அதிமுகவில் EPS - OPS இருவருக்கும் இடையில் நடந்து வரும் இழுபறி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் நீடித்ததில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்றத் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
நாளை 11 ஆம் தேதி சமஉக்கள் பதவியேற்கவிருக்கும் நிலையில் அதிமுகவில் இப்படி ஒரு இழுபறி தேவையே இல்லாதது. OPS கட்சிக்குள் தனது செல்வாக்கு என்ன என்பதை உணராமலேயே இதுவரை இருந்திருக்கிறார் என்பது விசித்திரம் ஆனால் உண்மை. தமிழக சட்டசபை வரலாற்றில் ஒரு முதல்வரும் இரண்டு முன்னாள் முதல்வர்களும் இருப்பது இது இரண்டாவது முறை. 2006 இல் கருணாநிதி முதல்வர், எதிர்வரிசையில் ஜெயலலிதா, OPS என இரு முன்னாள் முதல்வர்கள்! 2021 இல் இசுடாலின் முதல்வர், EPS - OPS என இரு முன்னாள் முதல்வர்கள் என்பது வெறும் தகவல் தான்! உபயோகம், சுவாரசியம் இருக்குமா என்பது உங்கள் சாய்ஸ்!
இன்றைய இந்து தமிழ்திசை நாளேட்டில் என்.மகேஷ் குமார் எழுதியிருக்கும் ஒரு செய்திக்கட்டுரை கொஞ்சம் வேடிக்கை,தகவல் பிழையுடன் இருக்கிறது. கருணாநிதி பூர்வீகம் ஆந்திரா என்பது எம்ஜியார் முதல்வராக இருந்த நாட்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாகவே நடந்தது என்பது வேடிக்கை. ஆந்திரா, தமிழகம் எல்லாம் ஒன்றாக இருந்த சமயத்தில் என ஆரம்பித்திருப்பது தகவல் பிழை. தமிழகத்தின் வட எல்லையாகத் திருவேங்கடம் என்றுதான் இருந்திருக்கிறதே தவிர ஆந்திராவும் தமிழகமும் ஒன்றாக இருந்ததே இல்லை.
உரையரங்கத்தை யார் நடத்துகிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்! திருக்கோவில் நடைமுறைகளுக்குத் தெளிவும் தீர்வும் சொல்ல இவர்கள் யார்?
http://srirangam.org/ கோவிலின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்ட pdf வடிவ அறிவிப்பு மேலே. ஜீயர்களை நியமிக்க இவர்கள் யார்?
இப்பொழுதும் கூட மாநிலத்தில் புதிய அரசு அமைந்து நான்கே நாட்கள் தான் ஆகிறது என்பதால் விமரிசனம் செய்வதைத் தவிர்க்கிறேன். மூன்றுமாதம் அல்லது 100 நாட்கள் என விமரிசிப்பதைத் தவிர்ப்பது கூட நானாக ஏற்படுத்திக்கொண்ட, சுய கட்டுப்பாடு மட்டும்தான்!
மீண்டும் சந்திப்போம்.
திருக்கோயில்களின் நடைமுறைகளைத் தீர்மானிப்பதற்குக் கூடியவர்கள் இவர்கள் மட்டும் தானா?.. மாற்றார்களுக்கு இடம் கொடுக்கலையா?..
ReplyDeleteஇது வெறும் முன்னோட்டமாக மட்டும் தான் தெரிகிறது. கருப்பர் கூட்டம் போல fringe elements பின்னால் வரும்போல இருக்கிறது செல்வராஜூ சார்!
Deleteஅழைத்தால் வந்திருப்பார்களே!..
ReplyDeleteஅறநிலையத்துறையில் ஏற்கெனெவே மாற்றாரும் நுழைந்துவிட்டார்கள்! இனிமேல் புதிதாக வேறு அழைக்க வேண்டுமா?
Deleteஇது ஆரம்பம்தான் என்றில்லாமல் மாறினால் சரி.
ReplyDeleteஇது வெறும் ஆர்வக்கோளாறு, முன்னோட்டத்துடன் நின்று விடுமென்றா நினைக்கிறீர்கள் ஸ்ரீராம்?
Deleteஎனக்கு அப்படித்தோன்றவில்லை.
எதிர்க்கட்சி தலைவராக ஈபிஎஸ் நல்ல தேர்வு- ஓ பி எஸ்ஸை விட என்று எனக்குத் தோன்றுகிறது.
ReplyDeleteஓ பி எஸ்ஸை விட EPS கட்சியை நிதானமாக வழிநடத்தக்கூடியவர் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது ஸ்ரீராம்!
Deleteஆனால் இரண்டு கழகங்களும் நம்முடைய அனுமானங்களையும் தாண்டி நெகடிவாகப் புதிய சாதனை படைக்கிற வரலாறு உள்ளவை.
எடப்பாடி நியாயமாக ஆட்டமேடிக்காக எதிர்கட்சித் தலைவராக வந்திருக்கணும். இத்தகைய நாடகங்கள் நடந்திருக்கக்கூடாது.
ReplyDelete"ஜீயர்" - ஒரு வேலையாக ஆக்கிவிட்டார்கள். இதை சம்ப்ரதாயத்தில் உள்ளவர்கள் மட்டும் செய்திருக்கணும், அறநிலையத்துறைக்கு அங்கு வேலை இல்லை என்பதே என் எண்ணம்.
OPS கடைசிவரை குடைச்சல் கொடுத்துவிட்டு, எதுவும் பலிக்காமல் தான் ஒதுங்கியதாக சொல்கிறார்கள். அதைவைத்தே அவர் திமுக பக்கம் தாவப்போவதாக வதந்திகளும் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. நீங்கள் சொல்கிற மாதிரி இதைத் தவிர்த்திருக்கலாம் தான்!
Deleteஜீயர் விஷயத்தில் வேண்டுமென்றே சீண்டிப்பார்க்கிற மாதிரித்தான் தோன்றுகிறது. என்ன நடக்கிறதென்பதை ஜூன் 8 ஆம் தேதிவரை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்!
முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் NOC, Police certificate கேட்பார்களோ?
ReplyDeleteTN சேஷன் என்கிற ஆண்மையுள்ள தேர்தல் ஆணையர் அதற்கு மேலும் சாதித்துக் காட்டினார்! வழக்கம்போல இந்திராகாந்தி ஒரே தேர்தல் ஆணையர் எதற்கு? மூன்றாக ஆக்கிப்பார்க்கலாமே என்று அதையும் நீர்த்துப்போகச் செய்தார் என்பது பழைய கதைதான்!
Deleteஏன் இன்னமும் இந்திரா காந்தி காலத்துச் சீரழிவை சரிசெய்யாமல் இன்னமும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது 99 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!