் விளம்பரம் கூடக் கொடுக்கக் கூடாது தான்! ஆனால், இந்த தேசத்தைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிற நேரு பரம்பரைப் பிரபாவமாகக் காங்கிரஸ் இருக்கும்போது எப்படி அதைப் பற்றி எழுதாமல் இருக்கமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை.இங்கே வலைப் பதிவுகளில் எழுதுவதால் மட்டுமே, அதுவும் குறைந்த எண்ணிக்கையில் வாசகர்கள், பின்தொடர்பவர்கள் என்றிருக்கிற இந்த வலைப்பூவில் எழுதுவதால் என்ன ரிசல்ட் கிடைத்து விடப்போகிறது என்று கணக்குப் பார்த்துத் தான் எழுத வேண்டுமா என்ன!

இணையத்தில் கருத்தைப் பகிர்ந்துகொள்வதால் மிகப் பெரிய விளைவுகள் கிடைத்துவிடப்போகிறது என்று நம்பி எதையும் எழுதுவதில்லை. மனதில் சரி என்று படுகிற விஷயங்களை மட்டுமே இந்தப்பக்கங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சொல்லப்பட்டதில், நேர்மையற்றதாகவோ, தவறானதாகவோ எதுவும் இருந்தால், அதைத் திருத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் எனக்கு இருந்ததே இல்லை.

ஒரு கருத்துப் பரிமாற்றம், ஆரோக்கியமான விவாதம் நிகழ வேண்டும் என்பதற்காகவே, பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவுகளைப் படிக்க வரும் அத்தனை பேருமே தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதில்லை, அல்லது ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தவேண்டும் என்று முனைவதில்லை. தங்களுடைய மனதில் என்ன தோன்றுகிறது என்பதை, கூச்சமில்லாமல், பதிவில் பேசப்பட்ட விஷயங்களை விட்டு விலகாமல், பின்னூட்டங்களில் ஒரு ஆரோக்கியமான விவாதமாக, இந்தப்பக்கங்களில் நிகழவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை, முந்தைய பதிவுகள் சிலவற்றிலும் சொல்லியிருக்கிறேன்.

ஸ்ரீராம் உபயத்தில், அந்த வேண்டுகோள்  இப்போது மறுபடியும்! வேண்டுகோளை மீள்பதிவாக வெளியிடக் காரணமாக இருந்த காங்கிரசை மட்டும் மறந்து விடலாமா? அதற்காக, மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதற்காக..............



சிவப்புச் சேலை என்பது  ஒரு புத்தகம்!  

சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை! ( The Red Saree: When Life is The Price of Power)!

ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது.  


ஏற்கெனெவே இந்தப் புத்தகம்  பிரெஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 



புத்தகத்தின் முகப்பிலேயே,  " dialogues, conversations and situations found therein are the product of the author's own interpretation and do not necessarily reflect authenticity."  

உரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.  

சோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.

நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல  யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட!  யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப்  புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி
இருக்கிறாராம்?

1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா, ராஜீவ் மற்றும் தன்  குழந்தைகளை  அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு  இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.

நேருவின் வீரப்பரம்பரை  வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத்  திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?

அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!

ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன் வைக்கும் கேள்வி இது தான்!

"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லி
இருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லி இருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லி இருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி இருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"


சாதாரண  சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான். கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?

காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்து
காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!
இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லி இருக்கிறார், அதில்  மூன்று பொய்கள் என்ற பகுதியை
இங்கே பார்க்கலாம்!

சொந்தக் கதையே காற்றில் பறந்து கொண்டிருக்கும்போது ஆ! ராசா விவகாரம் வேறுஇளித்துக் கொண்டிருக்கிறது !இந்த லட்சணத்தில் "கூட்டணி தர்மம்" பற்றிய தம்பட்டம் வேறு!

அதெல்லாம் இருக்கட்டும்! சேலையைப் பற்றிப் புத்தகம் எழுதினால் மிரளுகிற நேருவின் வீரப்பரம்பரை விசுவாசிகள், எங்கே போய் ஒளிந்து கொள்கிறார்கள் என்பதை ஹிந்து நாளிதழில் நேற்று  சுரேந்திரா வரைந்த இந்தக் கேலிச் சித்திரம், இவர்களை இன்னமும் விட்டு வைத்திருக்கிற இந்தியப் பிரஜைகள் அத்தனைபேரையும் சேர்த்தே கேலி செய்வதாக இருப்பதை கவனித்தீர்களா?

என்ன செய்வதாக உத்தேசம்?!