#முன்களப்பிணியாளர்கள் இஷ்டப்படி மேய்க்கப்படுகிற மந்தைகளா நாம்?

"இன்றைய தேதிக்குத் தமிழில் இருக்கிற ஒரே இலக்கிய பத்திரிகை இந்து தமிழ் திசைதான். ஒரே இலக்கிய எழுத்தாளர் சமஸ்தான்!" அது சிறுபத்திரிகை இல்லையோ? "அதான் இலக்கிய பத்திரிகைனு சொல்லிட்டனே. தனியா வேற சொல்லணுமா. ஒரே வித்தியாசம் நிக்காம தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்குங்கறதுதான்!" இப்படி எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் சொன்னது கொஞ்சம் கூடப் பிசகில்லை! இந்து நாளிதழ் வெளியிடுகிற செய்தியின் தரம், சுறுசுறுப்புக்கு உதாரணமாக இந்த ஹாட்லீக்ஸ்! செய்தியில் அப்படி ஹாட்டாக ஒன்றுமே இல்லை என்பது ஒருபக்கம்! இமேஜ் பூஸ்டர் ரகம்தானே என்று கேட்டால் இதே விஷயம் ஒன் இந்தியா தளத்தில் சிலதினங்களுக்கு முன்பே வெளியானது என்பதுதான் விஷயம் தமிழ்நாடு அரசியல் விவகாரங்களில் என்னமாதிரிப் பேசுவது, என்ன கருத்தை வலியுறுத்துவது என்பதில் ஊடகங்களே தடுமாறுகிற அளவில்தான் இங்கே அரசியல் நடக்கிறது

உப்பின் ஞானத்தைக் கூட சமந்தா வந்துதான் சொல்ல வேண்டியிருக்கிற ஒரு தேசத்தில் ஜனங்களுக்கும் ஊடகங்களுக்கும் உப்பின் உபயோகத்தைப்பற்றி யார் வகுப்பெடுப்பது?  

முகநூலில் ஸ்டேன்லி ராஜன் 

கொரோனா காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளருக்கு 10 லட்சம் கொடுக்கப் படும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நடக்கும் கொடுமைகளில் மாபெரும் கொடுமை இதுதான், கொரொனாவினை விட கொடிய கொடுமை இது தமிழக பத்திரிகையாளர்கள் தனியார் ஊழியர்கள், ஒவ்வொரு மீடியாவும் தனியார் சொத்து , செய்தி ஊடகங்களின் முதலாளிகளின் பணியாளர்கள் அவர்கள்

அரசின் தூதர்ஷன் உள்ளிட்ட பணியாளர் செத்தால் அரசு கொடுக்கலாம், எவ்வளவும் கொடுக்கலாம் அது சரியானது. ஆனால் அரசியல் கட்சிகள் நடத்தும் மீடியாக்களின் அதாவது தனியார் ஊழியருக்கு எதற்கு அவ்வளவு நிதி என்பதுதான் தெரியவில்லை ஒவ்வொரு மீடியாவும் செல்வத்தில் கொழிக்கின்றன, பத்து லட்சம் என்பது அவர்கள் இருமணி நேரத்தில் சம்பாதிக்கும் பணம்.அதை அவர்கள் கொடுக்காமல் மக்கள் பணத்தில் ஏன் கொடுக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை.

உதாரணத்துக்கு பாருங்கள், சன்டிவியின் ஒரு நாள் வருமானம் கிட்டதட்ட 80 லட்சம் ஆனால் இனி சன்டிவி நிருபர் செத்தால் அரசு நிதிவழங்கும்.கலைஞர் டிவி ஒரே வருடத்தில் 200 கோடி சம்பாதித்த கட்சி என்பது ஸ்பெக்ட்ரம் வழக்கில் சொல்லபட்ட வாதம். இனி அந்த டிவிக்காரன் அதாவது ஸ்டாலினின் சொந்த டிவிக்காரன் செத்தால் முதல்வர் ஸ்டாலின் 10 லட்சம் வழங்குவார்.தன் கம்பெனி காசினை வணங்காமல் அரசு காசை எடுத்து தன் டிவியில் வேலை செய்தவனுக்கு வழங்குவார், எப்படிப் பட்ட அருமையான திட்டம்?

