காங்கிரசை இப்போது ஒரு சிவப்புச் சேலையும் சேர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது!
சிவப்புச் சேலை என்றதும் மம்தா, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் வீரம் மிகுந்த பெண் என்று தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்!
இந்த சிவப்புச் சேலை ஒரு புத்தகம்! சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை ( The Red Saree: When Life is The Price of Power)!
ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஏற்கெனெவே இந்தப் புத்தகம் பிஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட! யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.
காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப் புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி இருக்கிறாராம்?
1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா,ராஜீவ் மற்றும் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.
நேருவின் வீரப்பரம்பரை வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத் திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?
அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!
ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன்வைக்கும் கேள்வி இது தான்!
"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லியிருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லி இருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி இருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"

சாதாரண சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான்..கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?
காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்துக் காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!
இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லி இருக்கிறார், அதில் மூன்று பொய்கள் என்ற பகுதியை இங்கே பார்க்கலாம்!
******
கிட்டத் தட்ட இரண்டு மாதங்களாக, மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனியின் எண்ணெய்க் கிணறில் இருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச் சூழலை நாசப் படுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை பதினொருபேர் இறந்திருப்பதாக, கடல் வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரம்பச் சேதமாகியிருப்பதாகவும் அதை பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி ஈடு செய்தே ஆகவேண்டும் என்று ஒரு வழியாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரக்கக் குரல் கொடுத்து விட்டார்! நாற்பத்தெட்டு மணி நேரக் கெடு வேறு விதித்தாயிற்று!
அமெரிக்க அதிபர் உரக்கக் குரல் கொடுக்கவில்லை என்று முந்தின வாரம் தான் அமெரிக்காவில் மனக்குறை பெரிதாக எழுந்தது. உரக்கக் கூவுவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்து விடுமா என்று அதிபரும் கேட்டுப் பார்த்தார். எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் குரல் எழுப்பியுமாயிற்று!
சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும் நிகழ்வுகளுக்குப் பிறகாவது இப்போதிருக்கும் சட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்று ஒபாமா பேசியிருக்கிறார். அங்கே அமெரிக்காவுக்கு ஒன்று என்றால் எப்படிப் பேசுகிறார்கள்? இங்கே போபால் விஷவாயு விபத்து அப்புறம் அணு உலை விபத்து நட்ட ஈடு மசோதா என்று வரும்போது எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
இந்திய அரசின் அமைச்சர்கள் நாட்டு மக்களுக்காகச் செயல்படுவதை விட இந்த மாதிரி பன்னாட்டுக் கொலைகாரர்களுக்குப் பரிந்து பேசுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்!
அமெரிக்க அதிபர் உரக்கக் குரல் கொடுக்கவில்லை என்று முந்தின வாரம் தான் அமெரிக்காவில் மனக்குறை பெரிதாக எழுந்தது. உரக்கக் கூவுவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்து விடுமா என்று அதிபரும் கேட்டுப் பார்த்தார். எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் குரல் எழுப்பியுமாயிற்று!
இந்திய அரசின் அமைச்சர்கள் நாட்டு மக்களுக்காகச் செயல்படுவதை விட இந்த மாதிரி பன்னாட்டுக் கொலைகாரர்களுக்குப் பரிந்து பேசுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்!
******
அமெரிக்க ஒபாமா இருக்கட்டும், கண்டனூர்ப் பானா சீனா கிடக்கட்டும்! எவராக இருந்தால் தான் என்ன?
ஒரு சீரழிவு, தவறு என்று வருகிற பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் அதை எப்படிக் கையாள்கின்றன என்பதைக் கொஞ்சம் அழுத்தமாக அதே நேரம் வேடிக்கையாகச் சொல்கிற இந்த வீடியோ இரண்டரை நிமிடங்கள் தான்!
உனக்கும் பெப்பே....உங்கப்பனுக்கும் பெப்பே! கொடுக்கிற பெட்டியை வாங்கிக் கொண்டு பேசாமல் போய்ச் சேர் என்கிற மாதிரி இல்லை?!