இப்படி ஒரு விசித்திரமான அரசியல் கொள்ளை, திட்டமிட்ட கபட நாடகம் பகிரங்கமாக நடத்தப் படுவதெல்லாம் தமிழகத்தில்தான் சாத்தியம்.

இது பத்திரிகையாளர்கள் மொக்கையாக பந்து வீச  செய்யபட்ட மேட்ச் பிக்ஸிங், பகிரங்கமான மேட்ச் பிக்ஸிங் அதாவது அவர் அவுட்டானாலும் சிக்ஸர் என கேமராவில் காட்ட வேண்டும் அதை மக்கள் நம்ப வேண்டும் என்ற ஏற்பாடு


பாசவலை திரைப்படத்துக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டைப் பாடியிருப்பவர் சி எஸ் ஜெயராமன்.

"குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்…
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்…
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்..."

பாடலும் பாடியவரும் பழசுதான். பட்டுக்கோட்டை  கல்யாண சுந்தரத்தின் வரிகள் இன்றைக்கும் சுளீர் சுளீரென்று உறைக்கிறதே! பாடல் வரிகள் முழுதையும் இங்கே பார்க்கலாம்,  

இதேபடத்தில் இன்னொரு பாடலும் கூட ஆட்டை வைத்துத்தான் கேட்கலாம்  ஊடகங்களைத் திருத்த முடியாது தான்! ஆனால் அவர்கள் திரித்துச் சொல்கிற அத்தனையையும் நம்பிவிட நாம் ஆட்டுமந்தைகளா என்ன? அல்லது வாத்துமடையர்களா? 
  
.மீண்டும் சந்திப்போம்  

4 comments:

 1. இந்தப் பாட்டை அவர்கள் எல்லோரும் கேட்டிருப்பார்களா.
  ஒருவர் போனால் அந்தக் கிளையை
  வைத்துப் பிழைக்க எத்தனையோ நிதிகள் இருக்கிறதே.
  இப்பொழுதுதானே ஆரம்பம்:(

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரம் ஏது அம்மா? சாம்ராஜ்யக்கனவுகள் இந்தமுறை வேறுவிதமாக விரிந்து கொண்டிருப்பதில் கிளைகளில் ஒட்டிக்கொண்டிருக்கிற ஒட்டுண்ணிகள் ஆட்டம் பலமாக இருக்கிறது. கிளைகளை முறிக்க இந்த ஒட்டுண்ணிகள் போதும்!

   Delete
 2. நீங்க பத்திரிகையாளர்கள் செத்தால் 10 லட்சம் வழங்கப்படுவதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கறீங்க. அது அவர்களுக்குக் கொடுக்கப்படும் லஞ்சம். அடுத்து ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் அரசு மாதம் 5 கோடி வழங்கும் என்று சொல்லிட்டு தங்கள் தொலைக்காட்சிக்கு பணத்தை நகர்த்திவிடுவாங்க. இப்போவே மாஸ்க் எப்படிப் போடுவது என்று அரசு சார்பில் ஏகப்பட்ட கோடிகளைச் செலவழிப்பது யார் கண்ணுக்கும் இதுவரை தெரியாதது ஆச்சர்யம்தான்

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத்தமிழன் சார்! என்னுடைய கண்ணோட்டத்தில் தவறு இருக்கிறதா??

   ஊடகங்களை வளைத்துப்போட்டு, அவர்கள் வழியாகவே ஜனங்களை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்திருப்பது தெரியாமலா இருக்கிறது? நீங்கள் சொன்னதை விட ஸ்டேன்லி ராஜன் சற்றுவிரிவாகவே கொதித்திருக்கிறார்.

   என்னுடைய கேள்வி ஜனங்களுக்கானது. நேரடியானது. இப்படி ஆளுக்காள் அவரவர் இஷ்டத்துக்கு மேய்ப்பதற்கு நாம் என்ன ஆட்டு மந்தைகளா? பட்டுக்கோட்டையார் வரிகளில் இரண்டுபாடல்களுக்கான இணைப்பு இருக்கிறது. இரண்டையும் கொஞ்சம் கேட்டுவிட்டு (குறிப்பாக இரண்டாவதை) அப்புறம் சொல்லுங்களேன்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!